உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, December 10, 2009

ஆகுமெண்டட் ரியாலிட்டி

சில துறைகளில் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் வெளிஉலகுக்கு அதிகமாக தெரியவர வருவதில்லை. இந்நுட்பங்கள் பிற துறைகளில் அதிகமாக பயன்படுத்தப்படாததே அதன் காரணம். உதாரணமாக தொலைக்காட்சி மீடியாக்களை எடுத்துக்கொள்ளலாம். செய்தி நேரத்தின் போது நம்மை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே புள்ளிவிவரங்களை கொட்டி இனிய தமிழில் செய்தி வாசிப்பார்கள். சில ஷோக்களில் பேசுபவர்கள், விழிகளை நம்மீதிருந்து எடுக்காமலேயே அடுக்கு மொழியில் பல விவரங்களை அடுக்கிக்கொண்டே போவார்கள். இதெல்லாம் எப்படி சாத்தியம்?. அத்தனை விசயங்களையும் அவர் நினைவில் வைத்துக்கொண்டா பேசுகின்றார் என்றால் இல்லை, அங்கே டெலிபிராம்டர் எனும் கருவி அவர்களுக்கு உதவிக்கு வருகின்றது. அவர்கள் முன்னால் இருக்கும் மானிட்டர் ஒன்றில் இவர்கள் பேசும் பேச்சு ஏற்கனவே எழுதப்பட்டு இவர்கள் வாசிக்கும் வேகத்துக்கு ஒருவர் அதை ஸ்க்ரோல் பண்ணிக்கொண்டே வருகின்றார் என்பது தான் உண்மை. சிலரின் டெலிபிராம்டர்கள் இடையே மக்கர் செய்ய, உடனே வாசிப்பவர் படும் அவஸ்தை (வீடியோ) கொடுமையானது. இங்கே டாக் ஷோ பிரபல Bill O'Reilly-ன் டெலிபிராம்டர் மக்கர் செய்ய என்ன நடக்குதுவென பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=Qy-Y3HJNU_s

ஆகுமெண்டட் ரியாலிட்டி என்று இன்னொரு நுட்பம் (Augmented Reality) அது தொலைக்காட்சி ஒளிபரப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இப்போது பொது ஜனங்களும் எட்டும் அளவில் வந்துகொண்டிருக்கின்றது. கிரிக்கட் மைதானத்தில் ஒருவர் ஓட அவரையே தொலைக்காட்சியில் ஒரு அம்புகுறி துரத்துவதை பார்த்திருப்பீர்கள். நிஜவாழ்வு பொருளோடு கணிணியை பின்னிவிடுவது தான் இந்த AR வழி செய்யும் முயற்சி .உதாரணத்துக்கு கிரிக்கட் மைதானத்தில் பெரிய பெப்சி விளம்பர பில்போர்டு இருந்தால் அதை தொலைக்காட்சி சேனல்காரர்கள் உங்களுக்கு கோக்காக மாற்றி காட்டமுடியும். முழு விளையாட்டின் போதும் அந்த விளம்பர தட்டி உங்களுக்கு கோக் விளம்பரத்தையே காட்டும். வீடுகளில் ஒற்றைக்கு ஒன்றாய் இருக்கும் குழந்தைகள் திரையில் தோன்றும் கார்டூன் கதாபாத்திரங்களோடு நிஜ உலகில் ஓடி ஆடி விளையாடலாம் (வீடியோ). ஐபோன் கேமராவில் தெருவை நோக்கினால் பக்கத்திலிருக்கும் கட்டிடங்களை, ரெஸ்டார்ண்டுகளை லைவாக அது அம்புகுறியிட்டு காட்டி விளக்கும்(படம்). இப்படி இந்த ஆகுமெண்டட் ரியாலிட்டி பொதுவாழ்க்கைக்கு வந்தாலும் வந்தது அதன் சாத்தியக்கூறுகள் கட்டற்று போய்க்கொண்டே இருக்கின்றது.


”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
-தாகூர்









செ.கணேசலிங்கன் “நீண்ட பயணம்” தமிழ் புதினம் மென்புத்தகம். Se.Ganesalingam "Neenda Payanam" Novel in Tamil Pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, December 08, 2009

எங்கே போகும் இந்தப் பாதை?


