ஜாதி, மத பேதங்களை கடந்து இந்திய அளவில் எனக்கு மிகப் பிடித்தமான மனிதர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள். உலக அளவில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
ஐன்ஸ்டீன் தன் மரணப்படுக்கையிலும் கடைசி நொடிவரை கணக்குகளாய் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார் என்பார்கள். அவர் மூளையை ஆராய ஆர்வம் கொண்ட Dr.Thomas Harvey ஐன்ஸ்டீனின் மரணத்துக்கு பின் திருட்டுத் தனமாய் அவர் மூளையை எடுத்து வைத்துக்கொண்டாராம். இன்றும் அது Princeton Hospital Pathology lab-ல் இருக்கின்றது.
ஐன்ஸ்டீனின் வார்த்தைகள் பொதுவாய் நகைச்சுவையும் அர்த்தமும் செறிந்ததாய் இருக்கும். இங்கே சில உதாரணங்கள். எளிய தமிழில்.
ஐன்ஸ்டீன் சொல்கிறார்.....
எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.
அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?
அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.
ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.
கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.
கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.
A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Z
அதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.
ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.
மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.
ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை. முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.
தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள் தாம்.
காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.
உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ்.
சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான். ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல.
கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.
நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான்.
சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும். ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.
உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான்.
கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.
வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.
உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதுவே வழிகாட்ட சிறந்த வழி.
நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.
நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.
எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)
"ஆ..!" தமிழில் சுஜாதாவின் நவீனம் மென்புத்தகம் Aah..! Sujatha Tamil Novel e-book Download. Right
click and Save.http://static.scribd.com/docs/p2b8hm5gyn77.pdf இப்புத்தக இறக்கம் பற்றி தகவல் தந்த இனிய தமிழ்நெஞ்சத்துக்கு நன்றிகள் பல
Download this post as PDF
7 comments:
இப்போது நன்கு வேலை செய்கிரது. நன்ரி. வல்லினம் டைப்பிங் பழக வேண்டும்.
http://www.esnips.com/web/TamilNenjam
நான் 'தி மீடியா சைட்' டிலிருந்து 'டோரன்ட்' வழியாக 3 நாட்களாக 'இணையிறக்கி'யதுதான் 'ஆ' நாவல். அதனை உங்கள்
'இன்றைய சிறப்பிறக்கம்' பகுதியில் வெளியிட்டமைக்கு நன்றி.
மேலும்
சுஜாதாவின் எழுத்துக்களால் ஆன 'சுஜாதாவின் சிறுகதைகள்' மற்றும் 'பிரிவோம் சந்திப்போம் பாகம் 2' ஆகிய மென்நூல்களும் இங்கே இந்த தளத்தில் ஏற்றியிருக்கிறேன்.
http://www.esnips.com/web/TamilNenjam
http://cid-4412435977587330.skydrive.live.com/browse.aspx/Tamilnenjam
here i uploaded this year's GURU PEYARCHI PALAN.
if you do not believe in god. you can refuse this. that is your sudhandhiram.
thankyou
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆர்டிகிள் நன்றாக உள்ளது. தமிழில் டைப் செய்ய வருகிறது. Using Fire Fox. Now in IE 6, I am not able to read the blog in Tamil. Only in fire fox it is readable.நன்றி. வாழ்த்துக்கள். முன்பு இன்டெர் நெட் எக்ஸ்ப்லோரரில் படிக்க முடிந்தது. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை? Need guidance. கோவிந்தராஜன்.
http://www.esnips.com/web/TamilNenjam
'அயல் சினிமா' - இராமகிருஷ்ணன்
'பிரிவோம் சந்திப்போம் - பாகம் 2' - சுஜாதா
'மர்பியின் 1000 விதிகள்'
'முல்லாவின் கதைகள் தொகுப்பு' - ஐடிநுட்பம்
'இந்து மகேஷ்' - 'ஐஸ்கிரீம்'
'யோகா பற்றிய பதிவு' - ஆங்கிலத்தில்
'மாஸ்டர் ஆப் பாடி லாங்குவேஜ்' - ஆங்கிலத்தில்
இவைகள் இந்த 'தொகுப்புப் பகிர்வோன்' இல் உள்ளன. உங்கள் கவனத்திற்கு.
http://www.esnips.com/web/TamilNenjam
Wow. Great quotes from the great einstien.
//அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?
//
//மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.
//
//கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.//
//நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.
நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.//
ஆனாலும் மனிதர், ரொம்பவும் அநியாயத்துக்கு சிந்தித்திருக்கிறார்!!;-)
Post a Comment