உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, March 03, 2008

நாமும் ஓர் பயணி

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் தனது கடைசிநாட்களில் இப்படிச் சொன்னதாய்ச் சொல்வார்கள். கண் கலங்கி தன்னை பார்க்க வருபவர்களை பார்த்து "எல்லாத்துக்கும் கண்டிப்பா ஒரு முடிவு வந்து தானே ஆகனும். முடிவே இல்லாத ஒரு கிரிக்கெட் ஆட்டம் சுவாரஸ்யமாய் இருக்குமா என்ன?"ன்னு சொல்லி சிரிப்பாராம். எவ்வளவு சரியாய்ச் சொன்னார் பாருங்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வந்துவிடுகின்றதே.சாமானியர்களுக்கும் சரி, சாம்ராஜ்யங்களுக்கும் சரி.

இரபீந்திரநாத் தாகூர் அவர்கள் அழகாய் இப்படிச் சொன்னார்.
"எனது பூமியே!
நான் உனது கரையில் ஒரு அந்நியனாகவே வந்து
உனது வீட்டில் ஒரு விருந்தாளியாக வாழ்ந்து
ஒரு நண்பனாகவே உன் இல்லத்தை விட்டு வெளியேறுகிறேன் "

இன்றைக்கு நாம் பலரையும் வழி அனுப்பி வைக்கின்றோம்,
நாளைக்கு
நாமும் அங்கே ஓர் பயணி தான்.எங்கே போகின்றோம்? அதில் தானே மொத்த குழப்பமும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நான் இல்லை.நூறு ஆண்டுகளுக்கு அப்புறமாய் நான் இருக்கப் போவதும் இல்லை. இடைப்பட்ட காலத்தில் தான் எத்தனை போராட்டம்.எத்தனை சம்பவம்.

"கடவுள் எழுதிய சிறுகதைதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும்" என்ற ஆண்டர்சனின் வைர வரிகள் உண்மையாய் தெரிகின்றது.

நாமிருக்கும் வாழ்வே சிலகாலம் தான்.அதுவும் உறவோடு வாழ்ந்தால் பூக்கோலம் தான்னு யாரோ சொன்ன கவிதை வரிகளும் கூடவே நினைவுக்கு வந்து செல்கின்றது.


ரமணி சந்திரன் நாவல் "என்னுயிர் நீ தானே" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramani Chandran En Uyir Neethane Tamil Novel pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories9 comments:

கார்த்திக் said...

//"கடவுள் எழுதிய சிறுகதைதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும்"//

உண்மைதான்.

தமிழ்நெஞ்சம் said...

இந்தப் பதிவில் 'சுஜாதா' வை முன்னிறுத்தித்தான் கருத்து சொல்லுகிறீர்கள். ஆனால் எங்கேயும் 'சுஜாதா' என்கிற பெயரைக் காட்டாமல் பதிந்திருக்கிறீர்கள்.


'இன்றையச் சிறப்பிறக்கம்' பகுதியிலாவது 'சுஜாவை' அடையாளம் காட்டுவீர்கள் என்று எதிர்பார்த்தால் - ரமணி சந்திரனின் புதினத்தைத் தருகிறீர்கள்.

ஆனால் இந்த எதிர்பார்ப்பு நன்றாகவே இருக்கிறது.

சித்தாந்தங்களை நன்றாகச் சொல்லியுள்ளீர்கள் - சொல்லவேண்டிய நேரம் பார்த்து.

நன்றி

தென்றல் said...

dear friend pkp!
i think you feel for sujatha
rsankar
singapore

Anonymous said...

hallo PKP how to instal 'calplus'super calculater for windowsxp. this fecelity not in my computer.please help me. -selvaraj

சிவானந்தம் said...

Dear PKP,

With the inspiration of your blog, I learnt to write in Tamil and kick started a blog
http://abhiviruththi.blogspot.com/

My goal is to improve the quality of my contents to match with yours.

Thanks a lot!!

A special thanks to the great collection at your E-Library.

Regards,
Sivanantham.

Jafar Safamarva said...

அறிந்து கொள்ளுங்கள் : 'நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்;. மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும். (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்;. (அதாவது :) அது முளைப்பிக்கும் பயிர் - விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது.. ஆனால், சீக்கரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; - பின்னர், அது கூளமாகி விடுகிறது. (உலக வாழ்வும் இத்தகையதே.. எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு' (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை - ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆன் - 57:20)

Anonymous said...

//உலக வாழ்வும் இத்தகையதே.. எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு' (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை - ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆன் - 57:20)//

இந்த 21 ம் நூற்றாண்டிலும் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கின்றீர்களே!

அல்லாஹ்வே கூறினாலும் அதை பகுத்தறிய அறிவு வேண்டும்.

Anonymous said...

Hello pkp sir,

I'm am a big fan for ramanichandran novel.thanks for her book

Anonymous said...

Sir,

your blog is very useful. Give me a solution to download videos from youtube. Can we play those downloaded files in Windows media player or winamp?

Waiting for your suggestions.

Long live, thank you.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்