இந்த தேங்க்ஸ் கிவிங்கோடு ஒன்று மட்டும் புரிந்தது. சாதாரணமாக ரெஸ்டாரெண்டுகளில் மட்டுமே காணப்படும் நுகர்கலாச்சாரம், அது சில்லறை வணிகத்திலும் புகுந்துவிட்டதென. இங்கே ரெஸ்டாரெண்டுகளில் அத்தியாவசியமான தண்ணீர் கொடுக்கமாட்டார்கள். பதிலாக பீனக்கலோடாவோ அல்லது பீரோ விட்டுக்கொண்டு கரோகே பாடவேண்டும் பெரும்பாலும் பவுன்சர்கள் தேவைப்பட மாட்டார்கள். பிகேவ் யுவர்செல்ப் தான். வெஜிடேரியன்கள் சோடாவில் நிற்பார்கள். அதுபோலவே மால்களிலும் ஆன்லைன்மால்களிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை கூடி இருக்க அநாவசிய பொருட்களின் விலை வெகுவாக சரிந்திருந்தது. Nokia 5530 மாடல் 129-டாலருக்கும் , காம்பேக் நெட்புக் ஒன்று 189 டாலருக்கும், நெட்பிளிக்ஸ் இணைய இணைப்பு கொண்ட 47 இஞ்ச் LG டிவி 897 டாலருக்கும், 500Gig Western digital டாலர் 50க்கும், டொசிபா புளூரே பிளயர்கள் டாலர் 80 க்குமென சோற்றைத்தவிர மிச்சமெல்லாம் விலை குறைந்திருந்தது. அப்படித்தான் நினைத்திருந்தேன்.

பர்கர்கிங்கில் தினம் நாலு டாலருக்கு ரெண்டு சாண்ட்விச் டீலை நினைவுபடுத்தினான் கோபால். எல்லாரும் கிடைத்தவரைக்கும் துட்டை கறக்கப்பார்க்கின்றார்கள்.

ஆன்லைன் டீல்கள் பிடிக்கும் சூட்டைப்பார்த்தால் சீக்கிரமே சாலையோரத்தில் நிமிர்ந்து நிற்கும் மெகாமால்களெல்லாம் நடைகட்டிவிடும் போலிருக்கின்றது. ஏற்கனவே பரவிக்கிடந்த பார்ன்ஸ் அண்ட் நோபிள்ஸ்கள் இப்போது எண்ணும் எண்ணிக்கையிலேயே. நாம் கடையேறும் காலங்கள் சீக்கிரமே மலையேறிவிடும். எல்லா ஆன்லைன் டீலும் போக, புதிதாக அறிமுகமாகியிருக்கும் Bing Cashback ஆன்லைனில் இன்னும் அதிகமாக வாங்க உற்சாகமூட்டுகின்றது. அமெரிக்காவில் வாழும் நம்மவர்கள் முயன்றுபார்க்கலாம். அதிகம் சேமிக்கலாம்.

ஆன்லைன்மால்கள் நிஜக்கடைகளை மூடிவிட,ஆன்லைன் பேங்கிங் பல கிளைகளை மூடிவிட, மின்னஞ்சல்கள் தபால் துறையை பலி கேட்க, இணைய செய்தி மூலங்கள் காகித செய்திதாள்களை காவுகேட்க எல்லாமே இணையம்வழி இருப்பதால் பலதுறைகளும் வேலைவாய்ப்புகளும் சாவின் விளிம்பில். தொழில்நுட்ப வசதிகள் பெருகப் பெருக பலரின் வாழ்க்கை வசதியானாலும் யாரோ பலருடைய வாழ்க்கை எங்கேயோ பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


”காலம்....!! விலைக்குக் கிட்டாது!
விரும்பியும் திரும்பாது!









ஜெயின் தர்மம் இரண்டாம் அத்தியாயம் மென்புத்தகம். Jain Dharma in Tamil Pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, December 07, 2009

தமிழ் தொழில்நுட்ப பதிவர்கள் - என்டிடிவி ஹிண்டுவில் பேட்டி

என்டிடிவி ஹிண்டுவில் (”Reliance Big TV Byte It”) ஒளிபரப்பான தமிழ் தொழில்நுட்ப பதிவர்கள் பேட்டி இங்கே உங்கள் பார்வைக்கு. நண்பர் வடிவேலன் உட்பட நம் தமிழ் தொழில்நுட்ப பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கலக்குறாங்க. (இந்த வீடியோவில் கணிணியில் தமிழில் எப்படி எழுதுவதுவென மூன்று வித டிப்சும் கொடுத்திருக்கிறார்கள்)

மேலே ஒளிப்படம் தெரியவில்லையா?
யூடியூப் வீடியோவை பார்க்க இங்கே சொடுக்கவும்
http://www.youtube.com/watch?v=YrXRI2S3gLg


”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"
-விவேகானந்தர்









வ.ந.கிரிதரன் “அமெரிக்கா” சிறுகதைகளும் குறுநாவலும் மென்புத்தகம். Va.Na.Giritharan "America" Tamil Short stories and a Short Novel Pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, November 24, 2009

