Globalization அதாவது உலகமயமாக்கலின் தாக்கம் இன்று எல்லாராலுமே உணரப்படுகின்றது. வால்ஸ்டிரீட்டின் நெளிவு சுழிவுகள் உலக பங்குசந்தைகளில் எதிரொலிக்கின்றன. ஈரானில் போர் மேகம் சூழ்ந்தால் சீனாவில் பெட்ரோல் விலை ஏறுகின்றது. அமெரிக்காவில் Day Light Saving Time மாற்றப்பட்டால் சென்னையில் கால் சென்டரில் வேலை செய்யும் மனோஜ் சீக்கிரமாக வேலைக்கு போக வேண்டியுள்ளது. இப்படி வீடுவரை குடிவந்துள்ள உலகமயமாக்கல் பாதி கிணறே தாண்டியுள்ளதால் தாம் இன்றைய உலக எக்கானமி தடுமாறுகின்றது என்கின்றது ஒரு ஆய்வு. அதாவது இன்று Economic imbalance, Economic instability பிரபலமான வார்த்தைகள்.
இதற்க்கெல்லாம் தீர்வு அரைவேக்காட்டு தனமாய் உள்ள உலகமயமாக்கலை முழுதாக்க வேண்டுமாம். அதாவது ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து யூரோ எனும் கரன்சி கொண்டு வந்துள்ளார்கள். அரபு நாடுகளும் இது போன்ற ஒரு பொது கரன்சிக்கு தயாராகின்றார்கள். ஏன் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் உட்பட சில நாடுகள் சேர்ந்து பொது கரன்சி உருவாக்கவும் திட்டம் போட்டுள்ளன. அமெரிக்காவும் கனடாவும் மெக்ஸிகோவும் இணைந்து North American Union- என "The Late Great U.S.A" உருவாக்கி அதில் பொது கரன்சி உலவ விட திட்டங்கள் உள்ளன.
இந்த போட்டிகளையெல்லாம் விட்டு விட்டு பேசாமல் உலக அளவில் ஒரு பொது கரன்சி உருவாக்கி, அதற்கொரு உலக ரெசர்வ் பாங்க் உருவாக்கினால் பெரும்பாலான தலைவலிகள் தீரும் என்கின்றார்கள் பெரும்பாலானோர். இதைத்தான் Single Global Currency.org-ம் வலியுறுத்துகின்றார்கள். 2025-க்குள் உலக அளவில் ஒரு பொது கரன்சி கொண்டு வருவது தான் இவர்கள் நோக்கம். பலரின் விருப்பமும் அதுதான்.முன்னாள் U.S Federal Reserver Chair Paul Volcker இவ்வாறாக கூறினார் "A global economy requires a global currency."
உலக பொது கரன்சியானால் உலகில் அனைவருக்கும் சம்பளம் ஒரே கரன்சியில் வழங்கப்படுவதால் ஏற்றத்தாழ்வுகள் வெகுவாக குறையும். பெரும்பாலான பொருளாதார குளறுபடிகள் சரியாகும் என நம்புகின்றார்கள்.
அப்படியே உலக அளவில் ஒரு பார்லிமெண்ட் அமைத்து உலகளாவிய அரசு ஒன்றும் ஆட்சி செய்தால் பிரச்சனையே இருக்காது போங்க.
"முல்லாவின் கதைகள்" தமிழில் மென்புத்தகம் Mulla Stories In Tamil ebook Download. Right click and Save.http://static.scribd.com/docs/8qmttjfktf5so.pdf
நன்றி தமிழ்நெஞ்சம்
Download this post as PDF
6 comments:
Very intresting past....
The last line .... very good
அப்படியே உலக அளவில் ஒரு பார்லிமெண்ட் அமைத்து உலகளாவிய அரசு ஒன்றும் ஆட்சி செய்தால் பிரச்சனையே இருக்காது போங்க.
சுகிசிவம் அவர்களின் 'வெற்றி நிச்சயம்' - தமிழ் மென்னூல் இங்கே இரண்டு பகுதிகளாக உள்ளன. உங்களுக்காகவே...
http://www.esnips.com/doc/aa190edf-ea18-40dd-89a6-9db242461bc4/VETTRI1
http://www.esnips.com/doc/e6eff9e7-d25c-4eb9-8daf-06e7f92feda8/vettri2
John Gray - Men Are From Mars Women
ஜான் கிரே எழுதிய 'மென் ஆர் ப்ரம் மார்ஸ் - விமன் ஆர் ப்ரம் வீனசு'
http://www.esnips.com/doc/ec53a6af-9269-40f9-a129-0ecbb4ce8732/John-Gray---Men-Are-From-Mars-Women-Are-From-Venus
is here only
என்னுடைய கருத்து - இது உருப்படுவதற்கான வழியில்லை!
//அப்படியே உலக அளவில் ஒரு பார்லிமெண்ட் அமைத்து உலகளாவிய அரசு ஒன்றும் ஆட்சி செய்தால் பிரச்சனையே இருக்காது போங்க.//
கேபி ஸார் இது ரொம்ப ஓவரா தெரியல.
உலக அளவு பார்லிமென்ட் வேணும்னாக்க..கருணாநிதி, கனிமொழி, ஸ்டாலின் மற்றும் அழ்கிரிக்கு இன்னா போஸ்ட் குடுப்பீங்க ?
அப்புறம் எங்க மைசூர் மசாலா தோசை தலையன்..தேவ கவுடா குடும்பத்துக்கு ??
--- சிந்தனை நன்றாக உள்ளது...நடைமுறையில் சாத்தியமே இல்லை...அதுவும் நம் நாட்டு அரசியல் வாதிகளை எண்ணினால்...----
Post a Comment