உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, June 04, 2008

கிரெடிட் கார்டு ரோபோ

பரிமளாவின் இந்தியப்பயணம் இப்படி ஒரு படுதோல்வியில் முடியும் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கோபாலுக்கு மட்டும் மகிழ்ச்சியே.இங்கே ஒரு சின்ன ப்ளாஷ் பேக். பரியின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது எங்களுக்கெல்லாம் தெரியும்.ஆனால் அதற்கான காரணம் யாருக்கும் தெரியாது.அவள் யாரிடமும் சொன்னதும் இல்லை.பரி இந்தக்கால சில பெண்டிரைப்போலவே ஒரு துடுதுடுப்பான வகை.எல்லாரிடமும் கல கல வென பேசுவாள்.இதில் ஆணெண்றும் பெண்ணென்றும் கிடையாது.அப்போதுதான் புதுசாய் அறிமுகமானவர்களிடம்கூட மட மட வெனப் பேசுவாள்.கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தால் நமக்கு இவள் ஒரு குழந்தையோவெனத் தோன்றும். அவள் அணியும் ஆடைகள் மட்டும் விழுந்துவிடுமோ பறந்துவிடுமோவென அச்சமூட்டும். அவளின் முதல் திருமணத் தோல்விக்கு இதில் ஒன்றுதான் காரணமா இல்லை நாமறியா வேறொன்றா தெரியாது.எனினும் சந்தேக நோய் எளிதாய் எந்த இல்லறத்தையும் கொன்றிடும் என நமக்கெல்லாம் தெரியுமன்றோ.

இது சமீபத்தில் நடந்தது.அந்த கேரளத்து ஆண்நண்பர் இணைய சாட்டிங்கின் மூலம் அறிமுகமாகியிருக்கின்றான். நன்றாகவே ஆன்லைனில் கொஞ்சநாள் பழகியிருக்கின்றார்கள். சில மாத அரட்டையில் இவளுக்கு தெரிந்தது அவர் கேரளாவில் இருக்கின்றார், 2 எஸ்டேட்கள், ஒரு பங்களா, சில கார்களுக்கு சொந்தக்காரர்,அவரும் இவளைப் போலவே முதல் திருமணத்தில் தோல்விகண்டவராம். இந்தியா போய் அவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டு திரும்ப வருவது தான் அவளின் நோக்கமாய் இருந்தது.

ஊர் வந்து பார்த்த பின்பு தான் தெரிந்தது அது ஒரு பிராடு பேர்வழி என்று.தப்பித்தோம்டா தம்பிரான் புண்ணியமென போன வேகத்திலேயே திரும்பிவந்து விட்டாள்.இப்போது அவள் still looking.

நேற்று பேசிக்கொண்டிருக்கும் போது அவள் கிரெடிட் கார்ட்டு பற்றிய பேச்சு வந்தது."பிகேபி, கேன் ஐ ஆஸ்க் யூ சம்திங். கிரெடிட் கார்ட்டின் பிராடு அலர்ட் சிஸ்டம் எப்படி வொர்க் ஆகுதுப்பா.ஆச்சரியமாய் இருக்குது.நான் இல்லாமல் வேறு யாராவது என் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் அதெப்படி அவர்கள் கண்டு பிடிக்கின்றார்கள்."

புத்திசாலித்தனமாக கேள்வி.சீரியசாகவே அவள் கேட்பது போலிருந்தது.

வழக்கமாக வியாக்கியானம் சொல்ல ஆரம்பித்தேன்.
"கிரெடிட் கார்டு கம்பெனிகளின் ரோபோக்கள் ரொம்ப ரொம்ப புத்திசாலித்தனமானவை. ரோபோ என்றதுமே கை கால் தலையுடன் கூடிய மனித எந்திரமென நினைத்து விடாதே. நான் சொல்லும் ரோபோ ஒரு மென்பொருள்.இடைவிடாது செர்வரில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு சாப்ட்வேர் சர்வீஸ். நீ கடனட்டை வாங்கின காலத்திலிருந்தே அதற்கு உன்னை நன்றாகத்தெரியும். நீ இந்த உலகின் எந்த பிராந்தியத்தில் வசிக்கின்றாய். எந்தெந்த மால்களுக்கு செல்கின்றாய். என்னென்ன வாங்குகிறாய்,எங்கெல்லாம் போகின்றாய்,அதிக பட்சம் எவ்வளவு நீ செலவு செய்வாய் இதெல்லாம் அதற்குத் தெரியும். ஆக உன் செலவு செய்யும் பழக்க வழக்கம் அதாவது உன் spending pattern அதற்கு நன்றாகவே தெரியும்.இதில் எதாவது ஒரு அப்நார்மல் அதாவது அசாதாரண சம்பவம் நடந்தால் உடனே அந்த ரோபோ குரல் கொடுக்கத் தொடங்கிவிடும். நீ நியூயார்க்கில் இருப்பது அந்த ரோபோவுக்குத் தெரியும். உன் கிரெடிட்கார்டு தகவல்கள் திருடுபோய் அது சீனாவில் ஒரு திருடனால் பயன்படுத்தப்பட்டால் ரோபோ உஷாராகிவிடும். அதுபோலத்தான் உன் வழக்கத்துக்கு மாறாக அதிகமாய் உன் கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டாலும் அய்யாள் கொடிதூக்கி அலர்ட் அனுப்பிவிடுவார். இப்படித்தான் உன் கிரெடிட்கார்டும் தானாகவே உஷார்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டுப்போயிருக்கும். இதெல்லாம் தாண்டி நாமும் ஒவ்வொரு மாதமும் கடனட்டை அறிக்கை வரும் போது வரி வரியாய் சரிபார்ப்பது நமக்கு நல்லது.அது போல உன் ஆன்லைன் கிரெடிட்கார்டு அக்கவுண்டில் கூட ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் மேல் பேலன்ஸ் போனால் அலெர்ட் அனுப்பவும் செட்டிங் செய்து வைத்திருப்பது நல்லது "என்றேன்.

ஆர்வமாய் கேட்டுக்கொண்டே இருந்தாள்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த கோபால் ஏதோ எனக்கு சொல்லும் சங்கேதமாக கனைத்தான். எனக்கு புரிந்தது.
கோபாலும் பரியும் நேகாவும் ஜெர்ஸிகார்டன்ஸ் மாலுக்கு கிளம்பினார்கள்.


அ.முத்துலிங்கம் கதைகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. A. Muthulingam Kathaigal in Tamil Stories pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்