உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, August 27, 2009

புதிய முகம்

கோடைகாலம், குளிர்காலம், இலையுதிர்காலம், வசந்தகாலம் என காலநிலைகளில் நான்கு பருவங்கள் இருப்பது போன்று வேலை கொடுப்போரும் வழக்கம் போல நான்கு நிலைகளில் தலைகளை சுத்திகரிக்கின்றார்கள் . முதலில் எழுத்து தேர்வு, பின்பு தொலைப்பேசி வழி சராமாரி கேள்விகள், அதிலும் தேறிவிட்டால் இறுதியாய் நேர்முகத் தேர்வு. நான்காவதாக எதாவது உங்கள் பேரில் கிரிமினல் கேஸ்கள் இருக்கின்றதாவென பார்க்க பேக்கிரவுண்ட் செக் மற்றும் போதை வஸ்துவுக்கு அடிமையாய் இருக்கின்றீர்களாவென பார்க்க டிரக் டெஸ்ட். இதையெல்லாம் தாண்டி வருவோரை தான் கன்கிராட்ஸ் என சொல்லி பெரும் நிறுவனங்கள் வேலை கொடுக்கின்றார்கள். Kroll, Intellicorp போன்ற நிறுவனங்கள் இந்த Background Screening Service வேலைகளை கமுக்கமாக அவர்களுக்காக செய்கின்றன. Drug test க்காக Lap corp அல்லது Quest Diagnostics போக வேண்டும். கிரான்பெர்ரி பழரசத்தை மடக் மடக் என குடித்திருந்தால் யூரின் Drug test-ஐ ஏமாற்றிவிடலாமென பரி முன்பு சொல்லியிருக்கின்றாள்.அது ஒரு நல்ல Natural Diuretic என்றாள். புரியவில்லை. தேவையும் இல்லை.

இதையெல்லாம் இங்கு சொல்லவந்ததற்கு முக்கிய காரணம் இந்த ஆளெடுக்கும் படலத்தினூடே இக்காலங்களில் புகுந்துவிட்ட இன்னொரு படிதான். ஓரளவு தேர்வாகி வருகின்ற நபர்களை இன்னும் முறமிட இணையத்தை பயன்படுத்துகின்றார்களாம். உதாரணத்துக்கு குறிப்பிட்ட நபரின் First name மற்றும் Last name-ஐ கூகிளில் தட்ட அது காட்டும் Myspace, Facebook, Linkedin, Blog, Forum பக்கங்களுக்கெல்லாம் சென்று இவரின் இணைய வாழ்வின் லட்சணத்தை அலசுகின்றார்களாம். அங்கு கண்டுபிடிக்கப்படும் இவர் பற்றிய அல்லது இவர் இட்ட தகவல்களும், வண்ணப் படங்களும் பெரிதும் இவரின் உண்மை முகத்தை எளிதில் காட்டுவதாக HR பெரிசுகளெல்லாம் சொல்லுதுகளாம். என் பெயரையும் முழுசாய் டைப்பி கூகிளில் தேடிப்பார்த்தேன் பெரிதாய் ஒன்றும் கிட்ட வில்லை. புனைபெயரை பயன்படுத்துவதில் இப்படி ஒரு லாபம். ஹாயாக கீழ்கண்ட சுட்டியில் இணையத்தில் ஃபாக்ஸ் நியூஸ் சேனல் (Fox News) பார்த்துக் கொண்டிருந்தேன். கோபாலோ டென்சனாய் கூகிளில் தன் பேரைத் தேடிக் கொண்டிருந்தான். கொஞ்சம் துப்புறவு தேவைப்படும் போலிருக்கின்றது. நாளைக்கு பொண்ணு கொடுக்கப்போகும் வீட்டுக்காரர்களும் மாப்பிள்ளை பேரை சும்மாவேனும் கூகிளில் தட்டி எதாவது விவகாரம் சிக்குதாவென தேடிப் பார்த்தாலும் பார்ப்பார்கள்.


பேச்சாளர்களே!
பார்க்கும்படியாக நில்லுங்கள்
கேட்கும்படியாக பேசுங்கள்
விரும்பும்படியாக உட்காருங்கள்









"வெற்றி தரும் “பேச்சு”" எளிய தமிழில் மனித வள மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் மென்புத்தகம்.Effective Speaking - in Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



8 comments:

ஆ.ஞானசேகரன் said...

ஓ.... நானும் ஒரு முறை இதைப்பற்றி நினைத்து பார்த்ததுண்டு

blogpaandi said...

இப்பிடி ஒரு வில்லங்கம் இருக்கா! இனிமே ஜாக்கிரதையாய் இருக்கணும்.

Meshak said...

எப்படியோ எங்கள் பெயெரை ஒருமுறை கூகிள் இல் தட்டி பார்த்து கொள்கிறோம், வேறு வேலை தேடும் முன்.

ஸ்ரீராம். said...

News to me!

தென்றல்sankar said...

பிகேபி சார் நீங்கள் இப்போதுதான் உங்கள் பெயரை கூகிளில் தட்டி பார்த்தீர்கள் ஆனால் நான் எப்போதே தட்டி பார்த்துவிட்டேன்.ஆனால் பலன் இல்லை ஏனென்றால் நீங்கள் புனைப்பெயரை பயன்படுத்துகிறீர்கள்.ஆனால் கூகிளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.ஒரு சின்ன விசயத்தைகூட மிக விரிவாக விளக்கிவிடுவான்.

காரணம் ஆயிரம்™ said...

இதைப்பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு என்னைப்பற்றிய தகவல்களை நீக்கியாயிற்று.. இப்பொழுது தேடினாலும் ஏதாவது வந்துதான் கொண்டிருக்கிறது.. :(

எனினும் drug test - லாம் புதிதாக இருந்தது.. (ஆமா அது எதற்கு???!!!)

காரணம் ஆயிரம்™

ஸ்ரீராம். said...

...And useful download too

கிரி said...

சுவாராசியமாகவும் அதே சமயம் விவகாரமாகவும் உள்ளது

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்