ஒரே நேரத்தில் உங்கள் கணிணித் திரையில் பல்வேறு கோப்புகளில் வேலை செய்பவர்களா நீங்கள்? ஒருவேளை உங்களுக்கு இந்த பயன்பாடு மிக உபயோகமாக இருக்கலாம். விண்டோசில் நீண்ட டாக்குமெண்டுகளை படிக்க உங்கள் மவுசின் scroll wheel உதவுவதுண்டு. அந்த வீலை நுனிவிரலால் சுற்ற சுற்ற கோப்பை படித்துக் கொண்டே கீழ்வாக்கில் நீங்கள் போகலாம். அப்போது படாரென்று நீங்கள் திரையிலிருக்கும் இன்னொரு டாக்குமெண்டுக்கு தாவினால் உங்கள் மவுசின் scroll wheel அந்த புது டாக்குமெண்டில் வேலை செய்யாது. அது இன்னும் பழைய டாக்குமெண்டிலேயே ஃபோகஸ் செய்துகொண்டிருப்பதால், இப்போதும் அது பழைய டாக்குமெண்டையே ஸ்க்ரோல் செய்து கொண்டிருக்கும். உங்கள் மவுஸ் பாயிண்டர் செல்லுமிடமெல்லாம் உங்கள் ஸ்க்ரோல் வீலையும் கொண்டு செல்ல உதவுவதுதான் இந்த கேட்மவுஸ் எனும் நுண்மென்பொருள். இதை உங்கள் கணிணியில் நிறுவினால் உங்கள் மவுசுக்கு சுதந்திரம் கிடைத்தது போல நீங்கள் உணருவீர்கள். என்ன இன்னும் புரியலையா? ஒரு வேளை இந்த யூடியூப் வீடியோவைப் பாருங்கள். புரிந்தாலும் புரியலாம். கணிணிகோப்புகளே கதி என்றிருக்கும் என்போன்றோர்களுக்கு இந்த சின்ன டிப் பெரும் உதவியாக இருக்கலாம்.
யூடியூப் வீடியோ விளக்கம்.
http://www.youtube.com/watch?v=49H13eVQzFE
Download katmouse
http://ehiti.de/katmouse/
![]() முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே; உலகம் உன்னை விழுங்கி விடும். -பாரசீகம் |


4 comments:
ये कौन सी भाषा सीख गये...:)
ಯೆ ಕೌನ ಸೀ ಭಾಷಾ ಸೀಖ ಗಯೆ ಆಪ, ಮಿಶ್ರಾ ಜೀ?
यह कौन भाषा में पोस्ट कर दिया है मिश्र जी?
आजकल ब्लॉग जगत में नए -नए प्रयोग हो रहे हैं..जय हो :-)
மிக்க நன்றி திரு.பி.கே..பி அவர்களே,நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன் இதுபோன்ற ஒரு மென்பொருளை,
அதுசரி இதுபோன்ற விஷயங்களை ரூம் போட்டு உட்கார்ந்து தேடுவீர்களோ
Post a Comment