உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, February 15, 2008

போட்டு தாக்கு

நாமெல்லாரும் இருப்போம், கட்டிடங்களெல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பால் நாம் சென்றிருப்போம். என்ன? கால எந்திரம் பற்றி எதாவது கூறுகிறேனென நினைத்தீர்களா? இல்லை நான் இங்கு சொல்ல வருவது ஈ-பாம்(E-bomb) அதாவது மின்காந்த வெடிகுண்டு (Electromagnetic Bomb) பற்றி.

நவீன கால இந்த E-bomb ஒரு நகரில் போடப்பட்டால் உருவாக்கப்படும் மாபெரும் மின்காந்த புலமானது அப்பகுதியிலுள்ள அனைத்து மின்னணு சாதனங்களையும் பொரித்து போட்டு விடுமாம். உதாரணமாய் உங்கள் கணிணியின் சர்கியூட் போர்டு அந்த அசூர மின்காந்த அலைகளுக்கு தாக்குபிடிக்க முடியாமல் உருகிப்போகும். இதில் ஹார்ட் டிஸ்க் எம்மாத்திரம். அதிலுள்ள அனைத்து டேட்டாவும் அழிபட்டு போகும். தொலைப்பேசிகள், கைபேசிகள், தொலைகாட்சிகள் எல்லாம் செயலிழந்துபோம். மின்சார வசதி துண்டிக்கப்பட்டு விடும். வாகனங்கள் நடுரோட்டில் நின்றுவிடும். மொத்ததில் எலக்ட்ரானிக் சர்கியூட்கள் உள்ள அனைத்து சாதனங்களும் ஸ்தம்பித்துவிடும். ஆனால் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பான். நடை பிணமாக.

இத்தகைய E-bomb-களை பற்றி இன்னும் எந்த நாடும் அப்பட்டமாக பேச விட்டாலும் ஆளாளுக்கு வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகின்றது. இந்தியாவில் IIT, Kharagpur இதில் மும்முரமாய் இருக்கின்றதாம்.

இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

எப்படி அண்டர் கிரவுண்ட் அதாவது பேஸ்மென்டில் நீங்கள் இருக்கும் போது அல்லது சில லிப்டில் நீங்கள் இருக்கும் போது உங்களுக்கு மொபைல் சிக்னல் கிடைக்காதோ அது போல சிக்னல் கிடைக்காத இடத்தில் உங்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தால் தப்பித்தீர்கள். இதனை Faraday cage அல்லது Faraday shield என்கின்றார்கள்.

இப்போதுதான் புரிகின்றது எதற்கு அநேக டேட்டா சென்டர்கள் தரையின்அடியில் அமைக்கபடுகின்றன வென்று.சில United States national security கட்டிடங்கள் இது மாதிரி ஃபாரடே பாதுகாப்புக்குள் கட்டப்பட்டுள்ளனவாம்.

வெறும் நானூறே டாலருக்கு இந்த E-bomb-களை தயாரிக்கலாமாம். நவ நாகரீக நகரொன்றை Time machine எதுவுமின்றி 200 ஆண்டுகளுக்குப் பின்தள்ளலாம் ஒரு சொடுக்கில்.

நல்லாருக்கு.வாழுக விஞ்ஞானம்.


1893-ல் சிக்காகோ நகரில் சுவாமி விவேகானந்தர் இவ்வாறாக கெம்பீரமாக பேசத்தொடங்கினார், "உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டை சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன்" அவரது சிக்காகோ சொற்பொழிவுகள் இங்கே தமிழில் சிறு மென்புத்தகமாக. Vivekananda Chicago speech in Tamil pdf e book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, February 13, 2008

Pdf டு Doc

நாலும் தெரிந்திருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். இதில் அந்த நான்கும், நான்கு வேதங்களை குறிக்கின்றதா அல்லது நான்கு திசைகளை குறிக்கின்றதாவென தெரியவில்லை. ஆனாலும் நாலு திசைகளிலும் நடப்பனவற்றை நாளும் நாம் அறிந்து வைத்தல் நம்மெல்லாருக்கும் பயனாயிருக்கும்.News-ன் விரிவாக்கம் North East West South ஆக இருக்க இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

கொஞ்சம் தெரிந்த நமக்கே இங்கே பதிவாய் எதாவது எழுத நேரம் கிடைப்பதில்லை. முற்றும் அறிந்த பலருக்கும் எங்கே எழுத, தாங்கள் கற்றவற்றை சொல்ல சமயம் கிடைக்கப் போகின்றது.

