உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, February 03, 2010

ஐபோன்/ஐபேடில் அழகு தமிழ்

இந்த மாதிரியாக கரிஷ்மாட்டிக் லுக் கொண்ட ஒரு நபர் இப்போதைக்கு டெக் இண்டஸ்ட்ரியில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் திரையில் தோன்றும் போது ஒலிக்கும் கரகோசம் போல, இவர் மேடையில் தோன்றினாலும் அரங்கமே அதிரும். தனது பிராண்டுக்கென ஒரு விசிறி பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் தும்மினால் என்னமோ ஏதோவென பங்குகள் சரியும், அதெல்லாம் ஒன்றுமில்லை என தகவல் வந்தால் மீண்டும் விறுவெறுவென ஏறும். இப்படி ஒரு தனிநபரையே நம்பி கொண்டாடி வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கின்றது ஆப்பிள் நிறுவனம்.

இரண்டாயிரத்து எட்டில், நமது ஐபோன் அறிமுக பதிவில் “கையடக்க இந்த ஐபோன் பலருக்கும் ஒரு கியூட் கேட்ஜெட். இதுவே சற்று பெரிதாக சிறு புத்தக வடிவில் கீபோர்டு டைப்ப ரொம்ப கஷ்டப்படாத வகையில் ஒரு கேட்ஜெட் வந்தால் நன்றாயிருக்கும் என்பது பலரின் அவா. அதாவது சற்று பெரிய தட்டையான ஐபோன். ஆப்பிள் நிறுவனம் ரகசியமாய் அதற்கான புரோட்டோடைப்பில் ஈடுபட்டிருப்பது போல் தெரிகின்றது. ஐடேப்ளட் (iTablet) என்றோ அல்லது வேறெதாவது பெயரிலோ இந்த வருட இறுதிக்குள் அது சந்தைக்கு வரலாம்.” என குறிப்பிட்டிருந்தேன். இப்போது இரண்டு வருடம் கழித்து ஐபேட் எனும் பெயரில் அதை வெளியிட்டிருக்கின்றார்கள். ஸ்டீவ் ஜாப்சின் இன்னொரு மைல் கல். ஆப்பிள் காட்டில் மீண்டும் மழை பொழியலாம்.

ஆப்பிள் காட்டில் மழைபொழிகின்றதோ இல்லையோ, ”IT குடிசைத்தொழில்” சமூகம் சந்தோசத்திலிருக்கின்றது. கடவுளே இந்த iPad-வெற்றி பெறவேண்டுமே என வேண்டுகின்றது. இதன் மூலம் iPad சம்பந்தப்பட்ட அநேக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக, அதற்கு accessories தயாரிப்பது, பயன்பாடுகள் தயாரிப்பது, அதை ரிப்பேர் செய்வது என இந்த ஒரு புராடெக்ட் மூலம் இன்னொரு ஆயிரம் ஜாப்ஸ் (வேலைவாய்ப்புகள்) உருவாக ஸ்டீவ் ஜாப்ஸ் காரணமாகயிருந்தால் அவரை ஹீரோவாக கொண்டாடுவதிலிருக்கும் நியாயம் புரியும். ஐநூறு டாலரிலிருந்து வரவிருக்கின்றதாம். வந்ததும் பக்கத்திலிருக்கும் ஆப்பிள் ஸ்டோர் போய் இதெல்லாம் நமக்குத் தேவையாவென தொட்டுப் பார்க்கவேண்டும்.

ஐபேட் SDK வெளியிடப்பட்டிருந்தாலும் அனைத்து ஐபோன் பயன்பாடுகளும் இதில் வேலைசெய்யும் என்பது கூடுதல் மகிழ்ச்சி. ஐபோனில் தமிழ் யூனிக்கோடு எழுத்துருக்கள் உடைந்து உடைந்து தெரிகின்றன என முன்பு தெரிவித்திருந்தேன். அதை ஆப்பிள் இன்னும் சரிசெய்தது போல தெரியவில்லை. ஆனாலும் நமது மலேசியா வாழ் நண்பர்கள், கல்லையும் செல்லாக்குபவர்கள், செல்லினம் (Sellinam) எனும் ஒரு இலவச பயன்பாடை வெளியிட்டு, அதன் வழி தமிழை ஐபோனில் அழகாக்கி கொடுத்திருக்கின்றார்கள். நீங்கள் செல்லினம் எனும் இந்த ஐபோன் மென்பொருளை இறக்கம் செய்து நிறுவி அதன் வழி தமிழை சுலபமாக பார்க்கலாம்.(படம்) பிடித்தமான தமிழ் RSS Feed-களையும் சேகரித்து போகும் போக்கில் படிக்கலாம். http://sellinam.com குழுவுக்கு என் நன்றிகளும் வாழ்த்துதல்களும்.


