உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, February 27, 2008

வானத்திலே திருவிழா

சூரியனை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் சனி போன்ற இயற்கை கோள்கள் நம்மிலே, நம் செயல்பாட்டிலே எந்த வித தாக்கங்களை ஏற்ப்படுத்துகின்றனவென திட்டமாய் தெரியவில்லை. ஆனால் பூமியை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் மனிதனின் செயற்கை கோள்கள்(Satellite) நம்மிலே, நம் செயல்பாட்டிலே அதிக தாக்கங்களை ஏற்ப்படுத்தி வருகின்றது உண்மையே.

உதாரணத்துக்கு சொல்லப்போனால் பூமி உருண்டையை இடைவிடாது சுற்றி வரும்

QuickBird, WorldView I போன்ற சேட்டலைட்கள் இன்றி கூகிள் எர்த் நமக்கு கிடைத்திருக்காது.

Global Navigation Satellite System-ன் அந்த 24 சேட்டலைட்கள் இன்றி அமெரிக்க கார்களின் GPS வேலை செய்யாது.

INSAT 4B இல்லாமல் சன் டிவியின் SunDTH நேரடி சேட்டலைட் வழி ஒளிபரப்பு சேவை நமக்கு கிடைத்திருக்காது.

இப்படி டிவி சேனல்களை கேபிள்களின்றி நாடுமுழுதும் ஒளிபரப்ப ,சுற்று புற சீதோஷண நிலையை மணிக்கு மணி தெரிந்துகொள்ள , கடலடி இண்டர்நெட் கேபிள் வெட்டுண்டு போனாலும் அவசரத்துக்கு இணையம் மேய, நமக்கப்பாலுள்ள அண்டங்களை ரொம்ப அவசியமாய் ஆராய, எதிரியின் தந்திர நகர்வுகளை கவனமாய் நோட்டமிட இப்படி பல உதவிகள் இந்த செயற்கை கோள்களால்.

அந்த காலத்து போர் தந்திரம் ஆரம்ப குறி எதிரியை புற உலகிலிருந்து துண்டிப்பது. சாலைகளை துண்டித்தல், பாலங்களை உடைத்தல், துறைமுகங்களை தகர்த்தல் இப்படி.

வரும் கால போர் தந்திரமும் இப்படியே தான் இருக்கும். ஆனால் சற்று வித்தியாசமாக. பகைநாடு பற்றிய தகவல்களை அள்ளித்தரும் இந்த சேட்டலைட்களை நொறுக்குதல்.

சீனா, ரஷ்யாவின் கருத்துப் படி ஆத்திர அவசரமேயில்லாமல் விண்வெளியில் சும்மா ஒடிக்கொண்டிருந்த ஒரு செயற்கைகோளை ஏவுகணை(SM-3) வைத்து சுட்டு அமெரிக்கா ஒரு வெற்றிகரமான ஸ்டார்வார் (Starwar) ஒத்திகை பார்த்துள்ளதாம்.
இதையே தான் சீனாவும் (KillSat) முன்பு ஒருமுறை சாதித்துள்ளது.

ஆக இன்னொரு யுத்தம் வந்தால் முதல் இலக்கு வானமாய் தான் இருக்குமோ...?

சிறு வயதில் படித்த சிறுவர் பாடல் ஒன்று நினைவுக்கு வருகின்றது.

வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூரல் ஒரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டுத் திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவளை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை"

மனசு ஏனோ இலகுவாகி சில்லுனு இருக்குது.

வேதாளம் "மந்திரக்கள்ளி மாயம்" தமிழ் சிறுவர் படக்கதை இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Veethaalam Phantom Mandhirak Kalli Maayam Tamil Children Comics pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories11 comments:

வடுவூர் குமார் said...

சீனா, ரஷ்யாவின் கருத்துப் படி ஆத்திர அவசரமேயில்லாமல் விண்வெளியில் சும்மா ஒடிக்கொண்டிருந்த ஒரு செயற்கைகோளை ஏவுகணை(SM-3) வைத்து சுட்டு அமெரிக்கா ஒரு வெற்றிகரமான ஸ்டார்வார் (Starwar) ஒத்திகை பார்த்துள்ளதாம்.
எனக்கும் இப்படி தான் தோனுகிறது.

sivananthamneela said...

Dear PKP sir,

Accidentally I came to your blog and I don't have words to express my gratitude now!

I spend a lot of time in your collections esp PDF books. But from yesterday I couldn't open any of e-books. Please help!

Thanks,
Siva.

PS: Next time I'll try to write in Tamil :)

RENUSHAN said...

Dear Mr. PKP,

Your site is wonderful. Please accept my appreciation.

I see you release a lot of tamil ebooks in your site. That is a fine gesture. I also have a few tamil books scanned, which I would like to release. Is there a way to convert them into text? I have tried all the OCRs available. How do you people do the books? Type them?

My brother has presented me a new sony reader, and I think the world of it. I have scanned books and some downloaded books in tamil. It would be very helpful if could direct me to a good OCR. I uploaded raw "Washingtonil Thirumanam" before, and I have Thillana Mohanambal running to 300MB! If I could do a conversion, I will be able to upload many books.

தென்றல் said...

அன்பு பிகேபிக்கு!
மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் தகவல்கள்.எனக்கு பெருமையாக இருக்கிறது உங்கள் blog address ஜ எனது கனினியின் internet explorer ரில் முதற்பக்கமாக தேர்வுசெய்ததர்க்கு.
rsankar
singapore

Vino said...

I guess this rhyme was published 3rd standard book. wow awesome rhyme it reminds me good old days..


Vino

தென்றல் said...

பிகேபி சார் ஒரு பிரசசனை எனது கனினியில் எனது லோகல் டிரைவ் அதாவது (சி) ஓபன் பன்ன இயலவில்லை.நான் ஒபன் பன்ன இயலும்போது ஒரு செய்தி The c\:application cannot be run win32 mode. sorry sir எனக்கு கேள்வி கேட்பதே வாடிக்கையாகிவிட்டது
rsankar
singapore

Lipikaar said...

Nice blog, especially refreshing to see content that appeals to the Tamil audience. We would like to introduce you to a quick and easy method of typing Tamil on the Web.

You can try it live on our website, in Tamil!

http://www.lipikaar.com

Download Lipikaar FREE for using it with your site.

No learning required. Start typing complicated words a just a few seconds.

> No keyboard stickers, no pop-up windows.
> No clumsy key strokes, no struggling with English spellings.

Supports 14 other languages!

கயல்விழி முத்துலெட்சுமி said...

இந்த பாட்டை நினைவுக்கு கொண்டுவர ரொம்ப நாளா முயற்சி செய்துட்டு இருந்தேன்.. எதயோ தேடும் போது இது கிடைச்சது .. வானத்திலே திருவிழா நன்றி நன்றி..

vpk said...

wooh...
this is the blog i searched ...you people are doing great job ..i don't have words to express my feeling.

but its splender......

thanks
karthik

vpk said...

if anybody have shandayins kadal pura novel.please upload it


thanks
karthik

abuakram said...

Brother PKP,
You are really enlightening the readers knowledge by sharing worth-informations that you have read,heard,learnt ..Great job...Please keep it up...Many thanks..

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்