டிவிடி - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பத்து1.CyberLink PowerDVD அல்லது Corel WinDVD போன்ற காசுகொடுத்து வாங்கும் டிவிடி பிளயர் மென்பொருள்கள் என்னிடம் இல்லை. மெனுவுடன் சப்டைட்டிலும் காட்டும் எதாவது இலவச DVD Player மென்பொருளை பரிந்துரை செய்ய முடியுமா?
VLC media playerhttp://www.videolan.org/vlc/
2.வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும் போதே எளிதாக சத்தத்தை(Volume) கூட்ட ”மேல் நோக்கு அம்புகுறியையும்” சத்தத்தை குறைக்க ”கீழ் நோக்கு அம்புகுறியையும்” வீடியோவில் முன்னோக்கிச்செல்ல ”முன் நோக்கு அம்புகுறியையும்” வீடியோவில் பின்னோக்கிச்செல்ல ”பின் நோக்கு அம்புகுறியையும்” கீபோர்டில் குறுக்கு வழிகளாக பயன்படுத்தும் எதாவது இலவச வீடியோ பிளயர் சொல்லுங்களேன்?
GOM Media Playerhttp://www.gomlab.com/eng/
3.எனது டிவிடியிலுள்ள ஒரு திரைப்படத்தின் பல VOB கோப்புக்களை ஒரே AVI, MPEG அல்லது DivX கோப்பாக சேமித்து வைக்க எதாவது வழி சொல்லுங்களேன்?
bitRipperhttp://bitripper.com/index.html
4.இந்த ஃபார்மேட் வீடியோவை வேறு ஒரு ஃபார்மேட் வீடியோவாக மாற்ற எதாவது இலவச மென்பொருள் சொல்லுங்களேன் ப்ளீஸ்?
SUPER © Simplified Universal Player Encoder & Renderer.http://www.erightsoft.com/SUPER.html
5.மேலே சொன்ன சூப்பர்மென்பொருளை பயன்படுத்த கொஞ்சம் கடினமாக இருக்கிறதே.வேறெதாவது பயன்படுத்த எளிதான மென்பொருள் கொடுக்க முடியுமா?
Quick Media Converterhttp://www.cocoonsoftware.com
6.Nero ,Sonic போன்ற CD / DVD Burner மென்பொருள்களை காசுகொடுத்து வாங்க நான் தயாராயில்லை. எதாவது ஒரு இலவச CD / DVD Burner மென்பொருளை பரிந்துரை செய்ய முடியுமா?
CDBurnerXPhttp://cdburnerxp.se
7.எனது முழு டிவிடியையும் ஒரு ISO கோப்பாக மாற்றி எனது ஹார்ட் டிரைவில் சேமித்து வைக்க வேண்டும்?எப்படி?
CDBurnerXPhttp://cdburnerxp.se
8. ISO கோப்பு வடிவில் எனது கணிணியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு டிவிடி திரைப்படத்தை எப்படி எளிதாக பார்ப்பது?
Virtual CloneDrivehttp://www.slysoft.com/en/virtual-clonedrive.html
9.என்னிடம் இருக்கும் டிவிடி-யிலிருந்து சில காட்சிகளை வெட்டி எடுப்பது எப்படி?
DVD Knifehttp://www.vcsoftwares.com/dk.html
10.இப்போதைக்கு உங்களுக்கு மிகவும் பிடித்தமான டிவிடி பிளயர்?
USB பென் டிரைவை செருக வசதி கொண்ட எல்லா டிவிடி பிளயர்களும்.
![]() பறக்க முடியாவிட்டால் ஓடு! ஓட முடியாவிட்டால் நட! நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல். ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு. |


3 comments:
இது என்னுடைய 100வது பின்னூட்டம் என உங்கள் பின்னூட்டப்புயல்கள் பட்டியல் சொல்கிறது. மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
டிவிடி அகேகே அருமை. இத்தனை இலவச மென்பொருட்களை உலகத்துக்கு வழங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான தொகுப்பு. நன்றிகள் பல!!!
நீங்கள் கொடுத்துள்ள மென் பொருட்களில் ஒருசில எமக்கு மிகவும் உபயோகமாக உள்ளது
Post a Comment