அமெரிக்க Credit Crunch உலக பொருளா தாரத்தையே கொஞ்சம் அசைத்து
பார்த்திருக்கின்றது. அந்த குலுங்கல் ஆடி அடங்க இன்னும் சிறிது காலம் பிடிக்கலாம்.
அக்குறுகியகாலத்துக்குள் என்னவெல்லாம் நடக்கப்போகின்றதோ?. International Monetary
Fund தலைவர் இன்னும் கொஞ்சம் டாலர் விழும் என்கின்றார்.யூரோ ஓரளவுக்கு அதன் சரியான மதிப்பிற்கு வந்து விட்டதென்கின்றார்.நிலை தடுமாறினவன் நேராய் வர தன்னை சமநிலைப்படுத்துவது போல உலக எக்கனாமி தன்னை சமநிலைப்படுத்தி சரிபடுத்துகின்ற தருணம் இது.
முடியாதோரெல்லாம் ஆயிரக்கணக்கான டாலர்கள் கடனுக்கு வீடுவாங்கி பின் முடியாமல் போக ...இந்நிலை வந்தது.
நம்மூரிலும் இந்த கிரெடிட் (கடன் வழங்கப்படுதல்) தொல்லை அதிகமாகிக் கொண்டே வருகின்றது. தங்கள் தகுதிக்கும் மீறி கடன் வாங்குதல் எத்தனை அபாயம் என்பது எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா வழி இது ஒரு பாடம்.
அது போகட்டும்,உங்கள் கிரெடிட் கார்ட் நம்பரில் ஒரு கணக்கு உள்ளது தெரியுமா?உங்கள் கிரெடிட் எண்ணை வைத்தே அது VISA-வா அல்லது MASTERCARD-டா என சொல்லலாம். மாஸ்டர்கார்டுகளின் எண்கள் பொதுவாக 51-55 எண்களில் தொடங்கும்.வீசா கார்டுகளின் எண்கள் பொதுவாக 4 என தொடங்கும்.
வழக்கமாக ஆன்லைனில் சாப்பிங் போகின்றீர்கள்.அங்கே அத்தளத்தில் ஈகாமெர்ஸ் வசதி அதாவது அங்கு வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வசதி செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் கொடுக்கும் கிரெடிட் கார்டை ஒரே பார்வையில் அந்த வெப்தளம் நோட்ட மிட்டு அக்கார்டு சரியானதா இல்லை போலியா என சொல்லிவிடும்.அதன் பின்பே அது கொடுக்கல் வாங்கலை ஆரம்பிக்கும்.எப்படி அது சாத்தியம் Check digit algorithm MOD 10 அதாவது LUHN
எனும் Formula அங்கே உதவிக்கு வருகின்றது.
நீங்களும் இக்கணக்கு பயனபடுத்தி ஒரு கிரெடிட் கார்டு எண் சரியானதா அல்லது போலியா என எளிதாய் கண்டறியலாம்.
பார்முலா இது தான்.
உங்கள் கிரெடிட் கார்ட் நம்பரில் வலது கோடி எண்ணை விட்டு விட்டு பின், வலமிருந்து இடமாக ஒன்று விட்ட எண்களை இரட்டிப்பாக்குங்கள்.
பின் எல்லா எண்களையும் கூட்டுங்கள்.அவ்ளோ தான்.அதன் விடை பூஜியத்தில் 30, 40, 50, etc முடிந்தால் அது உண்மையான கிரெடிட் கார்ட் எண்.
உதாரணத்துக்கு எண்ணிடம் உள்ள கார்டின் எண் 49927398716 என வைத்து கொள்வோம்.
4 9x2 9 2x2 7 3x2 9 8x2 7 1x2 6
இரட்டிப்பாக்கி கிடைத்த எண்கள்.
18 4 6 16 2
இவற்றை இனி கூட்டும் போது 18 என்ற இரு இலக்க எண் 1+8 ஆக பயன்படுத்தப்பட வேண்டும் .16 என்ற இரு இலக்க எண் 1+6 ஆக பயன்படுத்தப்பட வேண்டும்.
இப்போ எல்லா எண்களையும் கூட்டுங்கள்
4 +(1+8)+ 9 + (4) + 7 + (6) + 9 +(1+6) + 7 + (2) + 6
விடை 70 ஆக இது ஒரு சரியான கிரெடிட் கார்டு எண்தான்
இன்னொரு எடுத்துகாட்டை படத்தில் பாருங்கள்.அது ஒரு போலி கிரெடிட் கார்டு எண்.
இந்த கணக்கீடு Excel -ல் இங்கே http://www.beachnet.com/~hstiles/bin/luhn.zip
இந்த கணக்கீடு Java -ல் இங்கே https://www.azcode.com/Mod10/mod10.js
இந்த கணக்கீடு C# -ல் இங்கே http://www.csharphelp.com/archives/files/archive275/card.cs
மோகன் கிருட்டிணமூர்த்தியின் "நகைச்சுவை தொகுப்பு" தமிழில் ஜோக்ஸ் மென்புத்தகம் Tamil jokes Mohan Krishnamoorthy e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/7beo3s5250dew.pdf
Download this post as PDF
2 comments:
எல்லா வங்கி கடன் அட்டைகளுக்கும் இது தான் கண்டு பிடிக்கும் முறையா ??
அல்லது வங்கிக்கு வங்கி மாறுபடுமா ??
வித்தியாசமாக இருக்கு.
Post a Comment