"ஐபோனில் அழகு தமிழ்" என்ற நம்முடைய முந்தைய பதிவை படித்த நண்பர்கள் பலரும் பரவசப்பட்டிருக்கிறார்கள். பின்னே என்ன, பிறவிக்குருடனுக்கு திடீரென கண் கிடைத்தமாதிரி இருக்காதா என்ன. அந்த ஆச்சரியத்தில் நண்பர் எம்லின் என்பவர் இன்னொரு இலவச ஐபோன் பயன்பாடையும் அறிமுகப்படுத்திச் சென்றார். பின்னூட்டப்பகுதியை இப்படி பலருக்கும் பயனுள்ளதாக மாற்றும் மனிதர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். Newshunt எனும் இந்த பயன்பாடு, தமிழ் மட்டுமல்லாது இன்ன பிற இந்திய மொழிகளையும் அழகாக காட்டுகின்றது. இதில் தினமலர் முதல் மலையாள மனோரமா தொடங்கி மாத்ருபூமி, ஈநாடு வழி, ஆந்திர பிரபா, லோக் சத்தா, டைனிக் நவஜோதி என பல மொழி நாளிதழ்களும் இந்த வரிசையில் நீள்கின்றது. இருபது இந்திய நாளிதழ்கள் இருக்கின்றன. நீங்களும் பயன்படுத்தலாம். தெலுகு, மலையாளம், கர்நாடகா, வட நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தலாம். மகிழ்ந்து போவார்கள். நமக்கு தினமலர் பிளாஷ் நியூஸ் முதல் வாரமலர் துணுக்குமூட்டை வரை படிக்க முடிகின்றது. நன்றி Emlin.
செல்லினத்தில் நமது வலைப்பதிவை RSS feed-ஆக இணைக்க முடியவில்லை, என்னமோ எரர் சொல்கின்றது என்றார்கள். Please use this url. நன்றாக வேலைசெய்கின்றது. படங்கள் மட்டும் தெரிவதில்லை.
http://feeds.feedburner.com/pkp
இன்னொரு மருத்துவர் ஐயா கூட நமது வலைப்பதிவை தொடர்ந்து படிப்பதாக அறிந்தேன். கொல்லப்பட்டறையில் இன்னொரு ஈ. மிக்க மகிழ்ச்சி. இந்த எழுத்துரு பிரச்சனைக்கெல்லாம் ஒரு தீர்வாக தமிழ் பக்கங்களை படங்களாக காண்பித்தால் என்னவென கேட்டிருந்தார். பழைய கால டிரிக். சமீபத்தில் கூட இனிய நண்பர் டெக்ஷங்கர் (முன்னாள் தமிழ்நெஞ்சம் - ஏன் பெயரை மாற்றிக்கொண்டார் என அவரைக் கேட்டால் ஒரு சோகக் கதை கிடைக்கும்) இந்த டிரிக்கை (உதாரணம்) பயன்படுத்தினார். ஆனால் கூகிள் பாட்கள் (Bots) ஏமாந்து போகுமே. Search engine-களால் அந்த இமேஜில் என்ன தகவல் இருக்கிறதுவென தெரிந்து கொள்ள முடியாதே. காலை வெட்டுவதற்கு பதிலாய் செருப்பைவெட்ட முயன்றுகொண்டிருக்கின்றார்கள். டாக்டர் அய்யா! கொஞ்ச நாள் கூட பொறுப்போம். சீக்கிரத்தில் வெற்றி பெறுவோம்.
கிரிக்கெட் ஜூரம் தொடங்குகின்றது. இலவசமாய் ஆன்லைனில் பார்க்க tvnsports.com வழிசெய்திருக்கின்றார்கள். தேவையானால் போய் பார்க்கலாம்.
Cricket- India vs. South Africa, from February 6th FREE on TVNSPORTS.com ( 2 Tests 3 ODIS) http://www.tvnsports.com/members/signup.php
கிரிக்கெட்டில் கேட்ச் இருக்கும். இவர்கள் இலவசமாய் வழங்குவதில் எதாவது கேச் உண்டா தெரியாது.
தொடந்து தரமான தொழில்நுட்பத் தகவல்களை இனிய தமிழில் சளைக்காமல் எழுதிவரும் நண்பர் tvs50-யை இங்கு நமது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி. பெரும்பாலானோருக்கு இவர் ஏற்கனவே அறிமுகம் என்றாலும் தெரியாத ஒரு சிலருக்கு உதவியாக இருக்கலாம். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
http://tvs50.blogspot.com
சமீபத்தில் எனக்கு வந்த ஒரு காமெடி பின்னூட்டம்
“this is absolute copy.Pkp is copying lot of contents from other site and posting as if he creates and makes money.”
