உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, November 22, 2007

தமிழில்..

அடிக்கடி என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி.நீங்கள் தமிழில் எப்படி எழுதுகின்றீர்கள்? நான் தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்? பையர்பாக்ஸ் -ல் தமிழ் ஒழுங்காக தெரிய மாட்டேங்குதே என்ன செய்ய? போன்றன.

இங்கே என் விளக்கங்கள்.

நீங்கள் தமிழில் எப்படி எழுதுகின்றீர்கள்?
ஆரம்பத்தில் Kuralsoft எனும் அழகிய எளிய இலவச மென்பொருள் ஒன்றை தான் பயன்படுத்தி வந்தேன்.இதன் வழி நேராக Notepad-ல் தமிழில் தட்டச்சலாம் அல்லது நேராகவே பிளாகிலேயே தட்டச்சலாம்.பிரச்சனை இல்லாதிருந்து வந்தது. என்னநினைத்தார்களோ சமீபத்தில் அதற்கு விலையை குறித்து விட்டார்கள். தமிழில் எழுத இலவச மென்பொருள்கள் இன்னும் இருப்பதால் அவைகளுக்கு தாவ வேண்டி வந்தது. இப்போது ஈகலப்பை எனும் மென்பொருளை பயன்படுத்துகின்றேன். இந்நேரத்தில் இம்மென்பொருளை இலவசமாய் வழங்கிவரும் தமிழா (Thamizha) குழுவுக்கு நன்றிகள் தெரிவித்துகொள்கின்றேன்.

நான் (அதாவது நீங்கள்) தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்?
நீங்களும் தமிழில் Notepad-லோ அல்லது Blog-கிலோ அல்லது Gmail-லிலோ தமிழில் எழுதலாம். முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து eKalappaiஎனும் மென்பொருளை இறக்கம் செய்து கொள்ளுங்கள்

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5

பின் கீழ்கண்ட சுட்டியிலிருந்து கீபோர்டு Tamil unicode .kmx கோப்பை இறக்கம் செய்து அதை ஈகலப்பையில் பயன்படுத்துங்கள்

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=13

குழப்பமாய் இருக்கிறதா? இதோ படிப்படியாக செய்முறை உங்களுக்காக..

1.eKalappai-யை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவவும். சும்மா Install-யை கிளிக் பண்ணி மற்ற எல்லா வற்றையும் பட்பட்டென கிளிக்கி செல்லவும்.கீழே அந்த ஆரம்ப படம்.

2.eKalappai நிறுவி முடித்ததும் கீழே படத்தில் இடதுகோடியில் காண்பது போல புதிதாய் ஒரு ஐகான் (TavulteSoft Keyman 6.0) உங்கள் கணிணியில் வரும்.

3.அந்த ஐகானை வலது கிளிக்செய்து keyman configuration...-ஐ கிளிக்கவும்.

4.அதிலுள்ள Install Keyboard-யை கிளிக்கி ஏற்கனவே இறக்கம் செய்து வைத்துள்ள NewUniTamil.kmx கோப்பை நிறுவவும்

5.முடிவில் இப்போது மூன்று கீபோடுகள் இருக்கும். அதில் Tamil99UNI,Tamil99Tsc இரண்டிலும் உள்ள டிக் மார்க்கை நீக்கிவிடவும்.UniTamil மட்டும் டிக் இருக்கட்டும்.

6.இப்போது Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் நீங்கள் தமிழில் எழுத தயார். Notepad-யை திறந்து தமிழில் எழுதலாம்.
உதாரணமாய் அம்மா என்பதை ammaa எனவும் ஆசை என்பதை aasai எனவும் டைப்பவேண்டும். இதை Tamil Transliteration என்பார்கள். மீண்டும் Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் ஆங்கிலத்துக்கு போய் விடுவீர்கள்.

பையர்பாக்ஸ் -ல் தமிழ் ஒழுங்காக தெரிய மாட்டேங்குதே என்ன செய்ய?
ஏற்கனவே நண்பர் இலக்கியன் சொல்லிய விளக்கத்தையே இங்கும் தருகின்றேன்.

பயர்பொஸ் உலாவியில் தான் தமிழ் யுனிகோட் பிரச்சனை உள்ளது. அதனை கீழ் கண்டவாறு சீர் செய்யலாம்

1.முதலில் windows XP with Service pack 2 இறுவட்டை CD Drive க்குள் போட்டுக்கொள்ளவும். பின்னர் க்ண்ட்ரோல் பனெலிற்கு போய் Regional & Language Options என்னும் ஐக்கனை கிளிக் பண்ணவும்.

