
இந்திய சந்து பொந்துகளையும் அதிலிருக்கும் கடைகள், ஓட்டல்கள், பார்க்குகளையும் மேப்பாய் போடுவதொன்றும் கூகிளுக்கு எளிதாய் அமைந்திருக்கவில்லை. மேற்கத்திய நாடுகள் போல கட்டம் கட்டமாய் சட்டம் சட்டமாய் அமைந்தனவல்ல நம்மூர் தெருக்கள். மட்டுமின்றி மொத்த மேப்பையும் தாங்களே வரைய வேண்டியிருந்தது. அது போக இன்றைய சூழலில் இருக்கும் கோடிக்கணக்கான தெருக்கு தெரு விவரங்களை தங்கள் வரைபடத்தில் கொண்டு வர Geospatial crowdsourcing , அதாவது பொது மக்களிடமிருந்து உள்ளீடு பெறவேண்டியிருக்கின்றதாம். உங்கள் தெரு விவரங்கள், முனையிலுள்ள கசாப்பு கடை, வீட்டெதிரிலுள்ள சலூன் இவற்றையெல்லாம் அவர்கள் டேட்டாபேசில் நீங்களே உள்ளீடு செய்யலாமாம். இது போல் உள்ளூர்வாசிகள் உள்ளிடும் தகவல்கள் அதிகரிக்க அதிகரிக்க அது முழுமுதல் பக்கா மேப்பாக உருவாகிவிடும். அதுதான் அவர்களின் லட்சியம். (படத்தில் ஐதராபாத்தின் கலர்புல்லுக்கு இதுவே காரணம்).
சில நாடுகளில் Tele Atlas மற்றும் NAVTEQ போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை அமர்த்தி சந்து சந்தாய் போய் traffic signs, one-way streets, points of interest களை திரட்டி வர அனுப்புகின்றார்கள். இப்படி மனித வள வழி இந்த டேட்டாபேஸ்களை சிலர் நிரப்பிவர ஜப்பானியர் கொஞ்சம் முந்திப் போய் கொண்டிருக்கின்றார்கள். ஜாப்பானில் காண்டா சிவிக் 2006 (Honda Civic) காரில் நீங்கள் செல்லும் போது டிராபிக்கில் மாட்டிகொண்டால் அது மைய செர்வர் ஒன்றுக்கு தானாய் தகவல் அனுப்பி விடுமாம். அத்தகவல் அனைவருக்கும் கார் டேஷ் போர்டு (Dash Borad) வழி போய் சேர்ந்துவிடும். எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்?
Related Post.
சென்னைத் தெருப் பெயர்கள் இப்போது கூகிள் மேப்பில்
Download this post as PDF


சிலவற்றின் ஜனன நாட்களை மகிழ்வுடன் நினைவுகூறலாம். உதாரணத்திற்கு 1882-ல் சார்லஸ் பாபேஜ் கணிணியுகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது, 1965 -ல் முதன்முதலாய் Fernando Corbato தன் சகாக்களுக்கு ஈமெயில் அனுப்பி கொண்டாடியது இப்படியாய் பல.
எதையெல்லாம் ஏலம் போட்டு கூவி கூவி விற்பதுவென வரைமுறையே இல்லாமல் போய் விட்டது. ஈபேயில் யாரோ ஒருவர் பனிக்கட்டியை விற்றாராம். இன்னொருவர் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் சவைத்து போட்ட பபுள்கம்மை விற்றாராம். இன்னொரு இளம்பெண் தான் பயன்படுத்திய உள்ளாடைகளை விற்றாராம். இப்படி கிரேஸியாய் போகும் இணையத்தில் அசாதாரணமெல்லாம் மிக சாதாரணம்.
பதினாறு வயதினிலேயே இவன் ஒரு பள்ளி செல்லும் பருவ hacker. அப்படியே சமூகம் விட்டிருந்தால் இன்றைக்கு அவன் FBI -யில் மாட்டியிருப்பான். அல்லது FBI தேடிக்கொண்டிருக்கும். Firas Bushnaq என்பவர் இச்சிறுவனின் திறமையைகண்டு வியந்து தனது eCompany-யில் வேலைப்போட்டு கொடுத்தார். முடங்கி கிடந்த அவன் திறமைகள் ஆக்கப்பூர்வ வழியில் திருப்பிவிடப்பட்டன. டிஜிட்டலாய் இணையத்தில் பரந்து விரிந்து கிடக்கும் தகவல்களுக்கு இருக்கும் ஆபத்துகள் மற்றும் அதனை பாதுகாப்பதின் முக்கியத்துவம் ஆகியவை வரும் காலத்தில் அதிமுக்கிய துறையாக போகின்றதென அவர்கட்கு தோன்றியது. eeye நிறுவனமும் பிறந்தது.
