உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, November 21, 2007

பெருசு சொன்னது


ஜாதி, மத பேதங்களை கடந்து இந்திய அளவில் எனக்கு மிகப் பிடித்தமான மனிதர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள். உலக அளவில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

ஐன்ஸ்டீன் தன் மரணப்படுக்கையிலும் கடைசி நொடிவரை கணக்குகளாய் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார் என்பார்கள். அவர் மூளையை ஆராய ஆர்வம் கொண்ட Dr.Thomas Harvey ஐன்ஸ்டீனின் மரணத்துக்கு பின் திருட்டுத் தனமாய் அவர் மூளையை எடுத்து வைத்துக்கொண்டாராம். இன்றும் அது Princeton Hospital Pathology lab-ல் இருக்கின்றது.

ஐன்ஸ்டீனின் வார்த்தைகள் பொதுவாய் நகைச்சுவையும் அர்த்தமும் செறிந்ததாய் இருக்கும். இங்கே சில உதாரணங்கள். எளிய தமிழில்.

ஐன்ஸ்டீன் சொல்கிறார்.....

எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.

அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?

அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.

ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.

கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.

கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.

A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Z
அதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.

ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.

மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.

ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை. முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.

தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள் தாம்.

காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.

உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ்.

சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான். ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல.

கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.

நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான்.

சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும். ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.

உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான்.

கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.

வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.

உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதுவே வழிகாட்ட சிறந்த வழி.

நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.

நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.

எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே.

-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)


"ஆ..!" தமிழில் சுஜாதாவின் நவீனம் மென்புத்தகம் Aah..! Sujatha Tamil Novel e-book Download. Right
click and Save.http://static.scribd.com/docs/p2b8hm5gyn77.pdf இப்புத்தக இறக்கம் பற்றி தகவல் தந்த இனிய தமிழ்நெஞ்சத்துக்கு நன்றிகள் பல


Email PostDownload this post as PDF

Monday, November 19, 2007

விதியை மதியால்

என்னுள்ளில் "ஆகா நன்னாருக்கே"னு தோன்றும் செய்திகளையும், தகவல்களையும், கருத்துக்களையுமே மட்டுமே இங்கு அவ்வப்போது சொல்லிவருகின்றேன். இவற்றில் பெரும்பாலும் கணிணி, இணையம் மற்றும் அறிவியல் சார்ந்திருப்பதன் காரணம் அதிலுள்ள சிறு ஆர்வம் தான். தொழில்நுட்ப தகவல்களை தமிழில் எழுதுவதால் எஞ்சினியர்கள் அல்லாதோர்க்கும் இத்தகவல்கள் உபயோகமாயிருக்குமென நம்புவதால் இந்த விஷப் பரீட்சை.ஆனால் சமீபத்தில் அதிலும் மண் விழுந்தது. :) மரக்காணம் பாலாவிடம் சிறிது நேரம் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே நான் எழுதியிருந்த "போலிவெப்சைட்கள்" பதிவை பற்றி மேலும் அறிய விரும்பியிருந்தார். முழு பதிவை படித்தும் ஒன்றும் தனக்கு புரிந்தும் புரியாததும் போல் இருந்தது என்றாக இருந்தது அவர் Feedback.

ஆனால் ஸ்ரீகாந்த் போன்ற இணைய Hack-களை எடுத்து கூறும் நண்பர்களும் என் பிலாகு பக்கம் வருவது ஆச்சர்யமே. இவர் esinps.com-மிலிருந்து MP3-கோப்புகளை எப்படி இறக்கம் செய்வதுவென ஒரு டிப்பை கொடுத்து அசத்தியிருந்தார்.

Nonameboyinusa ஒரு படி மேலே போய் "ஏங்க பி.கே.பி இப்ப இந்த சைட் போலினு தெரியுது, இது மேல கம்ளைன்ட் பன்னினால் இந்த சைட் யாரு பேருல ரெஜிஸ்டர் பன்னிருக்காங்கனு தெரிம்ல...அந்த டீட்டெய்ல்ஸ் வைத்து அவர்கள் மேல் நடவடிக்க்கை எடுக்கமுடியும் தானே? அதே மாதிரி மெயின் ஐ.எஸ்.பி யிடம் சொல்லி அந்த சைட் பிளாக் பன்னமுடியும் தானே?" என கேட்டிருந்தார்.
இங்கே பாருங்கள்.
Law enforcement agencies say these kinds of Internet companies are able to thrive in countries where the rule of law is poorly established. "It is clear that organized cybercrime has taken root in countries that don't have response mechanisms, laws, infrastructure and investigative support set up to respond to the threat quickly," said Ronald K. Noble, secretary general of Interpol, an organization that facilitates transnational law enforcement cooperation. He declined to discuss the Russian Business Network specifically.Link

