இந்தியாவில் இண்டர்நெட் யுகம் 1995-ல் தொடங்கியதாக சொல்கின்றார்கள். அவ்வருடம் தான் டெல்லியிலுள்ள National Informatics Centre (NIC) எனும் மையம் C-Web வழி இணையத்தின் வலைச் சேவையை பயனர்களுக்கு அளித்தனராம். இன்று இந்தியாவில் 2.9 மில்லியன் பேர் இணைய இணைப்பு வைத்திருக்கிறார்கள். இணையத்தை பெரும்பாலானோர் Email மற்றும் Chat க்காக பயன்படுத்தினாலும் கணிசமானோர் அதாவது 32% பேர் தகவல் தேடபயன் படுத்துகிறார்கள் என்பது ஒரு மகிழ்சியான சேதி. பரீட்சை ரெசல்ட் பார்க்கவும் ரயில் டிக்கட் முன்பதிவு செய்யவும் இன்னொரு கூட்டம் இணையம் பக்கமாய் வருகின்றார்கள்.கொஞ்சம் கொஞ்சமாய் நம்மூரில் இணையச் சூடு பரவி பற்றிக்கொண்டிருக்கின்றது.இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அடுத்த ஆண்டு வரும் போது (இன்று 38 மில்லியன்) 50 மில்லியனாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.கூடவே ஈகாமெர்ஸ் Ecommerce எனப்படும் இணையம் வழி வர்த்தகமும் பெருகும் என நம்பலாம்.மொத்த இணையம் பயன்படுத்துவோரில் 37% பேர் சிறுநகர,குறுநகர வாசிகள் என்பது இன்னொரு ஆச்சர்யமான தகவல்.இந்திய இணையவாசிகளில் 50 சதவீதம் பேர் 18-லிருந்து 35 வயதுக்குட்பட்டவர்களாம்.39 சதவீதபேருக்கு இணையம் தெருமுனை "cyber cafe"-தான் கிடைக்கின்றது.நாளை பெரும்பாலானோர் கனவிலிருக்கும் அகலப்பட்டை எனப்படும் broadband மற்றும் 10000 ரூபாய் மலிவு கணிணிகள் வீதிக்கு வரும் போது ஓய்வெடுக்கும் வெப்செர்வர்கள் திணறப்போகின்றன.
Download this post as PDF
No comments:
Post a Comment