2. அதில் language என்னும் Tab இனை கிளிக் பண்னவும்.

3.அதில் supplemental language supportஏனும் option இல் இரண்டு தெரிவுகள் இருக்கும்
*. install files for complex scripts and right to left language (including Thai)

*install files for east Asian languages

இதில் முதலாவதை தெரிவு செய்த பின்பு apply button ஐ சொடுக்கினால் வின்டோஸ் எக்ஸ்பி சீடியிலிருந்து தமிழ் யுனிகோட்டுக்கு தேவையான விபரங்களை தானாகவே அது பதிவு செய்து கொள்ளும். பின்பு கணினியை மீள ஆரம்பிக்கவும்.

அவ்வளவு தான்


"சுஜாதாவின் சிறுகதைகள் தொகுப்பு" தமிழில் மென்புத்தகம். தொகுத்தவர்: பிரதீப் குமார் திருமலை அரசன் "Sujatha Short Stories Collection" Tamil e-book Download Compiled by Pradeep Kumar Tirumalai Arasan. Right click and Save.http://static.scribd.com/docs/f5se8xfsjb6v4.pdf
உபயம் : தமிழ்நெஞ்சம்


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



20 comments:

Anonymous said...

You can also use this google link to write in tamil.

http://www.google.com/transliterate/indic/Tamil

Tech Shankar said...

உங்கள் கவனத்திற்கு.


http://www.esnips.com/web/TamilNenjam

'அயல் சினிமா' - இராமகிருஷ்ணன்
'பிரிவோம் சந்திப்போம் - பாகம் 2' - சுஜாதா
'மர்பியின் 1000 விதிகள்'
'முல்லாவின் கதைகள் தொகுப்பு' - ஐடிநுட்பம்
'இந்து மகேஷ்' - 'ஐஸ்கிரீம்'
'யோகா பற்றிய பதிவு' - ஆங்கிலத்தில்
'மாஸ்டர் ஆப் பாடி லாங்குவேஜ்' - ஆங்கிலத்தில்

இவைகள் இந்த 'தொகுப்புப் பகிர்வோன்' இல் உள்ளன.
http://www.esnips.com/web/TamilNenjam

Tech Shankar said...

http://www.esnips.com/web/TamilNenjam


'அயல் சினிமா' - இராமகிருஷ்ணன்
'பிரிவோம் சந்திப்போம் - பாகம் 2' - சுஜாதா
'மர்பியின் 1000 விதிகள்'
'முல்லாவின் கதைகள் தொகுப்பு' - ஐடிநுட்பம்
'இந்து மகேஷ்' - 'ஐஸ்கிரீம்'
'யோகா பற்றிய பதிவு' - ஆங்கிலத்தில்
'மாஸ்டர் ஆப் பாடி லாங்குவேஜ்' - ஆங்கிலத்தில்

இவைகள் இந்த 'தொகுப்புப் பகிர்வோன்' இல் உள்ளன.

http://www.esnips.com/web/TamilNenjam

Tech Shankar said...

http://esnips/web/tamilnenjam

சாவி எழுதிய 'வாசிங்க்டனில் திருமணம்'
சுகி சிவம் அவர்களின் 'வெற்றி நிச்சயம் பகுதி - 1'
சுகி சிவம் அவர்களின் 'வெற்றி நிச்சயம் பகுதி - 2'
அவள் விகடன் வழங்கிய 'சனிப்பெயர்ச்சி பலன்கள்'

இவையனைத்தும் இந்த 'கோப்புப்பகிர்வான்' இல் உள்ளது.

http://esnips/web/tamilnenjam

Name : Rajesh RV said...

Google Indic Transliteration can solve the problem... Type your thagalish in the link below

http://www.google.com/transliterate/indic/Tamil

This facility was available earlier in different formats, but google offer with drop down menu for possible tamil word which is really good

Anonymous said...

Dear PKp sir,

Your posting are very informative ,

Can i Use the same way in windows Vista operating system to write in Tamil,I did not have any problem in windows xp but windows vista I was not able to use the key board same as ekalappai UNI tamil, its always taking tamil net key board.

Please suggest
Thanks
Krishnamurthy

Anonymous said...

நான் Google Indic transliteration உபயோகப்படுத்துகிறேன்.

[http://www.google.com/transliterate/indic/Tamil#]

Anonymous said...

Its really very nice and useful information.

If u dont mind I would like to share this website with you,

www.quillpad.com

Govindarajan.L.N. said...

ஸ்க்ரீன் shots மிக அருமை. சுஜாதாவின் கதைகளுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

Tech Shankar said...