பல சாராரும் வருகின்றார்கள். புரிந்தாலும் புரியாவிட்டாலும் எனக்கு பிடித்ததை எழுத ஆசை. பார்க்கலாம். எதற்கும் ஒருமுறை இன்னும் தெளிவாய் எழுத முயன்று பார்க்கின்றேன். எப்போதுமே அதிகம் சோசியலாக பழக சிறிது பயம். தமிழ் இணைய உலகின் கருப்பு பக்கங்களையும் கண்டிருப்பதால்.

கொடுக்கப்படும் மென்புத்தகங்கள் அநேகருக்கு பிடிக்கிறது போல் தெரிகிறது. கார்த்திக் பிரபு "enakoru unmai solunga eppadi ellam e books pudikireenga ??"-னு கேட்டிருந்தார். எல்லாம் "கூகிள்"கே வெளிச்சம்.சில ஆடியோ புத்தகங்களுக்கும் சுட்டி கொடுத்துள்ளேன். பிரம்போடு யாராவது வந்தால் எல்லாம் பொட்டுனு போய்விடும். ஆனாலும் டிவி சீரியல் யுகத்தில் இன்னும் தமிழர்க்கு புத்தகங்கள் மேல் உள்ள ஆர்வம் வியப்பைத்தருகின்றது.

Tamilnenjam அவ்வப்போது சும்மா ஸ்பாமாயில்லாமல் பயனுள்ள சுட்டிகளை சொல்லி வருகின்றார்.

நண்பர் Ram PKP சார், எனக்கு ஒரு நல்ல லேப்டாப் பரிந்துரை செய்யுங்கள். பட்ஜெட் $1000 என கேட்டிருந்தார். தாங்க்ஸ்கிவிங் வந்திருக்கு. சொல்லித்தரவா வேணும். :)

Saravana Gopi video to 3gp converter free version கேட்டிருந்தார்.
இதோ http://www.megaupload.com/?d=HOB6VOBO

பலருக்கும் "இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!" பதிவு பிடித்திருந்ததாம்.
Amatuer Yogi கடைசியாய் கேட்டிருக்கின்றார்.
Hi pkp,
I don't understand the moral of the story. Can u expain it? Nothing happens as we wish. Is this the moral?
கொஞ்சம் யோசித்த பின்பாடு எனக்கு புரிந்தது இதுதான். விதியை மதியால் வென்றுகொண்டேயிருக்க முடியும். ஆனால் ரொம்ப நாளைக்கு அல்ல. கடவுள்னு யாரோ இருக்கின்றான். இல்லையா?!


"தமிழ் மருத்துவம்" தமிழில் மருத்துவ குறிப்புகள் மென்புத்தகம் Tamil Maruththuvam Health Medicine e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/7hvefr075xqmg.pdf


Email PostDownload this post as PDF

Friday, November 16, 2007

அப்லோட் அபாயங்கள்

இன்றைய தேதியில் இணையத்திலிருக்கும் இலவச கோப்புகிடங்குகளின் (Free File Storage) எண்ணிக்கை எண்ணற்றவை. உதாரணமாய் www.4shared.com, www.esnips.com போன்றவற்றை சொல்லலாம். 5 Gig வரைக்கும் இலவச ஸ்டோரேஜ் கொடுக்கின்றார்கள். நம் கணிணிகளில் வைத்திருப்பதை விட இவைகளில்
சேமித்து வைத்தால் டேட்டாவும் பாதுகாப்பாய் இருக்கும் கூடவே எங்கிருந்து வேண்டுமானாலும்
இணையம் வழி டேட்டாவை எடுத்துக் கொள்ளலாம் என்பது மிக வசதி.

