உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, July 21, 2008

சுட்டெரிக்கும் பட்ஜெட்

வீட்டை விட்டு வெளியேறவே தயக்கமாயிருக்கின்றது. சுட்டெரிக்கும் வெயில் ஒரு பக்கமென்றால் சாதாரணப் பொருட்களெனின் விலையேற்றம் இன்னொரு பக்கம் சாமானியர்களை பொசுக்கியெடுக்கின்றது. எகிறும் கச்சா எண்ணை விலை, பணவீக்கம், விலைவாசி உயர்வு, உலகமயமாக்கல் இப்படி பிண்ணிப் பிணைந்துகிடக்கும் பொருளாதார கேயாசின் மத்தியில், மத்தியையோ மாநிலத்தையோ பார்க்க பரிதாபமாய் தான் இருக்கின்றது. செலவுகூடக்கூட வரவு குறையக் குறைய பலருக்கும் மாத வரவுசெலவு சமன்பாடு முட்டுகின்றது. இதுவரை வாரம் 40 மணிநேரத்திற்கு சம்பளம் கொடுத்த கம்பெனிகள் சில இனிமேல் 35 மணிநேரம் தான் சம்பளம் கொடுப்போம் என்கின்றனராம். கோபால் சோகமாய் இருந்தான்.சூப்பர் ஹிட்டான Dark Knight-கூட பார்க்க வரவில்லை. மிச்சம் பிடிக்க போகின்றானாம். கேட்டால் சேமிப்பும் ஒருவித வருவாயே என லெட்சர் அடிப்பான். அமெரிக்க "சாப்ட்வேர் கோபால்கள்" இப்படி சிக்கலில் தான் இருக்கின்றனர். சந்தோசப்படுபவர்கள் படலாம். இந்திய கோபால்களும் இதில் விதிவிலக்கல்ல.

வீட்டு வரவு செலவு கணக்கை பராமரிக்க ஒரு நல்ல இலவச மென்பொருளை வழங்குங்களேன் என பலரும் பலமுறை கேட்டதால் இங்கு ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். இது ஆகக்கூடி ஒரு மென்பொருள்கூட அல்ல. இது ஒரு எக்செல் சீட். அருமையாக இருக்கின்றது. மாதா மாதம் உங்கள் வரவு செலவுகளை புள்ளிவிவரம் மற்றும் வரைபடங்களோடு உங்களுக்கு விளக்கிக் காட்டும்.எதில் அதிகம் செலவு செய்கின்றீர்கள், உங்கள் பட்ஜெட்டில் எங்கு ஓட்டை உள்ளது என இது அழகாக படம் பிடித்துக்காட்டும். மிக எளிய இந்த கோப்பு நிச்சயம் உங்களைக் கவரும்.

Download
Personal Budget Planner.xls (Right click and save)

அதையும் தாண்டி இல்லை, ஒரு மென்பொருள்தான் வேண்டும் என அடம்பிடிப்பீராயின் நம்ம ஊர் மதன் கனகவேலின் (Madhan Kanagavel, CodeLathe, LLC) இலவச ஓப்பன் சோர்ஸ் மென்பொருளான Money Manager EX-யை முயன்று பார்க்கலாம்.

Download
http://www.codelathe.com

ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் "ரத்தக்காட்டேறி" தமிழ் காமிக்ஸ் படக்கதை இங்கே சிறு மென் புத்தகமாக. James Bond Raththak Kaatteri Tamil Comics pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories8 comments:

KRICONS said...

The file Budget Planner.xls does not exist. என்று வருகிறது. சரி செய்யவும்

SSP said...

Personal Budget Planner.xls (Right click and save)... Intha link velai seyyavillai. Thayavu seithu sari seyyavum. Thanks

Iniyal said...

PKP unga links ellame error solluthu. Really useful article.

Iniyal.

Anonymous said...

Dear PKP,

I am not able to download "James Bond Raththak Kaatteri Tamil Comics pdf ebook Download. Right click and Save" and getting error like
Error in count on line 281.
./mydrive/Others/Useful Excel Sheets/Blood Group Diet.xls is already defined.

Muruganandam.N

thanjavurkaran said...

Dear Friend,

When trying to download the excel sheet i am getting the following error:

Error in count on line 281.
./mydrive/Others/Useful Excel Sheets/Blood Group Diet.xls is already defined.

Anonymous said...

link is not working!

மாயன் said...

PKP சார்,

உங்கள் பதிவுகளை கொஞ்ச நாட்களாய் படித்து வருகிறேன்... மிக்க பயனுள்ள விஷயங்களை பதிவிட்டு வருகிறீர்கள்...

உங்கள் பதிவுகள் பற்றி எனது பதிவில் எழுதியிருக்கிறேன்...
http://maayanpaarvai.blogspot.com/2008/07/pkp.html

உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்களும்... சேவைகளுக்கு நன்றிகளும்.........

வந்தியத்தேவன் said...

எனக்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் விக்ரம் நாவல் பிடிஎவ் வடிவில் தருவீர்களா?

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்