அங்கு காலையில் முட்டையும் முட்டை சார்ந்த உணவும் மதியம் சிக்கனும் சிக்கன் சார்ந்த உணவும் பிரபலம்.சன்னி சைட் அப்,ஸ்கிராம்பில்ட் எக்,வித விதமான ஆம்லேட்,சான்விச் என நிறைய வகைகளில் முட்டை சாப்பிடுகிறார்கள்.காலையில் பெரும்பாலோனோரை டன்கின் டோனட்ஸ் காபி கப்போடு தான் பார்க்க முடியும்.டோஸ்ட்,மப்பின்,க்ரோஸன்ட்,டோனட்,பீகிள்,சாலட்,சூப்,
லசானியா,பீஸா,சப்,நூடுல்ஸ்,ராப்ஸ்,பான் கேக்ஸ்,சைனீஸ் பப்பே,காட் டாக்ஸ்,நக்கட்ஸ்,ஸ்ரைப்ஸ்,ப்ரைஸ்,பர்கர் உணவு வகைகள் பிரபலம்.எல்லா உணவிலும் சீஸ் தவறாமல்.கோக்,பெப்ஸி வகையராக்களை சோடா என்கிறார்கள்.
மெக்டொனால்ட்ஸ்,பர்கர்கிங்,பீஸாகட்,பப்பாயீஸ்,ரெட்லாப்ஸ்டெர்,
டிஜிஐப்ரைடேஸ்,சார்லி ப்ரொவ்ன்,ரூபி ட்யூஸ்டே,ஹார்டீஸ்,ஒயிட்கேஸ்டில்,சப்வே,கேஎப்சி,டாகோபெல்,
பட்ரக்கர்ஸ்,பிளிம்பீஸ்,டெலி,ஆலிவ் கார்டன்,பாஸ்டன்மார்க்கட்,டைனெர்,டோமினொஸ்,விண்டீஸ்,
ஹூட்டர்ஸ்,பென்னிகென்ஸ்,ஆப்பிள்பீஸ்,குயிஸ்னோஸ் இவை பிரபல உணவகங்கள்.
நன்றாக சீஸ் சாப்பிடுவதாலோ என்னமோ பெரும்பாலோர் ஓவர் வெயிட்.ரோட்டோரமாய் அல்லது எதாவது பார்க்குகளில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் இல்லை வோர்க் அவுட் ப்ளேஸ் போய் உடற்பயிற்சி செய்து சில பவுண்ட் எடை குறைக்க எல்லோருமே முயன்று கொண்டிருக்கிறார்கள்.
வகை:அமெரிக்கா
Download this post as PDF
No comments:
Post a Comment