நமது வீடுகளிலுள்ள கணிணிகளையும் சரி அல்லது பெரிய கார்ப்பரேட்டுகளின் செர்வர்களையும் சரி நாம் என்றைக்குமே முழுசாய் பயன்படுத்தியதில்லை. பெரும்பாலான செர்வர் அநேகமாய் எப்போதுமே சும்மாய்தான் இருக்கின்றனவாம். அப்பப்போ வரும் ஒரு சில கோரிக்கைகளை நிறைவுசெய்வதோடு சரி. இப்படி கொள்ளைகணக்கில் கணிணிதிறன் அதனைச் சார்ந்து மின்சாரம் இடம் பணம் பராமரிப்புச் செலவு என அநேக ஐஸ்வர்யங்கள் விரயமாவதால் இன்றைக்கு "ஒரே கணிணியில் பல செர்வர்களையும்" ஓட வைக்கும் விர்சுவலைசேஷன் மற்றும் SAN தொழில்நுட்பங்கள் பிரபலம். நம் வீடுகளிலும் இதைக் கொண்டுவரலாமா? மிச்சம் பிடிக்கலாமா?
உங்களிடமுள்ளதோ ஒரே ஒரு கணிணி. அது ஒரு நல்ல லேட்டஸ்ட் கணிணி என வைத்துக்கொள்வோம் . ஆனால் அதில் விளையாட ஒரே நேரத்தில் மூன்று பொடிசுகளும் போட்டிபோட்டு சண்டையிடுகின்றனர். என்னப் பண்ணுவது?. ஒருவேளை உங்களுக்கு ஒரு கணிணியை பலரும் பயன்படுத்த உதவும் இந்த NComputing தொழில் நுட்பம் உதவலாம். இவர்கள் கொடுக்கும் "X300" என்ற டப்பாக்கள் வழி ஒரே கணிணியை மூன்று மானிட்டர்கள் மூன்று கீபோர்டுகள் வழி மூன்று பொடிசுகளும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வழி செய்யலாம்.என்ன ஒரு கணிணி வாங்கப் போனால் $500 செலவாகும் இந்த டப்பாக்கள் $73-க்கு கிடைக்கின்றது. ஆனால் ஒரு சின்ன கன்டிசன். எல்லா பயனர்களும் கொஞ்சம் பக்கம் பக்கத்தில் இருக்க வேண்டும்.
நம் ஊர் வீடுகள், பள்ளிகள், சிறு அலுவலகங்கள், பயிற்சி மையங்களுக்கு ஏற்ற சிக்கனமான ஒரு நல்ல தீர்வு. இந்தியாவில் இதற்கான சந்தை பிரகாசமாய் இருப்பதால் இங்கு NComputing டப்பாக்களை முழுவீச்சில் இறக்கிவிட்டிருக்கின்றார்கள். அடுத்தமுறை இதுமாதிரி ஒரு தீர்வு யாருக்காவது தேவைப்பட்டால் என்கம்யூட்டிங்கை அறிமுகப்படுத்திவிடுங்கள். புண்ணியமாய்ப் போகும்.
http://www.ncomputing.com
"காதலெனும் சோலையிலே" தமிழ் புதினம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Kaathalenum Cholayiley Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Download this post as PDF
3 comments:
Hello PKP Sir,
எனக்கு தமிழ் K J Yesudas Songs வேண்டும். ஏதாவது Link Or Website Address கொடுங்கள்..
Thanks..
Senthil,
Bangalore
நல்ல பயனுள்ள யோஜனையாக இருக்கே!!
நன்றி.
நல்ல தகவல். இந்த பதிவ பாத்ததுக்கப்புறம், இங்க விலை கேட்டோம். 10 பீஸஸ். Each one ncomputing access terminal costs Rs.8500 + 4% CST in Bangalore.
Post a Comment