Tamil Recipies - Samayal Samayal

http://esnips.com/web/TamilNenjam

Tamil Recipies - Samayal Samayal..

Anonymous said...

நன்றி திரு.பிகேபி.,நான் எனது வலைபதிவை இன்று முதல் வெற்றிகரமாக ஆரம்பிக்கிறேன்.,
-இட்லிசாம்பார்.,

Unknown said...

அன்புள்ள திரு.பிகேபி அவர்களுக்கு, நான் சமீப காலமாக உங்கள் வலைப் பதிவுகளைப் படித்து வருகிறேன். மிகவும் சுவாரசியமான, பயனுள்ள பல செய்திகளைக் கொடுக்கிறீர்கள். எனக்குத் தெரிந்த வரை, எ-கலப்பை தான் தமிழில் தட்டச்சு செய்ய சுலபமான வழி. நான் இரண்டாண்டுகளுக்கும் மேலாக இதைப் பயன் படுத்தி வருகிறேன். நிற்க. எனக்கு மற்ற format-களில் உள்ள இசைக் கோப்புகளை MP3 format-ல் மாற்ற ஏதேனும் செயலி இருப்பின் (ஓசியில்தான்) ஒரு லிங்க் கொடுங்களேன். நன்றி. வணக்கம்.
அன்பன்
சேஷகிரி

இளைய கவி said...

தங்கள் உதவிக்கு மிகவும் நன்றி திரு. பி.கே.பி அவர்களே, என்னுடைய http://dailycoffe.blogspot.com உருவானதில் தங்களுக்கு ஒரு பெரிய பங்கு ஒன்று உள்ளது.

இளைய கவி said...

நண்பர் சேஷகிரி,

தாங்கள் கீழ் கண்ட சுட்டியிலிருந்து தாங்கள் கேட்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்

audacity.sourceforge.net/download

மேலும் இது open sourse முறையயை சார்ந்தது என்பதால் தங்களால் இந்த மென்பொருளில் மாறுதலும் செய்ய இயலும்.(ஓசியில்தான்)

Anonymous said...

நண்பர் இளையகவி அவர்களுக்கு,
தாங்கள் சுட்டியிருந்த மென்பொருளை பதிவிறக்கம் (ஓசியில்தான்) செய்துவிட்டேன். சோதித்துப் பார்க்க ஞாயிற்றுக் கிழமைதான் நேரம் கிடைக்கும். நன்றிகள் பல.
அன்பன்
இர.சேஷகிரி

Unknown said...

அன்புள்ள திரு.PKP அவர்களே,
எத்தனையோ பாடல்களுக்கும், அசைபடங்களுக்கும் இறக்கம் செய்து கொள்ள வசதி செய்து கொடுத்திருக்கிறீகள். எனக்கு சீர்காழி கோவிந்தராஜன் பாடிய "சிவசங்கரி சிவானந்தலஹரி சிவசங்கரி" என்ற பாடல்(திரைப்படம்-ஜகதலப்ரதாபன்)மேல் தீராத காதல். அதன் mp3 கோப்பு, வலையில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தங்களிடமோ அல்லது தங்களின் வலைப்பூவைப் படிக்கும் நண்பர்களிடமோ இருப்பின் எனக்கு அனுப்ப இயலுமா? என் மின்னஞ்சல் முகவரி giri.sesha@gmail.com. நன்றி
அன்பன்,
சேஷகிரி

இளைய கவி said...

நண்பர் சேஷகிரி அவர்களே,

தாங்கள் கீழ் கண்ட சுட்டியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும்

http://music.cooltoad.com/music/song.php?id=312921

Arun said...

நான் தமிழில் type செய்ய Baraha IME எனும் மென்பொருளை உபயோகிக்கின்றேன். இதில் type செய்ய மிகவும் எளிதாக உள்ளது. வெறும் 1.16 MB அளவே உள்ள இந்த மென்பொருள் அருமையாக உள்ளது. இதன் மூலம் தமிழ், ஹிந்தி, மலையாளம் ,கன்னடம் உள்பட 13 மொழிகளில் type செய்ய முடிகிறது.

Anonymous said...

http://www.youtube.com/watch?v=DFFPwucs3Bc

have a look on this link plzz

ஜான் said...

உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது. நான் google transliteration-ஐ பயன்படுத்தி தமிழில் எழுதுகிறேன். ஆனால் அதை பயன்படுத்தி HTML file-இல் தமிழில் எழுத முடியவில்லை. தங்களுக்கு அது பற்றி தெரிந்தால் சொல்லவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்