உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, June 12, 2008

காற்றுள்ளபோதே

அருமையான மென்பொருள் அதுவும் இலவசமாய் இணையத்தில் கிடைப்பதை கண்டால் நான் உடனே அதை குறித்து வைப்பதுண்டு. ஆனால் சமீபகாலமாக இது மாதிரி நான் முன்பு எப்போதோ ஒருமுறை குறித்துவைத்த சில இலவச மென்பொருள்களை இறக்கம் செய்ய இப்போது போனால் காசுகேட்கின்றார்கள். அதாவது முதலில் வெள்ளோட்டமாக இலவசமாய் வழங்கப்படும் மென்பொருள்கள் சூப்பர் ஹிட் ஆனதை பார்த்ததும் சில நாட்களில் அதற்கு அதை தயாரித்தோர் விலைகுறித்து விடுகின்றார்கள். இதில் நாம் அவர்களை சொல்லியும் குற்றமில்லை. இன்றைக்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் போகின்ற போக்கைப்பார்த்தால் எதாவது ஒரு வழியில் தங்கள் உழைப்பை monetize பண்ணத்தான் எல்லோரும் பார்ப்பார்கள்.அதனால் இப்போதெல்லாம் ஏதாவது ஒரு கூல் மென்பொருள் இணைய உலா வரும்போது பார்வைக்கு வந்தால் உடனே இறக்கம் செய்து வைத்துக் கொள்கின்றேன். சோம்பலில் இன்னொருமுறை இறக்கம் செய்யலாமென்று விட்டு விட்டால் அப்போது அது இலவசமாய் கிடைக்குமா என்பதில் உத்திரவாதம் இல்லை. அந்த வகையில் சமீபத்தில் நான் விரும்பி இறக்கம் செய்த ஒரு மென்பொருள் Microsoft Access-ன் .mdb கோப்புகளின் கடவுசொல்லை மறந்து போனால் அதை மீட்டுத்தரும் ஒரு இலவச மென்பொருள்.அதன் பெயர் Database Password Sleuth. இது Microsoft Access 95/97/2000/2002 database-களின் password -களை ஒரே சொடுக்கில் உடைத்து தருகின்றது.

Product Home Page
http://www.shatterock.com/products/software/dbpwd/

Direct download link
http://www.shatterock.com/products/software/dbpwd/dbpwd.zip

உங்கள் குட்டிமென்பொருள்களின் கலெக்சனில் இதையும் வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தில் யாராவது பாஸ்வேர்ட் மறந்து போய் கண்ணைத் தள்ளிக் கொண்டிருந்தால் கொடுத்து உதவலாம். அதுபோல எக்ஸெல் கோப்பு ஒன்றின் பாஸ்வேர்ட்டை மறந்து போனால் இங்கே வாருங்கள். இன்னொரு இலவச மென்பொருள் அதற்காக இருக்கிறது. அது உதவலாம். இப்படி அடுத்தவர்களுக்கு ஒரு உதவி செய்து அதில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியால் நமக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கின்றதே. அதற்கு ஈடு இணை கிடையாதுங்க.

எட்ஹார் ஸ்னோ "ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்" எஸ்.சந்திரன் வழி இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. EdgardSnow Oru communistin uruvaakkam in Tamil pdf by S.Chandran ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



5 comments:

Jafar Safamarva said...

//இப்படி அடுத்தவர்களுக்கு ஒரு உதவி செய்து அதில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியால் நமக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கின்றதே. அதற்கு ஈடு இணை கிடையாதுங்க//

அதைத்தான் சொல்லில் மட்டும் இல்லாமல் செயலில் காட்டுகிறீர்களே! மிக்க நன்றி!!

thiruthiru said...

பிகேபி,

“ அடுத்தவர்களுக்கு ஒரு உதவி செய்து அதில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியால் நமக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கின்றதே. அதற்கு ஈடு இணை கிடையாதுங்க.“

சத்தியமான வார்த்தை.அதிலும் உங்களைப் போல் பல இளைஞர்கள் வலை வழியே முன்பின் தெரியாதவர் களுக்காக பல இலவச மென்பொருள் களை அறிமுகம் செய்கிறார்களே அவர்களுக்குக் கிடைப்பதுதான் உண்மையான ஆத்ம திருப்தி!

முருகபூபதி said...

அன்புள்ள நண்பரே,
எப்போதோ எழுதிய ஒரு வாக்கியத்தை நினைவில் வைத்து என்னையும் நினைவு கூர்ந்தது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. உங்களுக்கு தெரியுமோ..இல்லையோ... எனக்கு நேரமும் வாய்ப்பும் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் வலைப்பூவுக்கு வரத்தவறுவதில்லை. உங்கள் வலைப்பூவால் நான் அடைந்த பலன்கள் பல.

வெறும் புகழ்ச்சிக்கு இல்லாமல் சொல்கிறேன். உங்கள் வலைப்பூ மிகவும் வலிமையான, உபயோகமான பூ.

உங்களுக்கு நன்றி. என்றும் இந்தப்பூ பூத்துக்கொண்டே இருக்கட்டும்.

Thanga said...

இனிய பிகேபி,

இலவச மென்பொருட்களை வாரி
வழங்கி கணினி பாரி வள்ளல்
ஆகிவிட்டீர்கள் போங்கள்.

அன்புடன்

அதிரை தங்க செல்வராஜன்.

வடுவூர் குமார் said...

இது எல்லா சமயங்களிலும் உதவுவதில்லை.
நானும் சில சமயம் இந்த மாதிரி உதவப்போய் என்னை ஏதோ பெரிய "உடைப்பான்" என்று பயந்த சம்பவங்கள் அதற்கான சந்தேகக்கண்கள் என்று தேவையில்லாத பிரச்சனையுடன் உலா வர நேர்ந்தது.
உதாரணத்துக்கு, இன்றைக்கும் சிற்சில இடங்களில் மட்டுமே உபயோகத்தில் உள்ள Microstation என்ற மென்பொருளின் கோப்பை கொடுத்து அதை Autocad மூலம் திறக்கச்சொன்னார்கள்,முடியாது என்றவுடன் சந்தேகத்துடன் பார்த்தார்கள்.

கணினி அறிவு அவ்வளவாக இல்லாதவர்களுடன் வேலை செய்யும் போது என்னை மாதிரி "பராக்கிரமங்கள்" செய்ய முயற்சிக்காதீர்கள். :-))

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்