உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, February 07, 2010

மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு

மைக்ரோசாப்ட் வேர்டில், கணக்கு செய்வது எப்படி? என்ற இந்த அருமையான தகவலை உங்களுக்கு வழங்குபவர் அன்பு நண்பர் ஞானசேகர்.இனி அவர் கூறுவது.

“நான் இதுவரை மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு கூட்ட இயலாது என்று தான் நினைத்திருந்தேன் இன்றுதான் மைக்ரோசாப்ட் வேர்டில் கால்குலேட்டர் வசதி இருப்பதை கண்டேன் அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி சாதாரணமாக Quotation செய்யும் போது இந்த பிரச்சினை வரும் இனி அதை எப்படி தீர்ப்பது என பார்க்கலாம்

நீங்கள் உபயோகிப்பது மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 என்றால் இந்த வழிமுறையை பின்பற்றவும்

மைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்பதில் All commands என்பதை செலக்ட் செய்யவும் இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடுக்கவும் தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம் இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும்இனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது என பார்க்கலாம்

மெனு பாரில் உள்ள Tools சென்று அதில் Customize என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது திறக்கும் பாப் அப் விண்டோவில் Command தேர்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேர்ந்தெடுக்கவும் பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவுஸ் முனையில் அழுத்தி பிடித்தபடி மேலே உள்ள டூல்ஸ் மெனுவில் தங்களுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிறதோ அங்கே இழுத்து விடவும் இப்பொழுது பாருங்கள் புதிதாக என ஒரு கமெண்ட் இருக்கும் இனி எதை கூட்டவோ கழிக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வரும் கீழே உள்ள படத்தையும் பாருங்கள்.வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்”

நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்

இரா.புருஷோத்தமன் “இம்மியும் சலிக்காத ரம்மியமே” தமிழ் கவிதைகள் மென்புத்தகம். R.Purushothaman "Immiyum Salkkatha Rammiyame" Kavithaikal ebook in Tamil Pdf Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories6 comments:

butterfly Surya said...

super. Thanx for sharing.

ஜிஎஸ்ஆர் said...

அன்புள்ளம் கொண்ட பிகேபி,
குட்டு வாங்கினாலும் மோதிரக்கையில் குட்டு வாங்க வேண்டும் என்பார்கள் அந்த வகையில் தங்களிடமிருந்து இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

வாழ்க வளமுடன்என்றும் அன்புடன்
ஞானசேகர்

Anonymous said...

useful info. Thanks

ஸ்ரீராம். said...

ஆல்ரெடி நன்றி நவின்றதாய் நினைத்துக் கொண்டிருந்தேன். அனானியின் பதில் பார்த்ததும் சந்தேகம் வந்து விட்டது.
உபயோகமான தகவல். ஏற்கெனவே தந்த வேர்டுல PDF மாற்றும் வசதி உபயோகப் படித்திக் கொண்டேன். அதுபோல இதுவும் எனக்கு புதிய தகவல். நன்றி..

shan said...

HAI PKP YOUR INFORMATIONS ARE VERY NICE . PL ADD THIS OPTION IN UR BLOG.
http://tvs50.blogspot.com/2010/01/blogger-posts-to-pdf-tamil.html

thiruthiru said...

திரு ஜிஎஸ்ஆர் calculator தாண்டி இன்னும் கொஞ்சம் பார்த்திருந்தால் sum என்ற ஒன்றைப் பார்த்திருக்கலாம். ஒரு டேபிளுக்குள் இருக்கும் அத்தனை என்னையும் ஒரு நொடியில் கூட்டிவிடும். மேலே டூல்பாரில் வைத்துக்கொண்டு ஒரு க்ளிக் அவ்வளவுதான். முயன்று பாருங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்