உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, October 11, 2007

நிலவுக்கும் ஐபி

கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் "IP Addreess தட்டுப்பாடு - ஐபி அட்ரெஸ் பெறும் புது வடிவம் - IPv6" எனும் தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன். அதாவது தற்கால IPv4-கள் (எகா:192.168.1.0) போதுமான அளவு ஐபி அட்ரஸ்கள் கொண்டிராததால் IPv6 (எகா:2016:0fe8::0000:0000:0000:1975:69bf)-க்கு நாம் போயாக வேண்டியுள்ளது என குறிப்பிட்டிருந்தேன்.

நண்பர் கூத்தாடி அவர்கள் NAT,CIDR,புராக்ஸி போன்ற விலாசம் மாற்றும் நுட்பங்கள் இப்போதைக்கு இருப்பதால் அப்படியெல்லாம் அவசரம் ஒன்று மில்லை என விரிவாக பின்னூட்டமும் இட்டிருந்தார்.அது முழுக்க முழுக்க உண்மையும் கூட.

இப்போது IPv6 பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

பழைய IPv4-ஆனது 32 பிட் முறையாலானது.புதிய IPv6-ஆனது 128 பிட் முறையாலானது.

அப்போ IPv5-என்ன ஆனது என கேட்கிறீர்களா? 1970-களில் உருவாக்கப்பட்ட Internet Stream எனும் Protocol-க்கு பெயர் தான் IPv5.எனவே IPv4 க்கு அடுத்து TCPIP புரோட்டோகால் IPv6 ஆனது.

IPv6 -க்கு இன்னொரு பெயர் கூட உண்டு.IPng அதாவது அதன் விரிவாக்கம் Internet Protocol next generation.

அமெரிக்க அரசின் அனைத்து கணிணி வலைகளும் வரும் ஜுன் 30 2008-க்குள் முற்றிலும் IPv6 மயமாக்கப்பட திட்டம் போய்க்கொண்டிருக்கின்றது.

பழைய IPv4 மூலம் உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஐபிவிலாசம் கூட கொடுக்கமுடியாது.ஆனால் புதிய IPv6 மூலம் உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் 50000000000000000000000000000 ஐபிவிலாசங்கள் கொடுக்கமுடியும்.

இந்த IPv6 மூலம் விண்ணிலுள்ள நம் மூளைக்கு எட்டியவரையுள்ள அனைத்து வான நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொன்றுக்கும் 7000000000000000 ஐபி அட்ரஸ் கொடுக்கலாமாம்.அடேங்கப்பா.

இனி கார், ஐபாட், ஃபிரிட்ஜ், டிவி, மணிபர்ஸ், போன், பேக், கீசெயின் என கண்ட கண்ட பொருள்களுக்கும் ஐபி அட்ரஸ்கொடுத்தாலும் மனிதகுலம் உள்ளவரை IPv6-தான் அரசாளும் போல் தெரிகின்றது.

உங்கள் கணிணியில் IPv6 நிறுவப்பட்டுள்ளதா என கீழே கிளிக்கி தெரிந்து கொள்ளுங்கள்.
Show My IPv6 Status

சுஜாதாவின்
"அனிதாவின் காதல்கள்" தமிழில் நாவல் மென்புத்தகம் Sujatha "Anithavin Kaathalgal" Tamil Novel e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/edp9rnsneet4q.pdf


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



2 comments:

யோசிப்பவர் said...

//இனி கார், ஐபாட், ஃபிரிட்ஜ், டிவி, மணிபர்ஸ், போன், பேக், கீசெயின் என கண்ட கண்ட பொருள்களுக்கும் ஐபி அட்ரஸ்கொடுத்தாலும் மனிதகுலம் உள்ளவரை IPv6-தான் அரசாளும் போல் தெரிகின்றது.

//

அப்படியா நினைக்கிறீர்கள்?! என்னுடைய அநுமானப்படி இன்னும் இருபது வருடங்களுக்குக் கூட பத்தாது!!

Tech Shankar said...

Mr. Kalyan's Poem - Related to Ur Post..

I Like both

http://tamil.sify.com/columns/fullstory.php?id=14790094

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்