ரொம்ப நாள் ஆசை அவனுக்கு.புதிதாய் பசிபிக் பெருங்கடலில் கட்டப்பட்டிருக்கும் "கடலடி சிட்டி"யை(UnderWaterVillage)பார்க்க வேண்டும் என்பதோ,அல்லது பாரிஸ் நகரின் வான்வெளியில் மிதந்தபடி கிடக்கும் "ப்ளோட்டிங் ஹோட்டலில்" சாப்பிடவேண்டும் என்பதோ அல்ல.அந்த ஆசை இப்போதைக்கு மிக சின்னது.புனித நகரமெனப்படும் எருசலேமை சுற்றி பார்க்கவேண்டும் என்பது.அது தான் அந்த பிஞ்சு நெஞ்சின் ஆசை.பக்கத்திலேயே ஒரு மருந்து கடை.
"Dடேப்ளட்ஸ்" செக்ஸன் பக்கம் செல்கிறான்.வகைவகையாக Dடேப்ளட்ஸ்.ஆசைப்படும் சினிமாவை கனவில் காணலாம்.அந்த மாத்திரை சாப்பிட்டால் போதும்.ஆசைப்படும் ஆளுடம் பேசலாம் கனவில்.அந்த Dடேப்ளட் சாப்பிட்டால் போதும்.ஆசைப்படும் வேலை செய்யலாம்.ஆசைப்படும்.....
எருசலேமை வாங்கிக்கொண்டான்.மறக்காமல் ஒருமுறை சாப்பிடும் முறையை படித்துக்கொண்டான்.
தூங்கும் முன் லபக்.எருசலேம் மாத்திரை.கொஞ்சூண்டு தண்ணீர்.தூங்கிப்போனான்.ஆகா கலர் கலராய் எருசலேம் நகரம்.ஓடியாடினான் ஒய்யாரமாய் நகர வீதியில்.திடீரென குண்டு வெடித்தது அங்கேயும்!
- 2002 ஏப்ரலில் கிறுக்கியது.

No comments:
Post a Comment