உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, July 15, 2008

போஸ்டர்கள்

பெண் குழந்தைகளுக்கென பிங்க் வண்ணத்தையும் ஆண் குழந்தைகளுக்கென நீல வண்ணத்தையும் இந்த சமுதாயம் குறித்துவைத்திருப்பது பரிமளா சொல்லித்தான் தெரியும். நல்ல வேளை ஷான் பிறந்தபோது Babiesrus-யிலிருந்து அவனுக்கு பரிசாக பிங்க் கலரிலிருந்த அந்த கிப்ட் செட்டை வாங்கிச் செல்லவில்லை. சிரியாய் சிரித்திருப்பார்கள். மோச உலகில் என்னவெல்லாம் தெரிந்திருக்கவேண்டியிருக்கிறது.

ஷானின் குட்டி அக்கா மென்காவின் அறை பிங்க் வண்ண வால்பேப்பர்களாலும், வண்ணத்துப் பூச்சிகளும் மலர்களும் நிறைந்த போஸ்டர்களாலும் நிரம்பியிருந்தது. ஆங்காங்கே அறையில் பார்பி பொம்மைகளும் கரடி பொம்மைகளும். ஒரு மேக் அப் மேஜையும் உண்டு. இப்போது புதிதாய் வந்திருக்கும் பொடியன் ஷானின் அறையும் போஸ்டர்களால் நிறைந்திருக்கிறது. ஆனால் பேஸ்பால், புட்பால், ஹாக்கி, யாங்கீஸ், மெட்ஸ், ரெட்சாக்ஸ் என நிறைந்திருக்கிறது. என்ன சொல்ல வருகின்றார்கள்?

நான் ஒரு டெக்கி.என் கியூபிலும் போஸ்டர்கள் ஒட்டிவைத்திருக்கிறேன். இதோ சில உதாரணங்கள்.

History of Programming languages Poster
Domain name system Poster
Windows Server 2008 Feature Components Poster
Tamilnadu Map
Anatomy of a Linux system Poster
Web Trend Map Poster
SQL2005 System Views Poster
Computer Languages Chart
Windows Server 2008 Active Directory Components Poster
dot NET35 Namespaces Poster
Linux Kernel Map
Web Services Standards Poster
Adobe Flex Posters
Country Chart
ccTLD_Country codes of the world
Perl6 Periodic Table of Operators
Http headers status Poster

இந்த வகையான பெரிய போஸ்டர்களை நீங்கள் எந்த பிரிண்டர் வைத்திருந்தாலும் எளிதாக அச்சு செய்யலாம். அதற்காக கீழ்கண்ட தீர்வுகள் உங்களுக்கு உதவும். இவை எந்த மாபெரும் போஸ்டரையும் பல A4 அளவு தாள்களாக அச்சுசெய்து தரும்.

இணையேற்றம் செய்து அச்சு செய்ய உதவும் தளங்கள்.
http://homokaasu.org/rasterbator
http://www.blockposters.com/default.aspx

பெரிய போஸ்டர்களை அச்சு செய்ய உதவும் மென்பொருள்.
http://posterazor.sourceforge.net

சில பிரிண்டர்கள் poster printing அல்லது tiled printing வசதி கொண்டிருக்கும். நன்கு உற்று பார்க்கவேண்டுமாக்கும். கூகிளின் Picasa-விலும் Make a Poster வசதியிருக்கின்றது. அதுவும் இதுமாதிரி பெரிய போஸ்டர்களை அழகாய் துண்டு துண்டாக்கி தரும்.

இப்படி பல வகையான போஸ்டர்கள் இங்கு இருக்கின்றன.
ஆனாலும் சிறுவயதில் சலூன்களில் பார்த்த அந்த வகையான போஸ்டர்கள் தான் மறக்க முடியாதவை.

வி.இ.லெனின் மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. V.I.Lenin On some peculiarities of the historical development of Marxism Marxia Varalaaru history in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



1 comment:

Anonymous said...

Good collection. Gr8!

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்