நண்பர் vijay prasanna கூட கேட்டிருந்தார்.
ஏன் நீண்ட நாளாக ஆங்கிலத்தில் எழுதுவதில்லை ?

சமயம் தான் பிரச்சனை.
:)

இப்போது Pdf டு Doc-க்கு வருவோம்.

நண்பர் Sathananda Ganesan கேட்டிருந்தார்.
Is it possible to covert Adobe pdf to Ms word and vise versa ? Like wise Can we covert Note pad text document to Ms word or adobe pdf? Please advise.Nanri

இது ஒரு நல்ல கேள்வி. இதர பிற டெக்ஸ்ட்,டாக்குமெண்ட் கோப்புகளை PDF-க்கு மாற்ற அநேக வழிமுறைகளும் இலவச மென்கருவிகளும் உள்ளன.

உதாரணத்துக்கு Primopdf- இம்மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவ வேண்டும். அது பல வித கோப்புகளை பிடிஎப் ஆக மாற்றி தரும்.
Convert other document formats to pdf (Installable Tool)
http://www.primopdf.com/

இணையம் வழி ஆன்லைனிலேயே மாற்ற கீழ்கண்ட சுட்டியை முயலவும்.
Convert other document formats to pdf (Online)
http://convert.neevia.com/

ஆனால் பிடிஎப் கோப்பை Word(doc)-க்கு மாற்ற சில இலவச சேவைகளே உள்ளன.
கீழ்கண்ட சுட்டிகள் உதவலாம்.

Convert Pdf to Word(doc) or Excel(xls) or RichText(rtf)
http://media-convert.com/(up to 150Mb files)
http://www.freepdfconvert.com/convert_pdf_to_source.asp


ஈடு இணையற்ற அறிவியல் மேதை ஐன்ஸ்டீனே தன் வாயால் "என்னைப் போன்ற விஞ்ஞானிகளை விட,சாப்ளின் உயர்ந்தவர்" என பாராட்டிப் பேசியுள்ளார். அப்பேர்பட்ட நகைச்சுவை நடிகரான சார்லிசாப்ளினின் வாழ்க்கை கதை இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Actor Charlie Chaplin Life history in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Thanks TamilNenjam!!


Email PostDownload this post as PDF

Tuesday, February 12, 2008

வின்டோஸ் சிடி கீ மாற்றி

தற்போதைய உங்கள் வின்டோஸ் கணிணியின் Product Key என்னவென கண்டுகொள்ளவும், தேவைப்பட்டால் அக்கீயை மாற்றவும் ஒரு இலவச மென் பொருளை நண்பர் தமிழ் நெஞ்சம் அவர்கள் தனது பின்னூட்டம் வழி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.அதன் பெயர் Magical Jelly Bean Keyfinder என்பதாகும். இதனை கீழ்க் கண்ட சுட்டியை சொடுக்கி இறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Magical Jelly Bean Keyfinder v1.51

அது சரி.எதற்காக உங்கள் Windows Product Key-யை மாற்ற வேண்டும்?

இங்கு நண்பர் Jafar Safamarva-வின் கேள்வி ஒன்றை நினைவுகூர்கின்றேன்."எல்லாம் சரி பிகேபி ஸார்! விண்டோஸ் ஒரிஜினல் இல்லாமல் என்னைப்போல் காப்பியை பயன் படுத்துபவர்கள் Install the Genuine Windows Validation Component இந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறதே இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா?"