புரட்டும் வடிவில் மென்புத்தகங்கள்

மென்புத்தகங்களை Pdf வடிவில் படிக்கும் போது சீக்கிரமே அலுப்பு தட்டிவிடுகின்றது. சிலர் மென்புத்தகங்களை சேகரிப்பதோடு சரி. வாசிப்பது என்னமோ அபூர்வம் தான்.சிலர் மென்புத்தகங்களை அதிக ஆர்வமாய் வாசிக்க விழையும் போது அதை வீட்டு பிரிண்டரிலேயே அச்சிட்டு படிக்க முயல்வதும் உண்டு. அதிவேக லேசர் பிரிண்டர்கள் தாம் இப்போது வீடுகளுக்கு கூட கைகூடும் விலைக்கு வந்துவிட்டதே. ஆனாலும் சில டெவலபர்கள் மென்புத்தகங்களை மென்புத்தகவடிவிலேயே நம்மை படிக்க செய்ய
போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒன்று தான் அதை புரட்டும் புத்தகவடிவிலே தருவது.http://www.scribd.com போலல்லாது http://issuu.com-ல் ஏற்றம் செய்யப்படும் மென்புத்தகங்களை நீங்கள் புரட்டும் வடிவிலேயே அதாவது சாதாரண காகிதபுத்தகங்களை எப்படி புரட்டுவோமோ அதே புரட்டும் எஃபக்டில் படிக்கலாம். உதாரணத்துக்கு இங்கே ஒரு தமிழ் மென்புத்தகத்தை பாருங்கள்.
http://issuu.com/siva_asokan/docs/englishtotamildictionary

இது போன்ற வழங்கல் நம்மை மேலும் படிக்க தூண்டுவதாக உள்ளது. ஆனாலும் எல்லாம் இணைய இணைப்பு இருக்கும் வரை மட்டும் தான். இணைய இணைப்பு இல்லாத போதும் உங்கள் புத்தகங்களை இதே “எஃபக்டில்” படிக்க நீங்கள் http://www.spotbit.com/ தளத்தை அணுகலாம். இவர்கள் நீங்கள் கொடுக்கும் மென்புத்தகத்தை .exe வடிவில் மாற்றி உங்களுக்கு தர அதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் படிக்கலாம். இணைய இணைப்பு இல்லாத போதும் படிக்கலாம்.

இணையத்தில் எங்கும் அப்லோடு செய்யாமலே என்னிடம் இருக்கும் pdf கோப்புகளை புரட்டும் புத்தகவடிவில் காட்ட எதாவது மென்பொருள் இருக்கிறதாவென தேடியதில் POKAT reader கிடைத்தது. இதை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிவிட்டால் உங்கள் கணிணியில் உள்ள எல்லா pdf கோப்புகளையும் அது புரட்டும் புத்தகவடிவில் காட்டும். நீங்கள் படிக்கும் pdf புத்தகங்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து அது தனியாக ஒரு மென்நூல் நூலகம் ஒன்றையும் பராமரிக்குமாம்.
Download Free POKAT reader

மென்புத்தகங்களை படிக்க இனி தனி ஆர்வமே வரும் போல தெரிகின்றது. பார்க்கலாம்.


”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.
இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.













பெரியார் “சித்திரபுத்திரன் விவாதங்கள்” மென்புத்தகம். Periyaar "Chithiraputhiran Vivathangal" Tamil Pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Friday, November 20, 2009

இணையத்தை அச்சடித்தால்...

மரங்களையெல்லாம் பேனாவாக்கி, கடல் நீரையெல்லாம் மையாக்கி, பூமியை அப்படியே விரித்துப் போட்டு காகிதமாக்கி ஆயுள்முழுக்க எழுதினாலும் இறைவனின் பெருமையை நம்மால் எழுதி விட முடியாது என்பார்கள். அது இருக்கட்டும்.நம்ம இணையத்தின் பெருமையை பார்க்கலாமா?. மொத்த இணையத்தையும் நீங்கள் அச்செடுத்துவைத்துக்கலாமே என்ற விபரீத ஆசை கொண்டிருந்தால் அதை நீங்கள் கிமு1800-றிலேயே பாபிலோனியர்களோடு சேர்ந்து தொடக்கியிருக்க வேண்டுமாம். அப்போதுதான் இந்த வருடமாவது அச்செடுத்து முடித்திருப்போம். அதையெல்லாம் நீங்கள் பொறுமையாக படிக்க நினைத்தால் போச்சுது 57,000 ஆண்டுகள் ஆகுமாம். அதுவும் இரவு பகல் விடாது தொடர்ந்து படிக்க வேண்டியிருக்கும். அதுவே தினமும் படுக்குமுன் 10 நிமிடம் மட்டும் தான் படிப்பேன் என நீங்கள் அடம் பிடித்தால் 8,219,088 ஆண்டுகள் ஆகிவிடுமாம். இப்பவே கண்ணக் கட்டுதோ. அப்படியென்றால் இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இதே இணையம் எப்பாடு பட்டிருக்குமோ?



