உலகின் இறுதிக் காலங்களில் நடைபெறப் போவன பற்றி பல்வேறு மார்க்கங்களும் நூல்களும் சொல்வனவற்றை தெரிந்து கொள்வது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதை நம்மவர்கள் எஸ்கட்டாலஜி (Eschatology) என்கின்றனர். வரப்போவன பற்றி அறிவதில்தானே நம்மில் பலருக்கும் ஆர்வம். அதனால் தானே பலரும் ஆருடம் நோக்குகின்றோம் ஜோதிடம் பார்க்கின்றோம். சமீபத்தில் ஈராக்கில் ஓடும் சுமேரிய நாகரீகப் புகழ் யூப்ரடிஸ் நதி பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று அறியக் கிடைத்தது.
இஸ்லாமிய நூல்கள் யூப்ரடிஸ் நதி வரலாற்றின் இறுதிக்காலங்களில் வற்றிப்போகுமென்றும் அதிலிருந்து தங்கக் குவியல்கள் வெளிப்படுமென்றும் அதை எடுக்க இறுதிக்கால மக்கள் போட்டி போடுவதால் ஒரு பெரிய யுத்தமே உண்டாகுமென்றும், அதில் நூற்றில் தொன்னத்தொன்பது பேரும் செத்துப் போவார்கள் என்றும் சொல்லுகின்றது. அக்காலத்தில் நீங்கள் வாழ்ந்தால் அந்த புதையல்களை எடுக்கக்கூடாது எனவும் சாகிக் புகாரி தெரிவிக்கின்றது.
கிறிஸ்தவ நூலான வெளிப்பாடு யூப்ரடிஸ் நதி வரலாற்றின் இறுதிக்காலங்களில் வற்றிப் போகுமென்றும் அது காய்ந்த தரை வழியாக பெரும் படை ஒன்று கடந்து சென்று ஒரு பெரிய யுத்தமிடும் என்றும் தெரிவிக்கின்றது.
உங்களால் நம்பமுடிகின்றதா? போன மாத நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வற்றா ஜீவ நதியாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த யூப்ரடிஸ் நதி இப்போது வற்றிக் கொண்டிருப்பதாக சொல்கின்றது. இன்டரெஸ்டிங் தான்.
மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான். - ஹோம்ஸ். |
சேகுவேரா பற்றிய மென்புத்தகம். CheGuevera Tamil pdf ebook Download. Click and Save.
Download
Download this post as PDF
5 comments:
பகிர்வுக்கு நன்றி சார்
கவலைக்குரிய விஷயம்தான்...இது போல நிறைய 'உலகின் இறுதி நாட்கள்' வந்தாயிற்று...புலி வருது கதை போல பல முறை கேட்டு அலுத்து விட்டதால் 'அட, சீக்கிரமே வரட்டுமே...' என்று கூடத் தோன்றும்.
விஞ்ஞானம் வளர்வதே உலகை அழிக்கத்தான்... உங்கள் ஒவ்வொரு write up கீழும் பொருத்தமாக யாரவது பெரியவர்கள் சொன்ன comment போடுகிறீர்களே...பாராட்டுக்குரியது.
interesting info, PKP :-)
Thanks for that.
2012 டிசம்பர் 21 பற்றியும் உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள்!
There is some problem .Im not able to download che guera ebook in scribd.can u give the exact link where i can download the book.Thanks
Post a Comment