ரொம்ப நாளைக்கப்புறமாய் கூகிளிடமிருந்து சத்தமேயில்லாமல் "வாவ்" என சொல்ல வைக்கும் வசதி ஒன்று வெளியிடப் பட்டிருக்கின்றது. வேண்டாம் எனச் சொல்லியும் கேட்காமல் கார் ஷோ பார்க்கப்போகின்றேன் என கடும் பனிப்பொழிவிலும் கிளம்பிச்சென்றான் கோபால். சிக்காகோவிலிருந்து டெட்ராயிட் போக ஐந்து மணி நேரமாகும். பாதிவழியியே அவனிடமிருந்து போன் கால் வந்தது.தெரியாமல் புறப்பட்டு விட்டேன்டா ரோடு எங்கே கிடக்குனே தெரியல்லை பயங்கர ஸ்னோ என்றான். இவன் டெட்ராயிட் போய் சேர்ந்தானா இல்லையா, இப்போதைக்கு எங்கே இருக்கின்றான் என அவன் நகர்வை கண்காணித்துக் கொண்டே இருக்க கூகிள் வசதி செய்திருக்கின்றது. திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்தில் புறப்பட்ட நண்பன் இப்போதைக்கு எங்கே இருக்கின்றான் எனவும் டிராக் செய்யலாம். எல்லாம் Google Latitude எனும் வசதிதான்.இந்த வசதியை கூகிள் மேப்பின் மீது வைத்துள்ளார்கள். இந்த வசதி மூலம் ஒரு நபரின் நகர்வை real time-ல் நீங்கள் கண்காணித்துக் கொண்டேயிருக்கலாம். என்ன அவரிடம் ஒரு ஸ்மார்ட்போன் இருக்கவேண்டும்.அது Blackberry-யாகவோ Symbian S60-யாகவோ, அல்லது Windows Mobile-லாகவோ இருக்கலாம். Android மற்றும் iPhone-ல் இன்னும் சில நாட்களில் இவ்வசதி வரஉள்ளது. கூகிளின் cell tower database மற்றும் உங்கள் போனின் cell ID அல்லது GPS location detection வசதி இந்த நுட்பத்திற்காக பயன்படுத்தப்படும். யாருக்கெல்லாம் இம்மாதிரி உங்கள் இருப்பிடத்தை காட்டலாம், யாருக்கெல்லாம் இம்மாதிரி உங்கள் இருப்பிடத்தை காட்டக்கூடாதுவென பிரைவசி வசதியும் உள்ளதாக கூகிளிலிருந்து சொல்லியிருக்கின்றார்கள். பாண்டிச்சேரியில் நீங்கள் பூரித்திருக்க பொய்யாக உங்கள் தற்போதைய இருப்பிடமாக உங்கள் அலுவலகத்தையும் காட்டலாமாம். புல்லரிக்கவைக்கும் வசதி தான். ஆனால் ஏனோ பயமாயும் இருக்கின்றது.
http://www.google.com/latitude
![]() ஊட்டாது. God helps those who help themselves |

Right click and Save.Download

5 comments:
me the first???...
this service having real trouble with blackberry handhelds.
//பாண்டிச்சேரியில் நீங்கள் பூரித்திருக்க பொய்யாக உங்கள் தற்போதைய இருப்பிடமாக உங்கள் அலுவலகத்தையும் காட்டலாமாம். புல்லரிக்கவைக்கும் வசதி தான். ஆனால் ஏனோ பயமாயும் இருக்கின்றது.//
:)
பயனுள்ள பதிவு.
உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.
நிறை / குறை கூறவும்
Hi Pkp,
Nokia released a similar kind of SW in Nov 2008. The beta version of the SW is available in http://betalabs.nokia.com/betas/view/nokia-friend-view
பிகேபி,
படிக்கப் படிக்க பயனுள்ள தகவல் களஞ்சியமாய் உங்களின் பிளாக் இருக்கிறது. மற்றொரு விக்கியாய் தெரிகிறது எனக்கு.
வாழ்த்துக்கள்
Post a Comment