நேற்று அசாத்தியமாய் இருந்தது,
இன்று சாத்தியமாகும் அற்புதத்தை
ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம் - காந்திஜி









ராஜம் கிருஷ்ணன் “காலம்தோறும் பெண்” சமூகவியல் ஆய்வு தமிழ் மென்புத்தகம். Rajam Krishnan "Kalamthorum Pen" Tamil Social pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, November 17, 2009

ஒரு அவுன்ஸ் ஐம்பது டாலர்

மேற்கத்திய தெருமுனை ஒன்றில் ஒரு அவுன்ஸ் தங்கத்தை 50 டாலருக்கு விற்க முயன்றிருக்கிறார் ஒரு நபர். (வீடியோ இங்கே). யாரும் வாங்குவதற்கில்லை. ஏனெனில் அவர்களுக்கு தங்கத்தைப்பற்றி தெரிந்தது அவ்வளவு தான். காஸ்ட்லி பிராண்டுகளையெல்லாம் தெரியும். பார்த்த மாத்திரத்திலேயே அதன் விலையையும் சொல்லுவார்கள் ஆனால் தங்கம் போகும் போக்கை அவர்கள் உணர்ந்ததில்லை உண்மையில் இன்றைக்கு தங்கத்தின் விலை அவுன்சுக்கு டாலர் 1120க்கும் மேல் போகும்.

போட்டி போட்டுக்கொண்டு Dow-வை முந்தி தங்கம் போய்க்கொண்டிருக்கின்றது. காகித பணத்திலுள்ள நம்பிக்கை கம்மியாகும் போதெல்லாம் மக்கள் இப்படி தங்கத்தின் மேல் பாரத்தை போடுவது வழக்கம். இக்காலங்களில் காகிதப்பணத்தின் மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை ரொம்பவே அற்றுப்போயிருக்கின்றது. இப்படித்தான் பொருளாதாரத்தில் மெத்தப்படித்த நம் பிரதமருக்கும் தோன்றியிருக்கும் போலும். அவரே அதை பிரதிபலிப்பது போல சைலண்டாக 200 டன் தங்கத்தை IMF இடம் இருந்து வாங்கச்சொல்லிவிட்டார். இந்திய ரெசர்வ் வங்கி அதை அவுன்சுக்கு $1,045 கொடுத்து வாங்கியிருக்கின்றது. அதாவது ஏறக்குறைய $6.7 பில்லியன் டாலர் தாள்கள் ஒரே நாளில் தங்கமாக மாற்றப்பட்டிருக்கின்றது. பொதுவாக ரெசர்வ் வங்கிகள் தங்கத்தை விற்பதுதான் வழக்கம். இப்போது பல ரெசர்வ் வங்கிகளும் தங்கத்தை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி குவித்துக் கொண்டுள்ளனர். எல்லாம் டாலர் போன்ற காகித பணத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பது தான் காரணம். இதனால் சராசரி ஜனம் தங்கம் வாங்க தவிக்கவேண்டியுள்ளது. பெரிதும் அவதிக்குள்ளாவது நம்மூர் ஜனங்கள் தான். வேண்டினாலும் வேண்டும் சுத்த தங்கமல்லோ நமக்கு வேண்டும். 1931-ல் பிரிட்டனும் 1971-ல் அமெரிக்காவும் Gold Standard-ஐ விட்டு விலக பொன்பாளங்களுக்கு நல்லக்காலம் துவங்கியது. கரன்சிகளோ காற்றில் பறக்கத் துவங்கின. ஒரு கணக்கீடுபடி இந்தியா 757.7 டன் தங்கபாளங்கள் வைத்திருப்பதாக சொல்கின்றார்கள். எங்கே ஒளித்து வைத்திருக்கின்றார்கள் என தெரியவில்லை.மும்பையிலாயிருக்கும்.

நியூயார்க் மன்காட்டனின் வால்ஸ்டிரீட் பக்கமாய் பலமுறை நடந்து போயிருக்கின்றேன். ஆனால் 5,000 டன் தங்க கட்டிகள் மேலே நான் நடந்திருக்கிறேன் என்பதை நான் உணர்ந்ததில்லை. அங்கே சப்வேக்கும் கீழே 30 அடியில் நிலத்தடி பங்கர்அறைகளில் இந்த 540,000 தங்க கட்டிகளை பாதுகாத்து வைத்துள்ளார்களாம் சுற்றிலும் பாறைகள் வெளி காற்று, நீர் உள்ளே புகா அறைகள். இங்கிருக்கும் தங்கம் முழுவதும் அமெரிக்காவுக்கு சொந்தமானதல்ல. உலகின் பல்வேறு நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் சொந்தமானது. பத்திரமாக இருக்கட்டுமேனு இங்கே வைத்துவைத்திருக்கின்றார்கள். என்ன நம்பிக்கையிலோ? தெரியவில்லை உலகின் 25% தங்கம் இங்கு தான் உள்ளதாம். இதில் வெறும் 5 சதவீதம் தான் அமெரிக்க அரசுக்கு சொந்தமானது. அமெரிக்காவின் மொத்த 8,133.5 டன் தங்க இருப்பில் மிச்ச 4,603 டன் தங்கம் இருக்கும் இடம் கென்டகியிலுள்ள Fort Knox.(மேலே படம் பிசியான சென்ட்ரல் லண்டன் Old Lady of Threadneedle Street-ன் நிலத்தடியேயுள்ள Bank of England-ன் தங்க அறை. நீங்கள் பார்ப்பது வெறும் 15,000 தங்க கட்டிகள் அதாவது 210 டன் தங்கம் தான். அங்கே மொத்தம் 4,600 டன் தங்கம் உள்ளதாம்)

“தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அது தரத்திலே குறைவதுண்டோ”-ன்னு ஒரு பாட்டு உண்டே அது உண்மையா பொய்யாவென கேட்டான் கோபால். ஏண்டா அப்படி கேட்கிறேனு கேட்டா பொய்களை கவிதையாக்காதீர்னு கவிஞர்களுக்கு வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளாரேன்னான். அவனு(ரு)க்கு ரொம்ப குறும்புதான்.


உனக்கு நிறைய தெரிந்திருந்தாலும்
உன் தொப்பியிடமும் யோசனை கேள்









சதங்கா “சிறுகதைகள் பன்னிரண்டு” தமிழ் மென்புத்தகம். Sathanga "Sirukathaikal Panirendu" Tamil Short Stories pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, November 16, 2009

இலவசங்களின் அருமை

கேமராக்களை வைத்து சுட்டு கிடைக்கும் வீடியோக்களில் சில வகையான AVI கோப்புகள் நம் ஹார்ட்டிரைவில் கன்னாபின்னாவென அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளுகின்றன. இதனை Mpeg கோப்புகளாக மாற்றினால் கோப்புகளின் அளவு கணிசமாக குறைவதோடு பெரிதாக தரமும் இழப்பதாக தெரியவில்லை. இப்படி 5Gig AVI கோப்பு ஒன்றை Mpeg ஃபார்மேட்டுக்கு மாற்றியதில் 1Gig ஆக மாறி ஹார்ட்டிரைவில் நிறைய எக்ஸ்ட்ரா இடம் கிடைத்தது . தரமும் நன்றாக இருந்தது.

Vlc media player-ல் இருக்கும் இன்னொரு அதிகமாக அறியப்படாத வசதி அதிலிருக்கும் வீடியோ/ஆடியோ கன்வர்டர் (Video/Audio converter). கொடுக்கப்படும் பலவிதமாக வீடியோ அல்லது ஆடியோ ஃபார்மேட் கோப்புகளை நமக்கு தேவையான வீடியோ அல்லது ஆடியோ ஃபார்மேட்டாக மாற்ற அதன் Convert வசதி உதவுகின்றது.

விஎல்சி மீடியா பிளயரை திறந்து அதில் Media-வை கிளிக்செய்து.
அதில் Convert/Save என்பதை தெரிவு செய்யவும்.

இங்கே File சட்டத்தில் Add-ஐ சொடுக்கி உங்கள் கோப்பை அங்கே சேர்த்து விடவும்.

இப்போது கீழே Convert/Save என்பதை சொடுக்கினால் அங்கே ஒரு புதிய Convert எனும் சட்டம் தோன்றும். அங்கே Profile என்பதில் எந்த ஃபார்மேட்டாக மாற்ற வேண்டுமோ அந்த ஃபார்மேட்டை தெரிவுசெய்யவும். பின் Start-யை கிளிக்கினால் உங்கள் வீடியோ தேவையான ஃபார்மேட்டுக்கும் மாற்றப்பட்டு விடும்.


நண்பர் “உருப்புடாதது_ அணிமா” நினைவு படுத்திய Track Synchronization வசதியையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். சில சமயங்களில் மூவி பார்க்கும் போது அதன் வீடியோவானது முந்திசென்று ஒலி லேட்டாக வர அது எரிச்சலூட்டிக்கொண்டிருக்கும்.

வீடியோவில் தோன்றும் மனிதர்களின் வாயசைவுக்கு ஒலிக்கும் வார்த்தைகள் ஒத்திருப்பதில்லை. இதை சரிசெய்ய உதவுவது தான் இந்த டிராக் சிங்க் வசதி.Vlc media player-ல் Tools-->Track Synchronization-ல் நொடிகளை கூட்டி குறைத்து ஆடியோவை
வீடியோவுக்கு இணையாக்கி கொண்டுவரலாம். சப்டைட்டில்கள் கூட கட்டுப்பாடின்றி ஓடினால் அவற்றையும் நம் வேகத்துக்கு கொண்டுவர இதில் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இலவசங்களின் அருமை நமக்கு பலவேளை தெரிவதில்லை என கோபால் அடிக்கடி சொல்லுவான். நிஜம் தான் போலும்.


எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்.
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.











எஸ்.திருச்செல்வம் “மகாகவி பாரதி வரலாற்றுச்சுருக்கம்” தமிழ் மென்புத்தகம். S.ThiruSelvam "Mahakavi Bharathi Varalaatru Surukkam" in Tamil pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Thursday, November 12, 2009

வருமா வெள்ளிக்கப்பல்கள்?

நாளை நவம்பர் 13. பிரபலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஹாலிவுட் திரைப்படம் ட்வெண்டி ட்வொல்வ் "2012" வெளியாகின்றது. 2012 டிசம்பர் 21-ல் என்ன நடக்கலாம் என்பது தான் இந்த படத்தின் கதை. இன்னொரு முறை உலகத்தை திரையில் அழித்து பார்க்க முயன்றிருக்கின்றார்கள். எல்லாம் மாயன் காலண்டர் கொடுத்த திரைக்கதை தான். இந்த மாயன்கள் காலண்டர் பைத்தியம் பிடித்திருந்தவர்கள். நம் காலண்டரை விட மிகத்துல்லியமான நாட்காட்டியை கொண்டிருந்தார்கள். இருபது காலண்டர்கள் வரைக்கும் பயன்படுத்தினார்களாம். அதில் மூன்று மிகப் பிரபலமானவை. மத்திய அமெரிக்கா மெக்சிக்கோ பகுதிகளில் கிபி 900களில் உச்சகட்டத்தில் வாழ்ந்திருந்தார்கள். எதோ ஒரு காரணத்தால் சிந்துசமவெளி நாகரீகம் போல் இதுவும் அழிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இவர்கள் கொண்டிருந்த வானியல் ஞானம் இன்றும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாய் இருக்கின்றது. பூமி தனது அச்சில் ஒவ்வொரு 72 ஆண்டுகளும் ஒருமுறை ஏறத்தாழ ஒரு டிகிரி நெகிழ்வதைக்கூட இவர்கள் கணக்கிட்டிருக்கிறார்களாம். கணிணிகள், டெலஸ்கோப்புகள் இல்லாத காலத்திலே இது சாத்தியமாகியிருக்கின்றது அவர்களால். சிலர் அழிந்து போன இன்னொரு புகழ்மிகு நாகரீகமான அட்லாண்டிஸ் மக்களிடமிருந்து தான் இவர்கள் இவ்வித்தைகளை கற்றுக்கொண்டார்கள் எனக் கூறுவதும் உண்டு.

மாயன் காலண்டர் மொத்தம் ஐந்து சுழற்சிகளைக் கொண்டதாம். ஒரு சுழற்சிக்கு 5125 ஆண்டுகள் . அதாவது மொத்தம் ஏறத்தாழ 26000 ஆண்டுகள். ஒவ்வொரு 5125 ஆண்டுகள் முடியும் போதும் பூமியில் மிகப்பெரியதொரு மாற்றம் அலல்து அழிவு உண்டாகும் என்பது ஐதீகம். இப்போது நாமிருக்கும் இந்த ஐந்தாவதான மற்றும் இறுதியான சுழற்சி ஆகஸ்ட் 11 கிமு 3114-ல் தொடங்கியதாகவும் வரும் 2012 டிசம்பரில் இந்த 5125 ஆண்டுகள் சுழற்சி நிறைவுபெறப்போகின்றதாகவும் சொல்கின்றார்கள்.இதனால் என்னவெல்லாம் நடக்க போகின்றது என்பது பற்றி சூடாக பேசப்பட்டு வருகின்றது. இதற்கெல்லாம் 1987-லேயே 25-ஆண்டுகள் கவுண்டவுன் தொடக்கிவைத்தவர் Law of Time நிறுவனர் José Argüelles. இவரின் கூற்று படி 2012 ஆண்டில் மக்களெல்லாரும் தங்கள் உணர்வுகளில் முக்திபெற்று ஒரு உயர்ந்த நிலையை அடைவார்கள். எளிய வாழ்க்கை, சூரிய சக்தி தொழில்நுட்பம், தோட்டங்கள் நடுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருப்பர். அவர்கள் தங்களுக்குள்ளே டெலிபதி முறையில் பேசிக்கொள்வார்கள். இப்படியான ஆன்மாவில் உயர்நிலை அடையாத மனிதர்களையெல்லாம் ”வெள்ளிக்கப்பல்கள்” வந்து கொண்டு போய்விடும் எனக் கூறியிருக்கின்றார்.

