செல்போன் எனும் மொபைல் போன்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனவென புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.இந்த ஆண்டு மார்ச் கணக்கீடுபடி மொத்தம் 166 மில்லியன் இந்தியர்கள் மொபைல் போன் வைத்துள்ளனராம். இது கடந்த வருடத்தை விட 68 சதவீதம் அதிகம். இந்த எண்கள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டேயுள்ளன. மொபைல் போன்கள் இப்போதெல்லாம் வெறும் பேசுவதற்காக மட்டுமல்லாது பிற பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதால் இந்த ஜூரம் இன்னும் ஏறும்.
சமீபத்தில் ரிலையன்ஸ் "R World"-டோடு சன்டிவி சேர்ந்து மொபைல் போனில் சன் டிவி பார்க்கும் சூழல் உருவாகியுள்ளனர். ஏறத்தாழ சில கணங்களே தாமதமாய் லைவாய் சன் டிவி பார்க்கலாமாம்.5 நிமிடம் பார்க்க 15 ரூபாய்னு சொல்லியிருக்கிறார்கள்.இந்தியா முழுதுமாய் 30 மில்லியன் பேரும் தமிழகத்தில் மட்டும் 26 லட்சம் பேரும் ரிலையன்ஸ் சந்தாதாரர்கள். இவர்களில் 50 சதவீதம் பேர் சன்டிவி பார்க்கும் வசதியுள்ள செல்போன்கள் வைத்துள்ளார்களாம். மேலும் நிகழ்சிகளை இறக்கம் செய்து பார்க்கவும் வசதி செய்து தருகின்றார்களாம்.ஒரு இறக்கத்துக்கு 7 ரூபாய். :)
.com போல் .mobi எனும் ஒரு தனி டொமைன் பெயரே மொபைல் போன் பயன்பாட்டு வெப் சைட்டுகளுக்கென அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நோக்கியாவின் .மொபி வெப்தளத்தை இங்கே காணலாம்.
http://nokia.mobi/செல்போன் வழி இணையம் மேய்தலும் அதிகரித்து வருகின்றது.அதற்கு வசதியாக மைக்ரோசாப்ட் "டீப் பிஷ்" DeepFish என்று ஒரு புதுவகையான பிரவுசரோடு வந்திருக்கிறார்கள். இருக்கும் இணைய பக்கங்களை அப்படியே மினிபடுத்தி மொபைல் பதிப்பாக இது காட்டுமாம்.
http://labs.live.com/deepfish/
மைக்ரோசாப்ட் இப்போதெல்லாம் அழகாக பெயர் வைக்க கற்றிருக்கிறார்கள். SilverLight என்று இன்னொரு படைப்பும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களின் இந்த படைப்பு அடோபியின் பிளாஷுக்கு போட்டியாய் அமையுமோ என்று தோன்றுகிறது. புதுவகையான பிரவுசர் plugin ஆம் அது. http://www.microsoft.com/silverlight/asp/downloads.aspx
இங்கே ஒரு தளம் இந்தியாவில் செல்போனிலிருந்து யாராவது உங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் அந்த நம்பர் எவ்விடமிருந்து வந்தது எனக் காட்டுகின்றது.முதல் 5 நம்பர்களையும் உள்ளீடு செய்து தட்டி பாருங்கள்.
Got missed call? Find out who called and from where?
http://www.informationmadness.com/cms/index.php?option=com_content&task=view&id=40&Itemid=53
அப்படியே இருக்கிற வீடியோ துண்டுகளை 3gp எனப்படும் வகையாய் மாற்றி உங்கள் மொபைலில் கொண்டு திரிய இங்கே ஒரு Super மென்பொருள்.இறக்கம் செய்து முயன்று பார்க்கலாம்.
http://www.megaupload.com/?d=HOB6VOBO
பேச,SMS அனுப்ப,படம்,வீடியோ எடுக்க மற்றும் பறிமாற,FM,MP3 கேட்க,இணையம் மேய,டிவி பார்க்கவென போய்க்கொண்டேயிருக்கும் இது எங்கு போய் முடியுமோ?

No comments:
Post a Comment