பங்கு சந்தைகள் தோன்றி மியூச்சுவல் பண்ட்கள் தோன்றா காலத்தே முன் தோன்றிய முதலீட்டு முறை நம் ஊரில் தங்கத்தில் முதலீடு செய்யும் முறை. நம் பாரம்பரியத்தில் ஊறிப்போன "பண்டிகைக்கு தங்கம் வாங்குதல்" பழக்கம் அக்காலமிருந்தே குடும்பத்தில் சேமிப்புக்கு வழிகோலிவிட்டது. அதனாலேயே "மண்ணிலும் பொன்னிலும் போட்ட காசு வீணாகாது" என சொல்லித் தந்தர்.
இன்றைக்கும் தங்கத்தில் முதலீடு செய்தல் ஒரு பாதுகாப்பான முதலீடு முறையாக கருதப்படுகின்றது. பொருளாதார நிகழ்வுகள் காகித பணமெல்லாம் வெறும் வெத்துவேட்டுத்தான் என அடிக்கடி நினைவூட்டுகின்றன. அநியாயத்துக்கு கரன்சிநோட்டுகளை அச்சடித்து தள்ளுவதால் இந்த அபாயம் இனியும் தொடரவே செய்யும்.ஆக Paper money is fraud என்கின்றார்கள். அமெரிக்காவிடம் இப்போதைக்கு இருக்கும் தங்கஇருப்பின் அளவு 261மில்லியன் அவுன்ஸ்கள். ஆனால் அது உலவ விட்டிருக்கும் பேப்பர் பண அளவோ $12 trillion டாலர்கள். அதாவது தங்கம் அவுன்ஸ் ஒன்றின் மதிப்பு $45,977. வாவ்!!!
கடந்த சில வருடங்களில் தங்கத்தில் மதிப்பு ஏறக்குறைய இரட்டிப்பாய் உயர்ந்திருக்கின்றது. ஆனால் ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு சந்தை வழி பணம் பண்ணி ருசி கண்டோர்க்கு இது சரியான முதலீட்டு வழியாய் படாது தான். ஆனாலும் கரன்சியாய் வைத்திருப்பதற்கு இது தேவலாம்.
இப்போதெல்லாம் தங்கத்தை கட்டியாய் பீரோவில் வைத்திருக்க வேண்டியதில்லையே. ஈகோல்டுகாரர்கள் (e-gold) அதை உங்களுக்காக டிஜிட்டலாய் வைத்திருக்க தயாராய் இருக்கின்றார்கள். நீங்கள் Gold-ஐ egold-ஆய் வாங்கி அக்கவுண்டில் வைத்திருக்கலாம். இன்றைய விலைக்கு வாங்கி அப்புறமாய் நாளைய விலைக்கு விற்கலாம். அவர்கள் அந்த ஈதங்கத்தை நிஜதங்கமாய் வைப்பு வைக்கின்றார்கள். இந்த ஏப்ரலில் மட்டும் இப்படியாய் அவர்களிடம் பலரின் தங்கங்கள் 3,492 கிலோவாய் இருப்பு இருக்கின்றதாம். ஈகோல்டில் நுழையுமுன் உங்களுக்கு இது சரிப்பட்டு வருமாவென சிறிது ஆய்வு செயல் நலம்.
http://www.e-gold.com/
"அர்த்தமுள்ள இந்து மதம்" தமிழ் ஆடியோ புத்தகம் கவிஞர் கண்ணதாசன் குரலில். Kavijar Kannadasan Arthamulla Hindu Matham Tamil MP3 Audio Book
Click here to download.
Download this post as PDF
3 comments:
Dear friend
Kannadasan in ARTTHAMULLA HINDUMADAM MP3 Not Working LINKS
PLS SOLVED
ANY ALTERNATIVE LINK
YOUR VERY SUPER WORK IN EBOOKS
pls alternateive link
உங்களின் ஒலிப்புத்தகங்கள், பிடிஎப் தொகுப்புகள் அருமை. ஆனால் முடுக்கிச் சீரிப்பாயும் இணையிறக்க வசதி அதில் இல்லாதது ஒரு குறைதான். டிஏபி (ஆக்சிலரேட்டெடு டவுன்லோடு ) வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.
http://maheshwaran.com/
மேலும் உங்கள் பார்வைக்கு விருந்தாக ஒரு இணையத்தளத்தின் சுட்டியைத் தருகிறேன். இதில் எஸ்.வி. சேகர் மற்றும் - கிரேசி மோகன் இவர்களின் ஒலி நாடகங்கள் நிறைய உள்ளன.
http://maheshwaran.com/
Post a Comment