2012 படத்தோட முன்னோட்டத்தை பார்த்தாலேயே பேசாமல் வெள்ளிக்கப்பலில் போய்விட்டால் தேவலாம் போலிருக்கின்றது.(மேலே படம் ஒரு 2012 பட போஸ்டர். 2016-ல் ஒலிம்பிக் நடக்கவிருக்கும் பிரேசில் ரியோடிஜெனிரோவில் இருக்கும் மிகப் பெரிய யேசு நாதர் சிலை அழிவில் கீழே விழும் காட்சி)


உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம்.
ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல.
அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா?
அடிச்சு யாரைத் திருத்த முடியும்?
-முள்முடியில் தி.ஜானகிராமன்











வி.ஏ.சிவராசா ”எண்ஜோதிடம்” தமிழ் நியூமராலஜி மென்புத்தகம்.V.A.Sivaraasa "Enjothidam" Numerology in Tamil pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, November 09, 2009

விடுபட்டன

முந்தைய நமது ”(தபால்) தலை சிறந்த சில” என்ற தலைப்பில் வழங்கிய தபால் தலைகள் படத் தொகுப்பில் சில பிரபல தலைகள் விடுபட்டிருப்பதாக சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். “நல்ல தொகுப்பு. அறிஞர் அண்ணாவின் நினைவாக வெளியிடப்பட்ட தபால் தலை கிடைக்கவில்லையா?” “நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் அஞ்சல் தலை என் நண்பரிடம் இருக்கிறது. அதை இந்தத் தொகுப்பில் எப்படி சேர்ப்பது.” என சிலர் கேட்டிருந்தார்கள். இதையெல்லாம் படித்தாரோ என்னவோ யாரோ ஒரு நண்பர் அங்கே விடுபட்டிருந்த சில அஞ்சல் தலைகளையெல்லாம் தொகுத்து இங்கே நமக்கு அனுப்பியிருந்தார். அந்த நண்பருக்கு நம் நன்றிகள்.
படத்தை சொடுக்கி பெரிதுபடுத்தி பார்க்கலாம்.



நேற்றைய பொழுதும் நிஜமில்லை
நாளைய பொழுதும் நிச்சயமில்லை
இன்றைக்கு மட்டுமே நம் கையில்








வான்மீகரும் தமிழும் மென்புத்தகம் Valmiki and Tamil pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Thursday, November 05, 2009

கையிலேயே வெண்ணை

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டே நெய்க்கு அலைவதைப் போல ஆட்டைத் தோளில் போட்டுக் கொண்டே அதை தேடுவது போல சில சமயங்களில் நாமும் சில விசயங்களை கையில் வைத்துக்கொண்டே வேறெங்கெங்கோ அவைகளை தேடிக்கொண்டிருப்போம். அப்படி ஒரு சில்லி விசயம் தான் நான் இங்கு சொல்ல வருவதும். வலையிலிருந்து இறக்கம் செய்த சில முக்கியமான வீடியோ படங்களை ஓட்டும் போது அல்லது நீங்களே உங்கள் கேம்கார்டர் வழி சூட்டிங் செய்த உங்கள் சில வீடியோ படங்களை கணிணியில் பார்க்கும் போது சில சமயம் அந்த வீடியோ படங்கள் தலைகீழாக ஓட நேரிடலாம். சில என்கோடர்கள் செய்த தவறினால் இவ்வாறு நேரிடும். அதற்கென்ன இது போன்ற தருணங்களில் அவைகளை தலை நிமிர்த்தி பார்க்க என்ன செய்வதாம். நண்பனைப்போல அவசரத்தில் லேப்டாப்பை சாய்த்துபோட்டு பார்க்கும் அதீத முயற்சியெல்லாம் வேண்டாம். கூகிளிலும் ஏதாவது மென்பொருள்கள் கிடைக்குமாவென தேடவேண்டாம். வீடியோக்களை இஷ்டப்படும் கோணத்திற்கு சாய்த்து கவிழ்த்து பார்க்கும் வசதி நம்மிடம் ஏற்கனவே இருக்கும் VLC media player-ரிலேயே உள்ளது. இதோ அதற்கான வழி.

VLC media player-ல் Tool-ஐ கிளிக் செய்யவும் அதில் Effects and Filters-ஐ தெரிவு செய்யவும்.

இப்போது படத்தில் நீங்கள் கீழே பார்ப்பது போல Adjustments and Effects என ஒரு பெட்டி வரும். இதில் Video Effects-ஐ தெரிவு செய்யவும்.

அங்கே நீங்கள் படத்தில் கண்டபடி Transform என்பதை ”டிக்” செய்து அங்கே Flip horizontally அல்லது Rotate by 90 degrees என தெரிவு செய்து பல கோணங்களில் நீங்கள் லைவாக வீடியோவை மாற்றி பார்க்கலாம்.

