உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, February 15, 2009

மரத்தை நட்டவன்

தக்காளி சாப்பிடுவது ரொம்பவும் நல்லதுவென ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியானது. ஒரு வாரத்திலேயே இன்னொரு விஞ்ஞானிகள் குழு தக்காளி சாப்பிடுவது அவ்வளவு நல்லதில்லை என அறிக்கை வெளியிட்டது. நிறைய தண்ணீர் குடிப்பது நல்லதுவென ஒரு கும்பல் கண்டறிய சில நாட்களிலேயே இன்னொரு கும்பலோ ரொம்ப தண்ணீர் குடிப்பது உடம்புக்கு கெடுதியாக்கும் என்றார்கள்.ஏற்கனவே குழம்பிப்போய் இருக்கும் மக்களை இப்படி அவர்கள் பங்குக்கு குழப்பிக் கொண்டிருப்பர். சூரியனின் அதிக எரிச்சலால் பூமி சூடாகி கடல்நீரெல்லாம் வற்றிப்போய் கொண்டிருக்கிறதுவென ஒருசாரார் கூற இன்னொரு சாராரோ இல்லவே இல்லை குளோபல் வார்மிங்கால் (Global Warming) துருவப் பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயருகின்றது.கடலோர நகரங்கள் சீக்கிரமே கடலுக்கடியில் போனாலும் போய்விடும் அபாயம் இருக்கின்றது என்றார்கள்.இன்னும் குழப்பம்.

மார்கெட்டில் பெரிதாக பேசப்பட்டு இன்றைக்கு பில்லியன் டாலர் பிசினசாகிப் போன "கிரீன் ஹவுஸ் கேஸ்" "குளோபல் வார்மிங்" "கார்பன் எமிசன்" போன்ற ஜார்கன் வார்தைகளெல்லாம் இப்போது சுத்த பிராடு என்கின்றார்கள். "...the worst scientific scandal in history" என்கின்றார் IPCC விஞ்ஞானி Dr.Kiminoir Itoh.1998 வரை என்னமோ சூரியன் தகித்தது உண்மைதானாம். ஆனால் சமீபகாலமாக அவன் சீற்றம் தணிந்து உண்மையில் பூமி கூலாகிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். இன்னொரு ஐஸ்ஏஜ் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம். குளோபல் வார்மிங் பெயரைச் சொல்லி நோபல் பரிசையும் தட்டிச்சென்றவர்கள் இப்போது அதன் பெயரை உசாராக "கிளைமேட் சேஞ்ச்" என்றாக்கி விட்டார்கள். அதாவது இந்த கிரீன்ஹவுஸ் கேசால் தட்பவெப்பநிலையில் அசாதாரண மாற்றங்கள் ஏற்படுகிறதாம். பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. கொஞ்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திருகின்றது.

இதை எழுதிக்கொண்டிருக்கும் போதே கோபால் ஒரு கேள்வி எழுப்பினான்.பூமி 23 1/2 பாகை சாய்ந்திருப்பது உனக்கு தெரியும்.ஆனால் அப்படி சாய்ந்திராவிட்டால் பூமியில் மனித இனமே வாழ்வது கஷ்டகாலமென உனக்குதெரியுமா வெனக்கேட்டான். ஆச்சரியமாகிப் போனது. அந்த பூமியின் சாய்வுதான் உலக நாடுகளில் வெவ்வேறு பருவகாலங்கள் வருவதற்கு காரணமெனவும் அப்படி சாய்ந்திராவிட்டால் ஒரு வேளை பாதி பூமி மனிதர் வாழவே முடியாதபடி கடும் குளிராகவும் இன்னும் பாதி பூமி மனிதனே வாழ முடியாத படி கடும் வெப்பமாகவும் இருந்திருக்கும் என்றான்.நம்பவே முடியவில்லை.யார் அதை சாய்த்திருப்பார்? எப்படி அது லாவகமாக சாய்ந்தது? ஒருவேளை அது பரிணாம வளர்ச்சியின் இன்னொரு தற்செயலான நிகழ்வா? யோசித்துக்கொண்டிருக்கும் போதே "மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்டா" என்ற கோபால் சில நொடிகளிலேயே அன்பே சிவம் கமல் கணக்காய் குறட்டையில் ஆழ்ந்திருந்தான். குழப்பத்திலிருந்தேன் நான்.தண்ணியிலிருந்தானோ?.
அதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் நண்பரைப் பெற்றிருப்பது சிறந்தது.
ஆனால், அதிக உயரங்களிலிருந்து விழும்போது
தாங்கிப் பிடிக்கும் நண்பரைப் பெற்றிருப்பது,
கடவுளின் பரிசு.

ஒன்பதாம் வகுப்பு சிறுகதைகள் தொகுப்பு மென்புத்தகம் இங்கே தமிழில்.9th standard Siru Kathaikal in Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories10 comments:

ஷண்முகப்ரியன் said...

PKP சார்,பூமி கோள வடிவில் உள்ளது.எதை வைத்து அது சாய்ந்திருக்கிறது எனக் கூறுகிறாரகள் எனப் புரியவில்லை.கோளத்தின் உச்சிப் புள்ளியைத் தீர்மானித்த பின்னரே அதன் சாய்வைத் தீர்மானிக்க முடியும்.எனில் எது பூமிக் கோளத்தின் உச்சிப் புள்ளி?

Tech Shankar said...

வித்தியாசமான சிந்தனையில் வேறு தடத்தில் பயணிக்கும் ஒரு நல்ல பதிவு.

நன்றிகளுடன்
தமிழ்நெஞ்சம்.

ஆ.ஞானசேகரன் said...

பிகேபி சார்! நல்ல செய்திகளை எங்கே பிடிக்குரிங்க? நல்ல செய்திகள்

வேலன். said...

மரத்தை நட்டவன் நிச்சயம் தண்ணீர் ஊற்றுவான்.

உலக நியதி அதுதான்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பீலாவான HIV AIDS ஐ மறந்துவிட்டீர்களே!

Anonymous said...

Not able to download the book ( detailed text for 9th Std )
Getting the following error message

Error in count on line 242.
./mydrive/Tamil E Books/9th Siru Kathaikal.pdf is already defined.

Pl.help

ஆட்காட்டி said...

விளக்கத்தை விட்டுட்டீங்க..

வாழவந்தான் said...

கோபாலு சார்..
பூமி சாஞ்சியிருக்குறதாலதான் நாமலாம் வாழுறோம். பூமி நட்டுக்குத்தலா இருந்திருந்தா எல்லாரும் நடுக்குவோம்னு சொல்றீங்களே, அதை இனும் கொஞ்சம் விளக்கமா சொல்லமுடியுமா??

Anonymous said...

Dear PKP,
I posted a couple of comments yesterday and find that they have not been published.I am new to this site and want to know whether the general interaction(between the readers and yourself) would be like this only.
Thanks

Anonymous said...

அந்த கோபல் பார்க்க வேண்டும் போல் உள்ளது அந்த கோபலின் புகைப்படத்தை பார்கலாமா?

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்