தினமலரை அங்காங்கே திட்டி எழுதி இருக்கிறார்கள்.எனக்கொரு நினைவு.2002 என நினைக்கிறேன்.ஐடி பபிள் உடைந்திருந்த நேரம்.நியு எகனாமியின் அபாயம் குறித்து பத்திரிகைகள் பக்கம் பக்கமாய் எழுதிகொண்டிருந்தன.தினமலரில் ஒரு செய்தி துணுக்கு படித்தேன்.அது இப்படியாக போகிறது."சில மாதங்களுக்கு முன்பு வரை ஐடி எனப்படும் கம்ப்யூட்டெர் படிதவர்கள் பண்ணின பந்தாவுக்கு அளவே இல்லை.கல்லூரி முடித்திருந்தாலே போதும் கை நிறைய சம்பளம் என இருந்தது.ரெஸ்டாரென்ட்தோரும் இளைஞர் பட்டாளங்கள்.இஷ்டத்துக்கு செலவு செய்து கொண்டிருந்தனர்.இப்போ IT பபிள் உடைந்து விட்டதால் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது.பந்தாபண்ணிதிரிந்த இளைஞர் கொட்டம் அடங்கியிருக்கிறது" என்கிறரீதியில் மகிழ்ச்சி தொனியில் எழுதி இருந்தது.As a IT guy ஆத்திரத்தில் தினமலருக்கு எழுதலாம் என நினைதேன்.மீண்டும் மௌன வாசகனாகிவிட்டேன்.வேலைஇல்லாமல் நம் இளைஞர் சுற்றினால் தினமலருக்கு என்ன சந்தோசமோ.ரொம்ப வருத்தமாகிவிட்டது.இப்போ அவுட்சோர்சிங்கால் நம் இளைஞருக்கு வேலை கிடைத்திருக்கிறது.அதற்க்கு எதாவது ஆபத்தென்றால் மீண்டும் தினமலர் சந்தோச பட்டாலும் படும்.எல்லோரும் நல்லாஇருந்தால் நாமும் நல்லா இருக்கலாம் என்பதை எப்போ தினமலர் புரிந்து கொள்ளபோகிறதோ.
வகை:தமிழ்நாடு

1 comment:
correct
Post a Comment