உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, July 28, 2008

கண் இமைக்கும் நேரத்தில் களவு

கரன்சி நோட்டில் கைபடாமலேயே நம்மால் வாழ முடிகின்றது. என்ன வாரறுதியில் லாண்டரி மெசினில் போட மட்டும் சில குவாட்டர்களை தொடுகின்றோம். மற்றபடி அனைத்து லவ்கீகங்களுக்கும் கிரெடிட்கார்டு தான் பதில்.வங்கிச்சேமிப்பு கணக்குகளில் எண்கள் கொஞ்சம் ஏறினால் இரண்டு மடங்கு இறங்குகின்றன. அந்த எண்களில் தான் நம் நாட்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இன்றைக்கும் உலகில் இருக்கும் அத்தனை டாலர்களையும் காகிதமாக்க அமேசான் காடு கூட பத்தாது.நல்ல வேளையாய் சரியான வேளையில் சரியான தொழில்நுட்பங்கள் மனிதனுக்கு வாய்த்துவிடுகின்றது. பணவீக்கமாயினும் அதை சுமக்காமல் அட்டைவழி பிழைத்துப் போய்க் கொண்டிருக்கின்றான்.

இப்படி கடனட்டை நம் வாழ்க்கையை சிறிது எளிதாக்கியிருக்க அடுத்தமுறை உங்கள் கடனட்டையை பயன்படுத்தும் போது கொஞ்சம் உஷாராயிருங்கள் என்கின்றனர் மும்பை போலீசார். நீங்கள் உங்கள் கடனட்டையை அந்த டைகட்டின ஆசாமியிடம் கொடுத்துவிட்டு அரக்க பரக்க பார்த்துக்கொண்டிருக்க அந்த ஆசாமியோ பில் போடுவதோடு தன்னிடம் மறைத்து வைத்துள்ள தன் சொந்த Portable Magnetic Card Reader-ரிலும் ஒரு தேய்ப்பு தேய்த்து விடுகின்றான்.(படம்) அந்த ரீடர் கணப்பொழுதில் உங்கள் கிரெடிட்கார்டை படித்து அதிலுள்ள தகவல்களை மனப்பாடம் செய்துவைத்துக்கொள்ளும். இந்த ஆசாமி அத்தகவல்களை பின் வீட்டில் போய் தன் கணிணி வழி படித்து, அச்சு அசலாய் உங்கள் கிரெடிட் கார்டு போலவே இன்னொரு போலி கிரெடிட்கார்டை தயாரிக்கலாமாம். சந்தைகளில் பயன்படுத்தலாமாம். கதை எப்படி இருக்கு? இப்படி குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு மாட்டிக்கொண்ட ஒரு கணிணி இஞ்சினியர்கள் கும்பல் மும்பையில் சமீபத்தில் பிடிபட்டுள்ளதாக சொல்கின்றார்கள். கண்ணை மூடிக்கொண்ட பூனைபோல ரொம்ப பேரின் நினைப்பு இதுமாதிரி ஹாக்கிங் செய்தால் எளிதாய் தப்பித்திடலாம் மாட்டிக்கொள்ளமாட்டோம் என்பதாகும்.தவறு நண்பரே மிக மிகத் தவறு. சரியான புரிதல்வேண்டும். ஒருவேளை அதற்கு நீங்கள் ரஷ்யா போன்ற இரும்பு தேசத்தில் இருந்தால் சாத்தியமாகலாமாயிருக்கும்.

ஸோ ஷெரேட்டனோ பார்க் இன்னோ,வால்மார்ட்டோ மெக்டானல்சோ உங்கள் கடனட்டையை அடுத்தமுறை கடைக்காரரிடம் தேய்க்க கொடுக்கும் போது அந்த கார்டிலேயே ஒரு கண் இருக்கட்டும். கண் இமைக்கும் நேரத்தில் நீங்கள் களவாடப்படலாம்.ஜாக்கிரதை.

தகவலுக்கு நன்றி:M.Rishan Shareef

ஸ்ரீ ஸாயி ஸத் சரித்திரம் அல்லது ஸ்ரீ சீர்டி ஸாயிபாபாவின் அற்புத வாழ்க்கையும் உபதேசங்களும் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Shri Shirdi Sai Baba life history in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



3 comments:

Tech Shankar said...

என்ன கொடுமை பி.கே.பி சார் இது.
ஆனால் உங்களது உண்மையான அறிவுரை எல்லோரையும் சென்றடைந்தால் நல்லது.

நல்ல தெளிவான மன நிலையில் இருப்பவர்களுக்கு நீங்கள் சொன்னது சரியே.

ஆனால் ஃபுல் லோடு ஏற்றி, மப்பும் மந்தாரமமுமாக இருப்பவர் - தனது கிரெடிட் கார்டைக் கொடுத்து பணம் செலுத்துகிறாரே? அவரை நினைத்தால் எனக்குச் சிறிப்புத்தான் வருகிறது.

தென்றல்sankar said...

அம்மாடியோவ்! விட்டாக்கா காற்றில் கூட கரண்ட் எடுப்பார்கள் போல அதுக்குதாங்க புரட்சி தலைவர் பாடிட்டு போயிட்டாரு திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!!!

பிரேம்ஜி said...

நல்ல எச்சரிக்கை கொடுத்தீர்கள். நன்றி.
இந்த புதிய மென்பொருளை உபயோகித்து பார்த்தீர்களா?
http://premkg.blogspot.com/2008/07/kallout.html

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்