உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, April 05, 2007

நம்மூர் ராமரும் இணையத்துவ RSS-ம்


பெயர்போலல்லாது RSS (Really Simple Syndication) இன்னும் குழப்பமாகவே இருக்கின்றது பலருக்கும். தமிழில் "செய்தியோடை" என அறியப்படும் இந்த அரிய நுட்பவளர்ச்சி இணையத்தில் இன்று மிகப் பிரபலம். அதாவது என் http://pkp.blogspot.com/ -தளத்துக்கு வராமலேயே நீங்கள் இதில் வெளிவரும் பதிவுகளை ஒன்று கூட விடாமல் தவறாமல் படிக்கலாம். அதற்கு நீங்கள் Google Reader, Google Personalized Home போன்ற RSS Reader ஒன்றை பயன்படுத்த வேண்டும். இன்றைய பெரும்பாலான இணையதளங்களும், பிளாகுகளும் RSS தருவதால் அனைத்து செய்திகளையும் உங்களால் ஒரே பக்கத்தில் பார்வையிடமுடியும். படத்தில் கண்டபடி சிகப்புகலருகட்டம் இருந்தால் RSS தருகிறார்கள் என்று அர்த்தம். இன்றைய Browser-கள் தானாகவே RSS-யை கண்டுபிடித்தும் காட்டுகின்றது. இன்றுவரை என் வலைப்பூ Partial RSS வழங்கிவந்தது. அதாவது முதல் சிலவரிகள் மட்டுமே RSS Reader-ல் படிக்கமுடியும். மீதம் படிக்க http://pkp.blogspot.com/ தளத்துக்கு வரவேண்டும்.

Full RSS Feed வழங்க கேட்டு ஏற்கனவே அன்னியலோகம் வெங்கட்ரமணி அவர்கள் ஒரு சுற்றுமெயில் விட்டிருந்தார்கள். http://www.anniyalogam.com/அவர்களின் "Featured post from archive" hack என்னுடைய favourite. என் template-க்கு ஒத்துவராத்தால் அதை இட சண்டை போட்டு கொண்டிருக்கின்றேன். நம்மில் யார் RSS அதிகம் பயன்படுத்துகிறார்கள் என எண்ணி பெரிதுபடித்தாமல் விட்டுவிட்டேன். சமீபத்தில் மீண்டும் செந்தில்குமார் இந்த வசதியை கேட்டிருந்தார்.அதனால் Full RSS இன்று முதல் வழங்க முடிவெடுத்திருக்கின்றேன்.இன்னும் குழப்பமாய் இருந்தால் விடுங்கள்.இருக்கவே இருக்குது Email Subscribtion. :)

ஆமா அதென்ன ராமர் என்கின்றீர்களா... இந்த RSS புரட்சியை துவக்கிவைத்தவர் நம்ம ஊர் சென்னை IIT மாணவர் ஒருவர் என்றால் நம்பமுடிகின்றதா?.நம்பித்தான் ஆகவேண்டும். 1999-களிலேயே RDF Site Summary RSS 0.9 and 1.0 என்ற பெயரில் இந்த நுட்பத்தை முதன் முதலில் Netscape தளத்தில் அறிமுகப்படுத்திய பெருமை இராமநாதன்.வி.குகா-வையே சாரும்.( Ramanathan V. Guha). இவர் இன்று கூகிளில் பணிபுரிந்து வருகின்றார். யப்படா.... தலைப்பு இப்போது பொருத்தமான தலைப்புதான்.


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



1 comment:

Senthil said...

நன்றி, (குறை தீர்ந்துவிட்டது)

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்