"Cisco" என்ற பிரபல கணிணி வலை சார்ந்த ரொவ்டர் முதலான உயர்தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் நாம் யாவரும் அறிந்ததே.இதன் பெயர் SanFrancisco என்ற ஊர் பெயரிலிருந்து வந்ததாம்.ஜான் மார்கிரிட்ஜ்(John Morgridge)-இந்நிறுவனத்தின் முதல் பிரஸிடன்ட் இப்படியாக சொல்கிறார்-இக்கம்பெனியின் நிறுவனர்களான தம்பதியர் லியோனார்ட் பொசாக்கும் சான்ரா லெர்னெரும் (Leonard Bosack and Sandra Lerner) தங்கள் கம்பனி பெயர் மற்றும் லோகோவை பதிவு பண்ணுவதற்காக சாக்ரமென்டோ(Sacramento) நோக்கி காரோட்டிக்கொண்டிருக்கும் போது தங்கள் கம்பெனி பெயரும் Golden Gate Bridge-ஐ பார்த்து தங்கள் கம்பெனி லோகோவும் அவர்கள் மனதில் உதித்ததாக சொல்கிறார்.இன்றும் அநேக இடத்தில் cisco Systems என cisco வின்"c" lowercase-ல்இருப்பதை பார்க்கலாம்.
1984 -ல் துவக்கப்பட்ட இந்நிறுவனத்தில் இன்று 34,000 பேர் வேலை பார்க்கிறார்கள்.தலைமைஇடம்-சான் ஒசே,கலிபோர்னியா.
சக்கைபோடு போடும் இக்கம்பெனியின் ஆண்டு வருவாய் 24.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
PIX,Linksys,BPX,Aironet இவை இவர்களின் முக்கியமான வணிக அடையாளங்கள்.
பின்குறிப்பு:
170 மில்லியன் டாலரை எடுத்துக்கொண்டு சிஸ்கோவிலிருந்து பிரிந்து போன தம்பதியர் லியோனார்ட் பொசாக்கும் சான்ரா லெர்னெரும் அப்புறமாக விவாகரத்தும் செய்துகொண்டனர்.
வகை:லோகோ ரகசியம்
Download this post as PDF
4 comments:
நல்ல தகவல்.
சிஸ்கோவை, அல்கடெல் வாங்கி விட்டதாக கேள்வி பட்டேன். உண்மையா?
ஸ்ருசல்,
அல்கடெல்லுக்கும் லூசென்றுக்கும் தான் டீல் நடப்பதாக கேள்வி,சிஸ்கோ சம்பந்த பட்டதாக தெரியவில்லை.
கமென்றுக்கு நன்றி.
சான் ஜோஸ் (san jose) அக இருந்தாலும் சான் உசே / சான் ஒசே என்றுதான் உச்சரிக்க வேண்டும். j - silent. இந்த பெயர் குழப்பம் பத்தி தனி பதிவு தான் போடனும்.
வாவ் குறும்பன்..அப்படியா விசயம்...சுத்தமா எனக்கு இது தெரியாது.மிகவும் நன்றி.
louisville-ஐ வில்லி எனாமல் வில் என்பது போல் இதுவும் என நினைக்கிறேன்.மாற்றிவிடுகிறேன்.இதுகளைபற்றி கண்டிப்பா ஒரு பதிவுபோடுங்கள் :)
Post a Comment