உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, December 06, 2007

ஏய் தோழா! முன்னால் வாடா!

உயிர் காப்பான் தோழன் என முன்பு சொல்லி வைத்தார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது . ஆனால் கார்ப்பரேட் உலகில், வானளாவ உயர்ந்திருக்கும் அநேக கார்ப்பரேட்களுக்கு உயிர் கொடுத்தது தோழர்கள் தாம் என்றால் அது மிகையாகாது. இன்றைக்கு வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் அநேக கார்ப்பரேட்களின் ஆரம்ப காலத்தை திரும்பிப்பார்த்தால் இரு தோழர்களின் விடா முயற்சி இருந்திருக்கும்.

மென்பொருள் ஜையண்ட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவ பில்கேட்ஸுக்கு பால் ஆலன் உறுதுணையாய் இருந்தார். (Microsoft-Bill Gates and Paul Allen)நம் எல்லாருக்கும் அபிமானமான கூகுள் தேடு பொறியை உருவாக்கியதில் நண்பர்கள் லேரி பேஜ்க்கும் செர்ஜி ப்ரின்-குக்கும் பங்கு உண்டு. (Google-Larry Page and Sergey Brin)


போர்ட்டல் மன்னன் யாகூ உருவாக ஜெர்ரி யாங்-கும் டேவிட் பிலோவும் கூட்டு சேர வேண்டியிருந்தது. (Yahoo-Jerry Yang and David Filo)

டேட்டாபேஸ் புகழ் ஆரக்கிளை உருவாக்க லேரி எலிஸன், பாப் மைனர் என இருவர் தேவைப்பட்டார்கள். (Oracle-Larry Ellison and Bob Minor)
சிறுசுகளை விளாசிக்கொண்டிருக்கும் இன்றைய ஹீரோ மைஸ்பேசை உருவாக்க தாமஸ் ஆண்டர்சனும் கிறிஸ்டோபர் டிவோல்பும் இணைந்து உழைத்தார்கள். (Myspace-Thomas Anderson and Christopher DeWolfe)

இளசுகளை இசையால் மயக்கும் ஐபாட் உருவாக்கிய முண்ணணி நிறுவனமான ஆப்பிளை உருவாக்க ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு ஆரம்பகாலத்தில் இன்னொரு ஸ்டீவ் துணையாய் உடனிருந்தார். (Apple-Steve Jobs and Steve Wozniak)


ஏன்? வன்பொருள் வித்துவான் கார்டன் மூர்-க்கு கூட இண்டெலை நிறுவ நண்பன் ராபட் நோய்ஸ்-ன் உதவி தேவையாய் இருந்தது. (Intel-Gordon Moore and Robert Noyce)

Single Founder கம்பெனிகளை விட இது மாதிரி Co-Founder சகிதம் வந்து கலக்கிய கம்பெனிகளே அதிகம் போல் தெரிகின்றது.

தனியே, தன்னம் தனியே சாதிப்பதை விட இருவராய் அல்லது சிறு குழுவாய் அதிகம் சாதிக்கலாம் என இவர்கள் எடுத்துக்கூறுகின்றார்கள். நம்மூரில் கூட இன்போஸிஸ், சன் டிவி நெட்வொர்க் போன்ற பல வளர்ந்த நிறுவனங்களின் வரலாற்றை திருப்பி பார்த்தால் கடுமையாய் உழைத்த இருவர் அல்லது ஒரு குழு கண்ணில் அகப்படும்.

அகத்தில் அசாத்தியமானதொரு கருவோடு, கொஞ்சம் கனவுகள், பெரிய தரிசனங்களுடன் அலைகின்றீர்களா?. நல்லதொரு தோழனைத் தேடுங்கள். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என சும்மாவா சொன்னார்கள்?


"தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை" தமிழில் மென்புத்தகம் An AutoBiography of Periyar Tamil ebook Download. Right click and Save.http://static.scribd.com/docs/a60798inps30t.pdf


Email PostDownload this post as PDF

Related Posts by Categories3 comments:

TamilNenjam said...

சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம் - பாகம் 2' இங்கே இந்தத் தளத்தில் உள்ளது

http://www.esnips.com/doc/8389a0fb-60e2-4a88-869c-799db74f7ff7/Sujathas-Pirivom-Santhipom-Part2

இளைய கவி said...

Dear Mr. P.K.P,

can you plz explain why my feedsubscribers are not geting my mail in unicode format ( in yahoo )? cuz i dont know how to slove this problem. but there is no prob with gmail. plz help me in this case

Bruno said...

What about Hewlett Packard

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்