இவர்களின் இலவச (ஓராண்டு) Blink மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவினால் அது இருக்கும் தொல்லைகளையும், வரும் தொல்லைகளையும் போக்கிவிடுமாம். மைக்ரோசாப்ட் ஒவ்வொரு இரண்டாவது செவ்வாயும் தான் security patches வெளியிடுகின்றார்கள். அவர்களையும் முந்தி இவர்கள் விண்டோஸ்,IE போன்ற மென்பொருள்களிலுள்ள தவறுகளை கண்டறிந்து உடனடி தீர்வு patch-யையும் வெளியிடுகின்றார்கள். இண்டரெஸ்டிங் தான்.
சிறுசுகளுக்கு மேஜிக் காட்டி விளையாடலே ஒரு தனி அலாதிதான்.
அவ்வப்போது நம்மாட்கள் பிரமாண்டமாய் எதையாவது செய்து அசத்துவது வழக்கம். அவ்வரிசையில் லேட்டஸ்ட் "ஒரு கூடை சன்லைட்" சூப்பர் கிட் சிவாஜி திரைப்பட பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை வெள்ளையாக்கி காட்டி நம் மென்பொருள் வல்லுனர்கள் மகிழ்ந்திருக்கிறார்கள்.மேலும் படிக்க கீழே.Click the Pictures to Enlarge
.jpg)
.jpg)
படத்தில் நீங்கள் காணும் இந்த வழுக்கை மனிதரின் பெயர் கிரேயிக் நீயூமார்க் (Craig Newmark). சுத்தமான ஜாவா புரோகிராமர். பத்து வருடங்களுக்கு முன் இந்த மனுஷனுக்கு கொஞ்சம் போரடிக்க சான்பிராசின்கோ சுற்றுவட்டாரத்தில் நடக்கும் நிகழ்வுகளை நண்பர்களுக்கு மெயிலாக டைப்பி அனுப்பிக்கொண்டிருந்தாராம். நண்பர்களுக்கு அந்த தகவல்கள் பிடித்து போக அந்த நண்பர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக பெருகியது. 1995 வாக்கில் அவர் 240 பேர்களுக்கு மெயில் அனுப்பிக்கொண்டிருந்தார். உற்சாகம் கொண்ட சிலர் ஏன் சுற்று வட்டார நிகழ்வுகளோடு, அக்கம் பக்கத்தில் விலைக்கு இருக்கும் வீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் கூடவே சொல்ல கூடாது என தூண்டினர். மனிதர் பிஸியாகி விட்டார். உலகின் மிகப்பெரிய வரிவிளம்பர வலைப்பக்கம் 





BusinessWeek எனும் அமெரிக்க வாரஇதழ் உலக முழுவதுமிருந்து இந்த வருட டாப் 100 தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மென்பொருள் நிறுவனங்களின் வரிசையை வெளியிட்டுள்ளது. அதில் சில இந்திய நிறுவனங்களும் அடக்கம். இங்கே அதன் சாரம்சம்.
14 ஆவது இடத்தில் வருவது Bharti Airtel (கடந்த வருடம் 10ம் இடம்.இறங்குமுகம்)
23 ஆவது இடத்தில் வருவது Tata Consultancy Services (கடந்த வருடம் 34ம் இடம்.ஏறுமுகம்)
49 ஆவது இடத்தில் வருவது Wipro (கடந்த வருடம் 57ம் இடம்.ஏறுமுகம்)
73 ஆவது இடத்தில் வருவது Satyam Computer Services (கடந்த வருடம் 49ம் இடம்.இறங்குமுகம்)
HCL Technologies (புதுசாக இந்த வரிசையில் இந்த வருடம் நுழைந்துள்ளது)
பெரும்பாலான மென்பணிகள் இந்தியாவிலேயே நடைபெறும் அமெரிக்க நிறுவனம் Cognizant Technology Solutions 70 ஆவது இடத்தில் வருகிறது. (கடந்த வருடம் 84ம் இடம்.ஏறுமுகம்)
கூரையேறி குருவி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் காட்ட போறானாம் என்பார்கள். இங்கே ஒரு சவால்.



