நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் மட்டும் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். ஒரேயடியாய் 750 மைல்கள் தொலைவிலுள்ள மிச்சிகனில் கடாசிவிட்டார்கள். 12 மணிநேர சாலை பயணம். பெரிதாய் களைப்பு ஒன்றும் இல்லை.வந்து சேர்ந்தாயிற்று.
இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கு தான். மிச்சிகன் ஏரி கடல் போல் கிடப்பது பிரம்மிப்பாய் இருக்கின்றது. அமெரிக்காவை பற்றி ஏழுதி ரொம்ப நாளாகி விட்டது.ஆரம்ப காலங்களில் "அமெரிக்கா போறீங்களா?"என்கின்ற தலைப்பில் தொடர்வாய் பல பதிவுகள் எழுதினது நினைவுக்கு வந்தது.எவ்வளவாய் மாறி இருக்கின்றேன்.
"Made in China" சாதனங்களில் ஈய விஷமிருக்குமென அமெரிக்கர்கள் பயந்து போனதாலோ என்னவோ இப்போதெல்லாம் கடைகளின் பிளாஸ்டிக் சாதனங்களில் "Made in Mexico"-ன்னு பெரிதாய் போட்டு பின் "Some parts Made in China"-ன்னு சிறிதாய் லேபல் போடுகின்றார்கள்.திரைக்கு பின்னால் நடப்பது ஆள்றவனுக்குதான் தெரியும்.
தெருவுக்கு தெரு சாரைசாரையாய் வீடுகள் விலைக்கு கிடக்கின்றன.ஆனால் வாங்கத்தான் யாரும் இல்லை. சமீபத்தில் புதுவீடுகளால் உருவாக்கப்பட்ட அநேக புறநகர் நகர்கள் மனித சஞ்சாரமற்று போய் பேய்நகர்களாகிப் போயின.தேர்தலுக்கு பின் இந்த வீட்டின் விலைகள் ராக்கெட்டில் ஏறலாம்.
வீடுகள் மட்டுமே ஒப்பிட்டு பார்க்கும் போது இப்போது சீப்பாய் கிடைக்கின்றன.மற்றவை எதை தொட்டாலும் விலைவாசி ஷாக் அடிக்குது நம்மூர் போலவே.
வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றதாம்.ஆடம்பர, ஆத்திர அவசியமில்லாத புராஜெக்ட்கள் தற்காலிகமாய் நிறுத்திவைக்கப்படுள்ளன.
டிவியில் சிக்கனமாய் செலவு செய்வது எப்படி-னு வகுப்பு எடுக்கின்றார்கள்.அப்படி தான் இலவச சர்வதேச போன்கால்கள் செய்ய http://www.talkster.com பற்றி தெரிந்து கொண்டேன்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை எதிர்த்து சண்டை போட்ட முன்னாள் ராணுவவீரன் கூட டொயோட்டா அல்லது ஹாண்டா பக்கமே சாய்கின்றான் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.நல்ல மைலேஜ் மற்றும் நோ பிராப்ளம் பிராண்ட்களாம்.
அகிம்சை வழியே எங்கள் தீர்வு என்பவர்கள் கிளின்டன்/ஒபாமா டெமாக்ரடிக்-காரர்கள்-கழுதை!
இம்சை வழியே எங்கள் தேர்வு என்பவர்கள் புஷ்/மெக்கெயின் ரிபப்ளிகன் -காரர்கள்-யானை!!
அடுத்து வருவது அகிம்சையோ இம்சையோ?
Fed இரவு பகல் பாராமல் வார நாள் வீக்கெண்ட் பாராமல் கலக்கத்தில் இருக்கின்றார்கள். ஒன்றை கஷ்டப்பட்டு சம்மாளித்து வரும் போது இன்னொன்று இடிக்கின்றது. ஸ்டாக்மார்க்கெட்டை தக்க வைக்க தினமும் எதாவது செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கின்றது. கடந்த வீக்கெண்ட் ஸ்பெஷல் பியர்ஸ்டெர்ன் ஹாரரை இப்போதைக்கு அவர்களால் மறக்க முடியாது.
வல்லரசு கழுகு ஒன்று உண்மையிலேயே விழி பிதுங்கி நிற்கின்றது. நிலைமை இன்னும் மோசமாகாமல் இருக்க எல்லாருமே இறைவனை வேண்டுகின்றார்கள்.
தத்தக்க பித்தக்க வென தள்ளாடி நிற்கும் கரடியே போ போ .
எக்கனாமியை இழுத்து செல்ல அருமை காளையே வா வா .
இது தான் வால் ஸ்டிரீட் வியாபாரிகளின் முனங்கல்.
மும்பையிலும் அதுதான் கேட்கின்றது.
மைதிலியின் கவிதைகள் "இரவில் சலனமற்று கரையும் மனிதர்கள்" தமிழில் மென்புத்தகம் Maithily Iravil salanamatru karaium manithargal Tamil Kavithaikal e-book Download. Right click and Save.Download
Download this post as PDF
No comments:
Post a Comment