காலஎந்திரம் எனும் மாயஎந்திரம் நம்மிலே கூட இருக்கின்றது.
சில நம்மை பின்னோக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றை நினைவுகள் என்போம்.
சில நம்மை முன்போக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றைக் கனவுகள் என்போம்.


டாக்டர்.கே.கே.பிள்ளை "தென் இந்திய வரலாறு" தமிழ் மென்புத்தகம். Dr.K.K.Pillai "South Indian History" Theninthiya Varalaaru ebook in Tamil Pdf Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories12 comments:

மகேஷ் said...

Hi PKP,
I m a doctor and a follower of your blog..
I am novice in computer and software things..
i got a idea for the browser font issues...
My idea if we dont have a font for tamil or any language can we make the browser to make the webpage as an image and we can then read the page without installing the font ...it will be also more useful in mobile browser...i dono whether this is available or its helpfulness...
can u help...
thanks
bye..

மகேஷ் said...

I m a doctor and a follower of your blog..
I am novice in computer and software things..
i got a idea for the browser font issues...
My idea if we dont have a font for tamil or any language can we make the browser to make the webpage as an image and we can then read the page without installing the font ...it will be also more useful in mobile browser...i dono whether this is available or its helpfulness...
can u help...
thanks
bye..

ஸ்ரீராம். said...

தகவலுக்கு நன்றி.
'நினைவுகள் - கனவுகள்' டாப்.

Dr.Palaniraja said...

Hi friend,

I believe that they are using custom font to display their text, similar to what we had used in the past TAM/TASCII. iPhone OS 3.0+ support custom fonts.

I am also working on fixing it in my spare time. Will update everyone once done.

augustine's said...

Hi Pkp,

I tried this sellinam 3 months before, its amazing. but i can't view this blog properly..(rss feed)

Best regards,
-Joe

EMLIN said...

PKP அவர்களுக்கு வணக்கம்,
"செல்லினம்" தவிர்த்து மற்றுமொரு NEWSHUNT எனப்படும் செய்தித்தாள் (தினமலர் படிக்க) Application நமக்கு தமிழை தெளிவாக காட்டுகிறது. தமிழ் உட்பட இருபத்தி இரண்டு செய்திதாள்களின் முக்கிய செய்திகள் மற்றும் இணைப்புகளை படிக்கலாம். முன்பே இது குறித்து தங்களுக்கு எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் இதுதான் சரியான தருணம். நன்றி.

மணிகண்டன் said...

Good one PKP, Y don't u write a post on ur fav Iphone apps or the iPhone apps u use.

I am sure ur fav apps will be useful to many of us... :)

Prema said...

I particularly got iphone/ipod to read all blogs apart from emails. When I could not read tamil blogs, of course I was disappointed. Today, I was thrilled when I read this post. I tried to set up your blog, I get NSXMLParser error. I have not yet dug into it yet. But will keep you posted if I am successful. If you were successful, please do share the secret with me. ;-)

EMLIN said...

Sir plz find the screen shots here.

http://emilinshah.blogspot.com/2010/02/iphone-tamil-daily.html

Senthil said...

Am not able to find the newshunt App in AppStore :-(

Anonymous said...

HI PKP, PLZ PROVIDE THE DOWNLOAD LINK FOR SELLINAM SOFTWARE FOR NOT iPHONES.

சிவா said...

இப்பொழுது வெளியாகியுள்ள iOS 4 க்கு மாறினால் தமிழ் எழுத்துகள் மிகவும் அழகாகத் தெரிகிறது! அதன் படங்களை இங்கு வழங்கியுள்ளேன்!


http://www.eegarai.net/-f22/-t33015.htm

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்