உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, February 15, 2008

போட்டு தாக்கு

நாமெல்லாரும் இருப்போம், கட்டிடங்களெல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பால் நாம் சென்றிருப்போம். என்ன? கால எந்திரம் பற்றி எதாவது கூறுகிறேனென நினைத்தீர்களா? இல்லை நான் இங்கு சொல்ல வருவது ஈ-பாம்(E-bomb) அதாவது மின்காந்த வெடிகுண்டு (Electromagnetic Bomb) பற்றி.

நவீன கால இந்த E-bomb ஒரு நகரில் போடப்பட்டால் உருவாக்கப்படும் மாபெரும் மின்காந்த புலமானது அப்பகுதியிலுள்ள அனைத்து மின்னணு சாதனங்களையும் பொரித்து போட்டு விடுமாம். உதாரணமாய் உங்கள் கணிணியின் சர்கியூட் போர்டு அந்த அசூர மின்காந்த அலைகளுக்கு தாக்குபிடிக்க முடியாமல் உருகிப்போகும். இதில் ஹார்ட் டிஸ்க் எம்மாத்திரம். அதிலுள்ள அனைத்து டேட்டாவும் அழிபட்டு போகும். தொலைப்பேசிகள், கைபேசிகள், தொலைகாட்சிகள் எல்லாம் செயலிழந்துபோம். மின்சார வசதி துண்டிக்கப்பட்டு விடும். வாகனங்கள் நடுரோட்டில் நின்றுவிடும். மொத்ததில் எலக்ட்ரானிக் சர்கியூட்கள் உள்ள அனைத்து சாதனங்களும் ஸ்தம்பித்துவிடும். ஆனால் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பான். நடை பிணமாக.

இத்தகைய E-bomb-களை பற்றி இன்னும் எந்த நாடும் அப்பட்டமாக பேச விட்டாலும் ஆளாளுக்கு வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகின்றது. இந்தியாவில் IIT, Kharagpur இதில் மும்முரமாய் இருக்கின்றதாம்.

இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

எப்படி அண்டர் கிரவுண்ட் அதாவது பேஸ்மென்டில் நீங்கள் இருக்கும் போது அல்லது சில லிப்டில் நீங்கள் இருக்கும் போது உங்களுக்கு மொபைல் சிக்னல் கிடைக்காதோ அது போல சிக்னல் கிடைக்காத இடத்தில் உங்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தால் தப்பித்தீர்கள். இதனை Faraday cage அல்லது Faraday shield என்கின்றார்கள்.

இப்போதுதான் புரிகின்றது எதற்கு அநேக டேட்டா சென்டர்கள் தரையின்அடியில் அமைக்கபடுகின்றன வென்று.சில United States national security கட்டிடங்கள் இது மாதிரி ஃபாரடே பாதுகாப்புக்குள் கட்டப்பட்டுள்ளனவாம்.

வெறும் நானூறே டாலருக்கு இந்த E-bomb-களை தயாரிக்கலாமாம். நவ நாகரீக நகரொன்றை Time machine எதுவுமின்றி 200 ஆண்டுகளுக்குப் பின்தள்ளலாம் ஒரு சொடுக்கில்.

நல்லாருக்கு.வாழுக விஞ்ஞானம்.


1893-ல் சிக்காகோ நகரில் சுவாமி விவேகானந்தர் இவ்வாறாக கெம்பீரமாக பேசத்தொடங்கினார், "உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டை சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன்" அவரது சிக்காகோ சொற்பொழிவுகள் இங்கே தமிழில் சிறு மென்புத்தகமாக. Vivekananda Chicago speech in Tamil pdf e book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories6 comments:

வடுவூர் குமார் said...

ஓஹோ! இந்த பயத்தால் தான் பல கட்டிடங்கள் நிலத்துக்கு கீழே போகின்றன்!!

Tech Shankar said...

திருக்குறளில் தேட தேடியந்திரம்
திருக்குறளில் 1330 குறள், 133 அதிகாரங்கள் இருந்தாலும் ஒரு திருக்குறள் நூலை (வன்னூல்)த் திறந்து அதில் ஒரு குறிப்பிட்ட சொல்லைத் தேடுவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

இங்கே அதை எளிமைப்படுத்தி அருமையான தேடு இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

தேடும் சொல்லானது
1) முதல் வார்த்தையாகவோ
2) கடைசி வார்த்தையாகவோ
3) எங்குவேண்டுமானாலுமோ இருக்கலாம்
4) குறளின் எண்ணைக் கொடுதால் குறள் திரையில் பளிச்சிடுகிறது

அன்பு என்று கொடுத்தால் 'அன்பு' வில் ஆரம்பிக்கும் குறள்கள்
இமைப்பதற்குள் திரையில் தோன்றுகின்றன.

http://muthu.org/index.php?option=com_wrapper&Itemid=26

Tech Shankar said...

http://www.esnips.com/nsdoc/b25bb5a3-1284-4297-bad4-7ee7d5ad5206

பெரியாரின் கைவண்ணத்தில் 'பெண் எப்போது அடிமையானாள்?' மென்னூல்

http://www.esnips.com/nsdoc/b25bb5a3-1284-4297-bad4-7ee7d5ad5206

சின்னப்பொண்ணு said...

பிகேபி சார் மிகவும் பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து தருகிறீர்கள்.

என்னுடைய கம்ப்யூட்டரில் இருக்கிற திடீர்ன காணமுடியாம இருக்கு. ஆனால் அழிஞ்சு போகல்ல. அதை எப்படி மீற்க முடியும்?

நான் இந்த கம்ப்யூட்டருக்கு புதுசு கொஞ்சம் உதவி பன்னுவிங்களா?

writer S.Ramakrishnan said...

நண்பர் பிகேபிக்கு

தங்களது வலைப்பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

எனது இணையதளத்தில் தங்களை பற்றிய சிறிய குறிப்பு எழுதியுள்ளேன

www.sramakrishnan.com

மிக்க அன்புடன்
எஸ்.ராமகிருஷ்ணன்

தென்றல்sankar said...

pkp sir i want video mixing software.i need to mix some video file and special effect also please can you help? same as pinnacle studio.please reply me sir
thank you
rsankar
singapore

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்