நாடாண்டு தான் ஒருவர் தன் சக்தியை நிரூபிக்க வேண்டும் என்றில்லை. தனியொருவராய் மாபெரும் தீர்வுகள் எடுத்து வியாபார சாம்ராஜ்யங்களை உருவாக்குதலும் மேய்த்தலும் பெரிய காரியமே. அப்படி வளர்ந்து... அன்றைய கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வியாபாரக் கம்பெனியாய் பாரதத்தில் நுழைந்து பின் மொத்த பாரதத்தையும் ஆளவில்லையா?.
நம்மூர் பெண் ஒருவர் அமெரிக்க Fortune பத்திரிகையால் இந்த வருட உலகின் டாப் MOST POWERFUL WOMEN ஆக தேர்ந்தெடுக்க பட்டிருப்பது தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமைதான்.(Forbes-ல் 5 ஆவது இடம்).பெப்ஸி குளிர்பான(PepsiCo) கம்பெனியின் Chairman and CEO-வாக இருக்கும் இவர் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி (Indra Krishnamurthy Nooyi).1955-ல் சென்னையில் பிறந்த இவர் 1974-ல் தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் சாதாரண ஒரு கல்லூரி மாணவியாய் BSc முடித்தார். பின் கொல்கொத்தா - Indian Institute of Management-ல் PGDBA படித்து முடித்தார்.மதுரா கோட்ஸில் (Madura Coats) வேலை செய்யும் போதே அமெரிக்க யேல் பல்கலைகழகத்தில் நிர்வாகம் படிக்க வாய்ப்பு கிடைக்க பறந்து போனவர் தான், இன்று அவர் உலகின் சக்திவாய்ந்த முதல் பிசினஸ் பெண்.
எல்லாமே எப்போதும் "பீஸ் ஆப் கேக்"காய் இருப்பதில்லை. நூயியும் கடக்க வேண்டிய தூரங்கள் ரொம்ப இருந்தன.Yale-ல் படிக்கும் போது தின செலவுக்காய் இரவு முழக்க விழித்து receptionist counter-ல் உட்கார்ந்து வேலை செய்ததுண்டாம். முதல் இன்டர்வியூக்கு 50 டாலர் கோட் சூட்டோடு போக வேலை கிடைக்கவில்லையாம். கடைசியில் இரண்டாவது இண்டர்வியூக்கு நம்மூர் சேலை கட்டி சென்றாராம்.உடனே வேலையும் கிடைத்தது.அதுவும் புகழ் பெற்ற Boston Consulting Group-ல். அவர் சொல்கிறார் "ஒரு பெண்ணாய் அதுவும் அயல்நாட்டில் பிறந்தவளாய் மற்றவர்களைவிட மிக புத்திசாலியாய் இருக்க வேண்டியிருந்தது." ("Being a woman, being foreign-born, you've got to be smarter than anyone else,")
நம் போன்ற வளரும் தலைமுறைக்கு அவர் சொல்வதெல்லாம்
"எத்தனை வயதானாலும் கற்றுக்கொள்வதை மட்டும் நிறுத்திவிடாதீர்கள்.அது தான் என் தாரக மந்திரம்.பள்ளிப்படிப்பை நான் சொல்லவில்லை.நிஜ உலக அறிவை சொல்கின்றேன்.நாட்டு நடப்பிலிருந்து கற்றுக்கொளலை சொல்கின்றேன்.உங்கள் தாகத்தில் தேடிக்கொண்டேயிருங்கள்"
"Never stop learning. Regardless of ones age. That is my golden rule. Im not talking about academic knowledge, but being street-smart and being aware of whats happening in the real world. Keep your natural curiosity alive."
தமிழ் குல பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் வரிகள் அவை
திருவள்ளுவரின் திருக்குறள் உரையோடு மென்புத்தகம் Thiruvalluvar Thirukural with meaning Tamil ebook Download. Right click and Save.
http://static.scribd.com/docs/s1tocyicarkf.pdf
Download this post as PDF
2 comments:
Never stop learning.
இதைத்தான் சிங்கப்பூர் சிற்பி "வாழ்நாள் கல்வி" என்று சொல்லி வருகிறார்.
அவர் தன்னுடைய 65வது வயதில் சீன மொழியான மேன்டிரீன் கற்றுக்கொண்டாராம்.
ஒவ்வொரு பதிவுக்கும் இலவசமாக கிடைக்கும் Today spl, அருமை & உபயோகமானவை.
நன்றி
Post a Comment