இது உண்மையாக இருக்காதாவென நினைத்துக்கொண்டேன். காப்பி/பேஸ்ட் செய்து காசு பண்ண எதாவது வழி இருந்தால் தயவுசெய்து அனானிகள் தெரிவிக்கவும்.
தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல்! துணிந்தவர் தோற்றதில்லை!! தயங்கியவர் வென்றதில்லை!! |
உஷா “ஆங்கில மரபுத்தொடர்கள்” தமிழ் மென்புத்தகம். Usha "Aangila Marabu Thodar" A hand book on english idioms ebook in Tamil Pdf Download. Click and Save.Download
Download this post as PDF
9 comments:
ஐபோனில் தமிழ்... மிக்க நன்றி பிகேபி.
//காலை வெட்டுவதற்கு பதிலாய் செருப்பைவெட்ட முயன்றுகொண்டிருக்கின்றார்கள்.//
மாற்றி எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். ’செருப்பை வெட்டுவதற்கு பதிலாக...’ என்று இருக்க வேண்டும் இல்லையா? :)
அன்புள்ள பிகேபி,
உங்கள் அறிமுகத்திற்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எழுதுவது மேலும் பலரை உங்களது இந்த அறிமுகத்தால் சென்றடையும். ஆங்காங்கே இது போன்ற ஊக்குவிப்புகளே எழுதுகின்ற ஆர்வத்தை உயிருடன் வைத்து இருக்கிறது. நன்றி.
ஐபோனில் தமிழ் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஏனெனில் ஐபோன் பயன்படுத்தி பார்த்ததில்லை.
ஆனால் மற்ற பெரும்பாலான மொபைல்களில் தமிழ் தளங்களை வாசிக்க முடியும். அதற்கு ஒபேரா மினி, ஸ்கைபயர் போன்ற இணைய உலாவிகள் உதவுகின்றன.
ஆனால் இவை தமிழ் எழுத்துக்களை படங்களாக மாற்றியே தருகின்றன. இவற்றிற்கு அறிமுகம் தந்து இடுகைகள் எழுதி இருந்தேன். சுட்டிகள் கீழே.
மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க
மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி
ஐபோனில் TTF எழுத்துருக்கள் நிறுவும் வசதி உள்ளதா? அப்படி இருந்தால் எளிதில் தமிழ் தளங்கள் அனைத்தையும் வாசிக்கும் வசதியை ஏற்படுத்தலாம். உங்கள் விண்டோஸ் கணினியில் உள்ள C:\windows\fonts\latha.ttf எழுத்துருவை உங்கள் ஐபோனில் நிறுவி கொள்ளுங்கள். அடுத்து உங்கள் ஐபோன் இணைய உலாவியில் எழுத்துரு தொடர்பாக ஏதேனும் செட்டிங்க்ஸ் மாற்ற வேண்டி இருந்தால் மாற்றுங்கள்.
நன்றி.
டிவிஎஸ் 50 அவர்களின் தொடர்ச்சியான தமிழ் சேவைக்கு தலை வணங்குகிறேன்.
கமர்ஷியல் தனம் இல்லாமல் அதே நேரம் ஆர்ட் ஃபிலிம் போல இல்லாமல் அமைதியான நீரோடை போன்ற எழுத்துக்குச் சொந்தக் காரர் இவர். அவருக்கு டெக்ஷங்கர் சார்பாக வாழ்த்துகள்.
//தொடந்து தரமான தொழில்நுட்பத் தகவல்களை இனிய தமிழில் சளைக்காமல் எழுதிவரும் நண்பர் tvs50-யை இங்கு நமது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி.
ஆஹா.. சோகத்திலும் ஒரு நகைச் சுவை யா?
//(முன்னாள் தமிழ்நெஞ்சம் - ஏன் பெயரை மாற்றிக்கொண்டார் என அவரைக் கேட்டால் ஒரு சோகக் கதை கிடைக்கும்)
Newshunt doesn't works in iPod touch :-((
மிக்க நன்றி பிகேபி.
ஏற்கனவே வீட்டில இந்த ஐபோனால 'தகராறு'! இப்ப தமிழ்ல வேறனு காட்டீங்க... கடவுளே..!!
I don't know about your blog when i came through your posts. Frankly speaking it does look like "“this is absolute copy.Pkp is copying lot of contents from other site and posting as if he creates and makes money.”"
because you have ads in your blogs
and /தேடிப்பிடித்தவை/ is your blog subline.
But as of my opinion your blogs is good informative
opera tamil, very useful.
Thanks-Iyyappan
Post a Comment