அதற்கான தீர்வை இங்கே நண்பர் தமிழ் நெஞ்சம் கொடுத்திருக்கின்றார்.கீழே சொடுக்கி முயன்று பாருங்கள்
How to Make your Windows Genuine?

இப்படி நம்மூரைப் பற்றி நன்கு தெரிந்து கொண்ட மைக்ரோசாப்ட் காரர்கள் நம்மூருக்கென்றே http://www.AskForOriginal.com வைத்திருக்கின்றார்கள். சன்டிவியிலும் அது பற்றி கமர்சியர் போடுகின்றார்கள். :)

"அவர் யூதனாகப் பிறந்தார்.கிறிஸ்தவனாக வாழ்ந்தார்,மனிதனாக இறந்தார்.காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்" இப்படி ஏங்கல்ஸ் சொன்னது பொதுவுடைமை தந்த கார்ல்மார்ஸ் பற்றி. அவரது வாழ்க்கை வரலாறு தமிழில் சிறு மென்புத்தகமாக இங்கே. Karl Marx life history in Tamil e-book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Friday, February 08, 2008

யுத்தம் ஒன்று

புதிய நூற்றாண்டை ஆரம்பிக்கும் உற்சாகத்தில் உலகமே கொண்டாடிக் கொண்டிருக்க இரு வல்லரசுகளுக்கு மட்டும் நெஞ்சம் பக் பக்கென்று கொண்டிருந்தனவாம். Y2K என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் பழுது தவறுதலாய் ஒரு அணுஆயுதப்போரையே தொடக்கிவிடக்கூடாதேவென அவர்களுக்கு அச்சம். அதாவது அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளெல்லாம் தயார் நிலையில் இருக்கின்றன.ஏதாவதொரு மனிதனுக்கோ அல்லது கணிணிக்கோ பயித்தியம் பிடித்து விட்டால் கோடிக்கணக்காணோரின் உயிர் பொசுங்கிப்போகும் அபாயத்தில் இன்றைய உலகம். ஆண்டு 2000-மும் பிறந்தது. உச்ச டென்சனிலிருந்த அந்த பட்டாளத்தார்களுக்கு நிம்மதி பெருமூச்சும் வந்தது.

இப்படி மென்பொருளில் பழுது வந்தாலும் வன்பொருளில் பழுது வந்தாலும் சோதனை சோதனை தான். உதாரணத்துக்கு கடந்த இரண்டு வாரங்களாக மத்திய தரை,மத்திய கிழக்கு பகுதிகளில் அடுத்தடுத்து 8 கடலடி இணைய இணைப்பு கம்பிகள் வெட்டப்பட்டு போனது பலருக்கும் சாதாரண விபத்து நிகழ்வுகளாய் படவில்லை. நமக்கு அது ஒரு சாதாரண கேபிள் வெட்டாக இருக்கலாம். ஆனால் பல நாடுகளுக்கு அது கோடிக்கணக்கான பண இழப்பு.எப்படி அவை வெட்டப்பட்டு போயின? யாராவது வேண்டுமென்றே வெட்டினார்களா? அப்படியானால் அவர்களின் நோக்கம் என்ன? தொலைப்பேசியை ஒட்டு கேட்பது போல் இணையத்தை ஒட்டு கேட்க யாராவது விளைகின்றார்களாவென பல கேள்விகள் அங்கு.