ஒரேயடியாக வீடியோவை அக்கோணத்திற்கே மாற்ற கீழ்கண்ட இலவசமென்பொருள் உதவலாம்.
Free Video Flip and Rotate software
http://www.dvdvideosoft.com/products/dvd/Free-Video-Flip-and-Rotate.htm


ஓங்கி ஒருவனை அறைந்தால் என்ன,
கடனை நாமம் சாத்தினால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.
-முள்முடியில் தி.ஜானகிராமன்










க.நவசோதி ”ஓடிப்போனவன்” சிறுவர் புதினம் மென்புத்தகம்.Ka.Navasothi "Oodi Poonavan" Tamil Siruvar Novel pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Saturday, October 31, 2009

தேதி வாரியாக ஃபோல்டர்கள்

இந்த முறை சம்மர் படுவேகமாக போய்விட்டது. பாதி சம்மரை மழை ஆக்கிரமித்துக் கொள்ள இப்போது இலைவிழும் காலத்திலேயே கட்டிக்கம்பளிகளை உடுத்த வேண்டியிருக்கின்றது. குறுகிய சம்மரிலும் பீச்சாங்கரைகள் பல சுற்றி வந்தாயிற்று. இந்த முறை Orchard Beach, Oakland Beach, Cooper Beach, Sebago Beach என ஒரு ரவுண்ட் கட்டினோம். வழக்கமான பாயிண்ட் பிளசண்ட் பீச்சும் அட்லாண்டிக் சிட்டி பீச்சும் மிஸ்ஸிங். என் கனான் கேமராவால் சுற்றி சுற்றி சுட்டிறிக்கின்றேன். இந்தியா வந்திருந்தபோது குட்டிக் கொடைக்கானலெனச் சொல்லி கேரளாவை ஒட்டியிருக்கும் பொன்முடி மலைஸ்தலத்திற்கு கூட்டிப்போயிருந்தான் மனோஜ். ஏமாற்றமளிக்கவில்லை. நிறைய சினிமா படமெல்லாம் எடுத்திருக்கின்றார்களாம். தங்கமயிரென அதன் பேரை மாற்றி நேகாவை வெறுப்பேற்றினோம். அடிக்க வந்தாள். மலையாளத்தில் மயிரென்றால் அப்படி ஒரு கெட்டவார்த்தையாம். பொன்மொடி முகில்கள் சூழ்ந்த ஒரு அழகிய மலைப் பிரதேசம். இப்போதைக்கு இயற்கையாய் இருக்கின்றது. சீக்கிரத்தில் சிமெண்ட்ரோடு போட்டு, படிகள் அமைத்து, பிளாட்பாரம் கட்டி இந்த மலைஅழகியையும் கெடுத்துவிடுவார்கள். கிளிக்கியதில் எனது 5 மெகாபிக்சல் படங்களுக்கும் மனோஜின் புதிய 10 மெகாபிக்சல் படங்களுக்கு முள்ள வித்தியாசம் அப்பட்டமாய் கணிணியில் தெரிந்தது. எனது 5MP கனானை ஓரங் கட்டவேண்டும். படங்களை எடுத்த தேதியை பெயராக இட்டு ஃபோல்டர் படைத்து அவற்றை அடுக்குவது எனது பழக்கம். முன்பு Canon ZoomBrowser -எனும் மென்பொருளில் இந்த வசதி இருந்தது. அழகாக படங்கள் கிளிக்கிய நாட்கள் வாரியாக ஃபோல்டர்கள் படைத்து அவற்றை இறக்கம் செய்துவிடும். இப்போது விஸ்டாவின் Import Pictures வசதி இதை எளிமையாக்கி கொடுத்திருக்கின்றது. Tag these pictures-ல் Options-ஐ சொடுக்கி அதில் Folder name-ஆனது Date Taken+Tag ஆக இருக்குமாறு நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்.

படத்தில் அதன் செய்முறை படிகளை நீங்கள் காணலாம்.

உங்கள் கேமராவை அல்லது மெமரிகார்டை இணைத்ததும் விஸ்டாவில் கீழ்கண்டவாறு AutoPlay திரை வரும்.இதில் முதலில்வரும் “Import Pictures using Windows”-ஐ தெரிவு செய்யவும்.

பின் கீழ்வரும் திரையில் Options-ஐ சொடுக்கவும்

பின் வரும் கீழ்கண்ட திரையில் Folder name-ஆனது Date Taken+Tag ஆக இருக்குமாறு நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்.அவ்ளோதான்.



ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.









ரீ.சிவக்குமார் ”நேற்று... இன்று... நாளை!” உங்கள் குழந்தையை முழுமனிதனாக உருவாக்கும் தொடர் மென்புத்தகம். R.Siva Kumar "Netru... Indru... Nalai!" Series in Tamil pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, October 28, 2009

(தபால்) தலை சிறந்த சில

நண்பர் ஸ்ரீராமின் பின்னூட்டத்தை தொடர்ந்து தலைப்பு மாற்றப்பட்டது. முந்தைய தலைப்பு ”(தபால்) தலை சிறந்த தமிழர்கள்”












































நன்றி V.Subramanian


ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.
-நெப்போலியன்.










பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும் மென்புத்தகம்.Pathinettu Siththarkalin vaalvum vaakkum in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்