உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, April 02, 2007

WWW-வின் தந்தை "டிம் லீ"யின் அடுத்த மூவ்


Father of HTML அல்லது Inventor of the World Wide Web என அழைக்கப்படுபவர் டிம் பெர்னெர்ஸ் லீ (Tim Berners-Lee).இணைய பக்கங்களை சொடுக்கி சொடுக்கி பக்கங்கள் பக்கங்களாக இன்று நாம் தாவ உதவும் வலையை நெய்யும் கலையை நமக்கு அளித்தவர் இவர்.லண்டனில் பிறந்து வளர்ந்த டிம் வழக்கம் போல அமெரிக்காவிற்க்கு சென்றுவிட்டார்.

www-வை உருவாக்கியதை ஏதோ மந்திரம் போல் சொல்கிறார் "I just had to take the hypertext idea and connect it to the TCP and DNS ideas and — ta-da! — the World Wide Web."இவ்வாறு உருவான இந்த அற்புத படைப்பு 1990-ல் உருபெற்றது.இன்று இவ்வலையில் சிக்காதோர் எவரும் இல்லை.

இதை அடுத்து அடுத்தகட்ட உயர்நுட்ப வலையை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார் Mr.TimBL. அதன் பெயர் Semantic Web-ஆம். ரொம்ப புத்திசாலித்தனமான வெப்பாக அது இருக்குமாம்.
அதாவது இன்றைய சூழலில் மிக கடினமான முறையில் இணைய தளங்களில் தகவல்களை தேடவேண்டியிருக்கின்றது. ஏனெனில் இன்றைய தளங்கள் அவ்வளவாய் புத்திசாலித்தனம் கொண்டிருக்கவில்லை. மனிதனின் உள்ளீடு அதிகம் தேவைப்படுகின்றது.

ஆனால் வருங்காலத்தில் அவை உதாரணமாய் Data-க்கு பதிலாய் Information-அறிவு கொண்டிருக்கும்.

அப்படினா...?
சும்மா நம்பர் நம்பராய் இருத்தல் Data .
எடுத்துக்காட்டு: 5000 3000 2000

அதையே பொருளோடு அர்த்தத்தோடு வழங்குதல் Information.
எடுத்துக்காட்டு: வரவு 5000 டாலர்கள் ;செலவு 3000 டாலர்கள்;லாபம் 2000 டாலர்கள்

இன்னும் ஒரு படி அதிகம் போய் விலாவாரியாய் வரிவரியாய் விளக்கினால் அது Knowledge.
எடுத்துக்காட்டு: மன்னாரன்சாப்ட் கம்பெனியின் சித்திரை மாத வரவு 5000 அமெரிக்க டாலர்கள் ; ஆனால் செலவு 3000 அமெரிக்க டாலர்களே; ஆகவே இக்கம்பெனி வெற்றிகரமாக லாபம் அமெரிக்க 2000 டாலர்கள் இம்மாதம் ஈட்டியது.

Semantic Web -க்கு எண்கள்,வார்த்தைகள் மட்டுமல்லாது அதன் அர்த்தங்களும் தெரியுமாம்.அதுதான் அடுத்த Web 3.0. அது நிஜமாகும் போது இன்றைய Search Engine ராஜா கூகிளுக்கு முடிவுகாலம் வருமாம்.ம்...ம்...பார்க்கலாம்.


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்