முன்பெல்லாம் பக்கம் பக்கத்து நாடுகள் போட்டி பொறாமையில் சத்தமின்றி ஏவுகணைகளை ஏவி விட்டு விட்டு "நான் அவன் இல்லை" என்பார்கள்.இன்னும் கொஞ்சம் தைரியம் வந்ததும் ஆட்களை எல்லை தாண்டி ஊடுருவ விடுவார்கள்.இப்போது தொழில்நுட்பம் மாறுகின்றது. அதற்கேற்ப்பவே நாடுகளும். லித்துவேனியா. ரஷ்யாவை அடுத்த ஒரு குட்டி நாடு. இங்கு சகல அரசாங்க சமாச்சாரங்களும் கணிணி மற்றும் இணையம் வழியே தான் நடக்கின்றன. நாட்டு பொது தேர்தலே இணையம் வழிதான் நடத்துகிறார்களென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பக்கத்து நாடான ரஷ்யாவின் தொல்லை தாங்கவில்லை.சைபர் தாக்குதல் நடத்திக்கொண்டே யிருக்கின்றார்கள் என அந்நாடு குற்றம் சாட்டுகின்றது. இப்படி ஹைடெக் யுத்தம்
அமைதியாய் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கணிணியுகத்திலும் யாரும் திருந்துவதாய் இல்லை. :)


கிருபானந்த வாரியாரின் "இராம காவியம்" மென்புத்தகம் Kirubaanantha Vaariyaar Ramayanam Tamil e-book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, February 04, 2008

இலக்கியம்?

"சீக்கு பிடித்த கோழி மாதிரி" என்ற வாக்கியத்தில் வரும் சீக்கு எனும் வார்த்தை Sick எனப்படும் ஆங்கில
வார்த்தையிலிருந்து இங்கு தமிழுக்கு வந்ததா அல்லது தமிழிலிருந்து அங்கு போனதா? சுத்தமாய் தெரியவில்லை.

இத்தனைக்கும் இதுமாதிரியான வார்த்தைகளை படித்த இலக்கியவாதிகள் பயன்படுத்துகின்றார் என நாம் கூறவில்லை. ஆங்கிலம் துளிகூடா அறியா கிராமத்து தமிழச்சிகள் பயன் படுத்தும் வார்த்தைகள் தாம் இவை. இன்னொரு உதாரணம் கூட நாம் இங்கே கூறலாம். நம் சிறு வயதில் பக்கத்து வீட்டு மூதாட்டி அடிக்கடி சொல்லும் வார்த்தை"பிளசர்" கார் (Pleasure Car). அதாங்க அந்த கால அம்பாசிடர் கார் வண்டி. இப்படி பிற மொழி நம்மில் கலந்ததா அல்லது நம்மொழி நாடு கடந்ததாவென அறியாமல் அநேக அன்னிய வார்த்தைகளை நாளும் அதுவும் "தமிழ் தெரிந்தோர் மட்டும்" கூட பயன் படுத்திக் கொண்டுத்தான் உள்ளனர். நான் எம்மாத்திரம்?

இன்னும் சொல்லப்போனால் அலமாரி, அன்னாசிப்பழம், சப்பு , சாவி ,ஜன்னல், கோப்பை ,குசினி ,தபால், கக்கூஸ் ,வராந்தா,மேசை இதெல்லாம் கூட அயல் மொழி வார்த்தைகள் தானாம். திறவுகோல், சாளரம், அஞ்சல் என சுத்த தமிழ் எல்லோரும் பேச கேட்கத் தான் ஆசை. முடிகிறதில்லையே.

எனது முந்தைய பதிவை படித்த முகம் காட்டா நண்பர் ஒருவர் நாம் இங்கே இலக்கியம் எழுதுகின்றோம் என நினைத்துக் கொண்டு தெளிவான தமிழில் "Sariyana tamizh Kolai - Ayyoko"என்பதாக பின்னூட்டமிட்டிருந்தார்.உண்மை தான் நண்பா. மன்னிக்க வேண்டுகின்றேன். :)

காகிதப்படங்களை புகைப்படமெனலாம்.Digital Photos-களை ஒளிப்படமெனலாம் எனக் கூறி அறிவுவுறுத்திய நண்பர் பிரேம்ஜிக்கு இங்கு நன்றிகள் பல.


மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை "தமிழ் தாய் வாழ்த்து" ஒலி வடிவில் Manonmaniam P Sundaram Pillai Tamil Thai Vaalthu Song Audio Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்