ஆரம்பத்தில் MP3 மற்றும் இலசவமாய் ஆங்காங்கே கிடைத்த மென்பொருள்கள், மென்புத்தகங்கள், சினிமா கிளாமர் படங்கள், வீடியோ கிளிப்புகளை மட்டுமே சேமித்து வைத்து வந்த நம்மவர்கள்
இப்போது தங்கள் தனிப்பட்ட தகவல்களையும் சேமித்து வைப்பது கவலைக்குரியது. இவற்றில் தனிநபர் மற்றும் குடும்ப அங்கத்தினர்களின் பயோடேட்டாக்கள், சர்டிபிக்கேட் ஸ்கான் நகல்கள், முக்கிய வியாபார மற்றும் வேலை சம்பந்தபட்ட கோப்புகள், குடும்பமாய் எடுத்து கொண்ட போட்டோக்களும் அடுக்கம்.

இவற்றை ஒரே கிளிக்கில் இது போன்ற கோப்புகிடங்குகளில் அப்லோட் செய்துவிட்டு விடுவதால் இத்தகவல்கள் அனைத்தும் அனைவர் கைகளிலும் கிடைக்க வசதியாகிவிடுகின்றது. கேசுவலாய் எடுத்த சில குடும்ப பெண்கள் படங்கள் பொதுநபர் பார்வைக்கு போகின்றது. சிலர் அதை எடிட்டிங் செய்து தவறுதலாய் கூட பயன்படுத்தலாம். சிலர் தங்கள் பாஸ்வேர்ட்களை அழகாய் டைப்பி ஒரு டெக்ஸ்ட் கோப்பில் வைத்து அப்லோட் செய்து வைத்திருக்கின்றார்கள். என்ன கொடுமை பாருங்கள்.

அப்பாய்மெண்ட் ஆர்டர்களையும் ஏன் அமெரிக்க கான்சுலேட்டோடு ஒரு நபர் கொண்ட மொத்த தகவல் தொடர்புகளையும் கூட நான் தவறுதலாய் இக்கிடங்குகளில் காண நேரிட்டது. இத்தனைக்கும் இவர்களில் பலர் சாப்ட்வேர் இஞ்சினியர்கள்.

உதரணமாய் இங்கே கிளிக்கி பாருங்கள்.resume என்ற கீ வார்த்தை கொடுத்து தேடினால் esnips கொடுக்கும் லிஸ்ட் இது.
http://www.esnips.com/_t_/resume

இது லைம்வேர் (Limeware) போன்ற P2P மென்பொருள் வழி கோப்புகள் பறிமாற்றம் செய்பவர்களுக்கும் பொருந்தும்.இவர்கள் தெரியாத்தனமாய் தங்கள் கணிணியின் மொத்த டிரைவையுமே உலகுக்கு ஷேர் செய்திருக்க வாய்ப்புண்டு.

So தீர்வுதான் என்ன? இது போன்ற கோப்புகிடங்குகளில் சேமிக்கும் போது Private எனும் கட்டத்தை கண்டிப்பாய் டிக்குங்கள். Public கட்டம் திறந்தே இருக்கட்டும் அல்லது Do not share போன்ற வசதிகள் இருக்கிறதாவென பாருங்கள். இப்படி பட்ட வசதிகள் இல்லாவிட்டால் அக்கிடங்குகளுக்கு முழுக்கு போடுதல் நலம்.

Peer 2 Peer-அப்ளிகேசன்களிலும் எந்த டிரைவ் அல்லது எந்த ஃபோல்டர் வெளிஉலகுக்கு திறந்திருக்கிறதுவென கட்டாயமாய் தெரிந்திருத்தல் நல்லது. Anyway Have a Happy File sharing!!


"புதிய ஏற்பாடு" தமிழ் வேதாமம் ஆடியோ புத்தகம் MP3 வடிவில். Tamil Bible New Testment MP3 Audio Book
Click here to download.


Email PostDownload this post as PDF

Wednesday, November 14, 2007

தங்கத்தை நம்பி

பங்கு சந்தைகள் தோன்றி மியூச்சுவல் பண்ட்கள் தோன்றா காலத்தே முன் தோன்றிய முதலீட்டு முறை நம் ஊரில் தங்கத்தில் முதலீடு செய்யும் முறை. நம் பாரம்பரியத்தில் ஊறிப்போன "பண்டிகைக்கு தங்கம் வாங்குதல்" பழக்கம் அக்காலமிருந்தே குடும்பத்தில் சேமிப்புக்கு வழிகோலிவிட்டது. அதனாலேயே "மண்ணிலும் பொன்னிலும் போட்ட காசு வீணாகாது" என சொல்லித் தந்தர்.

இன்றைக்கும் தங்கத்தில் முதலீடு செய்தல் ஒரு பாதுகாப்பான முதலீடு முறையாக கருதப்படுகின்றது. பொருளாதார நிகழ்வுகள் காகித பணமெல்லாம் வெறும் வெத்துவேட்டுத்தான் என அடிக்கடி நினைவூட்டுகின்றன. அநியாயத்துக்கு கரன்சிநோட்டுகளை அச்சடித்து தள்ளுவதால் இந்த அபாயம் இனியும் தொடரவே செய்யும்.ஆக Paper money is fraud என்கின்றார்கள். அமெரிக்காவிடம் இப்போதைக்கு இருக்கும் தங்கஇருப்பின் அளவு 261மில்லியன் அவுன்ஸ்கள். ஆனால் அது உலவ விட்டிருக்கும் பேப்பர் பண அளவோ $12 trillion டாலர்கள். அதாவது தங்கம் அவுன்ஸ் ஒன்றின் மதிப்பு $45,977. வாவ்!!!

கடந்த சில வருடங்களில் தங்கத்தில் மதிப்பு ஏறக்குறைய இரட்டிப்பாய் உயர்ந்திருக்கின்றது. ஆனால் ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு சந்தை வழி பணம் பண்ணி ருசி கண்டோர்க்கு இது சரியான முதலீட்டு வழியாய் படாது தான். ஆனாலும் கரன்சியாய் வைத்திருப்பதற்கு இது தேவலாம்.

இப்போதெல்லாம் தங்கத்தை கட்டியாய் பீரோவில் வைத்திருக்க வேண்டியதில்லையே. ஈகோல்டுகாரர்கள் (e-gold) அதை உங்களுக்காக டிஜிட்டலாய் வைத்திருக்க தயாராய் இருக்கின்றார்கள். நீங்கள் Gold-ஐ egold-ஆய் வாங்கி அக்கவுண்டில் வைத்திருக்கலாம். இன்றைய விலைக்கு வாங்கி அப்புறமாய் நாளைய விலைக்கு விற்கலாம். அவர்கள் அந்த ஈதங்கத்தை நிஜதங்கமாய் வைப்பு வைக்கின்றார்கள். இந்த ஏப்ரலில் மட்டும் இப்படியாய் அவர்களிடம் பலரின் தங்கங்கள் 3,492 கிலோவாய் இருப்பு இருக்கின்றதாம். ஈகோல்டில் நுழையுமுன் உங்களுக்கு இது சரிப்பட்டு வருமாவென சிறிது ஆய்வு செயல் நலம்.
http://www.e-gold.com/


"அர்த்தமுள்ள இந்து மதம்" தமிழ் ஆடியோ புத்தகம் கவிஞர் கண்ணதாசன் குரலில். Kavijar Kannadasan Arthamulla Hindu Matham Tamil MP3 Audio Book
Click here to download.


Email PostDownload this post as PDF

Tuesday, November 13, 2007

இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!

நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ?

இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.

அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் ! என்னைக் காப்பாற்று ! என்று கண்ணீர்விடுகிறது.

முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்... சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையே... இது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க... அதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை ! என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் - முதலை சொல்வது மாதிரி... இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ? அதற்குப் பறவைகள், எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்... ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன... அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான் !

ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்...

நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! என்றது கழுதை.

சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். இல்லை ! முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ! முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல... முதலைக்குக் கோபம் வந்து விட்டது. சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ஊஹூம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல்.

பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே ! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவுபடுத்த... முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ! ஓடிவிடு ! என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான்.

முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது ! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது - புரிந்ததா... இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை !

சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர... அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி... சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.

வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது ! என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.
..............
.......
....
..

இப்படியாய் போகின்றது சுவாமி சுகபோதானந்தாவின் (Swami Sukhabodhananda) "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" புத்தகம். இப்புத்தகம் இப்போது ஆடியோ வடிவிலும் (MP3) கிடைப்பது மிக அருமை. நிழல்கள் ரவி தன் சொந்த குரலில் இந்த புத்தகத்தை ஒலி வடிவாக்கியிருக்கின்றார்.

Download Manase Relax Please Audio Book in MP3 Format here

http://www.megaupload.com/?d=XRKHAQ5S


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்