என்னிடம் அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று "எப்படி சார் மைக்ரோசாப்ட் Word டாக்குமென்டில் தமிழில் எழுதறது? தமிழில் எழுதினாலோ அல்லது வேறெங்காவதிருந்து காப்பி பேஸ்ட் பண்ணிணாலோ ஒரு மாதிரி எழுத்துக்கள் கட்டம் கட்டமாய் வருகின்றதே.இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் என்பதாகும்."
சமீபத்தில் இது பற்றி நண்பர் Purushothaman.M.S. என்னிடம் விசாரித்திருந்தார்.
"வணக்கம், விகடனில் தற்போது UNICODE முறையில் மாற்றம் செய்துள்ளனர். அதனால் தற்சமயம் கட்டுரைகளை MSWORD ல் COPY செய்தால் சரியாக தெரியவில்லை. Find the Attachment File and Give me the Solutions."
மேலே படத்தில் நீங்கள் காண்பது போல தமிழ் எழுத்துக்கள் Microsoft Office Word-ல் அவருக்கு கட்டம் கட்டமாய் தெரிந்தது.உங்களுக்கும் இதே பிரச்சனை இருந்தால் இதோ தீர்வு.
இங்கு உங்களுக்கு தேவை மைக்ரோசாப்டின் இலவச மென்பொருளான Tamil Indic IME.இதை நீங்கள் கீழ்க்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்து கொள்ளலாம்.இதை நிறுவியவுடன் தமிழ் தமிழாய் Office Word-ல் உங்களுக்கு தெரிந்து உங்களை நிச்சயம் களிப்பூட்டும்.
Download Tamil Indic IME
இந்த மென்பொருளின் இன்னொரு சிறப்பு இது தன்னகத்தே கொண்டிருக்கும் தமிழ் விசைபலகைகள் தாம்.
இம்மென்பொருள்
Tamil Transliteration
Tamil 99 Keyboard
Inscript Keyboard
போன்ற மூவகை கீபோர்டுகளை கொண்டுள்ளது.
அதை நீங்கள் பெற கீழ்கண்டதை செய்ய வேண்டும்.
Click Start->Settings-> Control Panel->Regional and Language Options-> Languages-> Details-> Add-> Tamil
மேற்கண்ட படியை நீங்கள் செய்து முடித்ததும் படத்தில் நீங்கள் காண்பது போல் உங்கள் மானிட்டரின் வலதுகீழ் பகுதியில் EN-English அல்லது TA-Tamil ஒரு தெரிவு இருக்கும்.அதில் தமிழை தெரிவு செய்ததும் கீழே படத்தில் காண்பது போல் ஒரு மினி கீபொர்டு படம் ஒன்று தோன்றும்.
அதை கிளிக்கி மேல்மூன்றில் ஒரு தமிழ் கீபோர்டை தெரிவுசெய்து கொள்ளலாம்.தமிழில் டைப்பி மகிழலாம்.
Tamil 99 Keyboard மற்றும் Inscript Keyboard போன்றவை ஆன்ஸ்கிரீன் கீபோர்டும் இங்கு கொண்டுள்ளது நிச்சயம் நண்பர் சுந்தரராஜன்,நெய்வேலி போன்றோர்களை மகிழ்ச்சி படுத்தும்.
ரமணி ராமச்சந்திரன் நாவல் "பார்க்கும் விழி நான் உனக்கு" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramani Chandran Paarkum Vizhi Naan Unnakku Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Updated with a complete version.Download
Download this post as PDF
10 comments:
Thanks dear PKP
Good stuff. Thanks for your dedicated services.
இதே மாதிரி செயல்பாட்டை NHM Writer கூட தருகிறது.
ஆனால் லதாவுக்கு பதிலாக வேறு எழுத்துரு தேர்வு செய்தாலே "மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ்" சரியாக இயங்கும்.
விவரம் இங்கே
அண்ணாச்சி, நீங்கள் சொன்ன ரமணி சந்திரனின் புத்தகம் வரவில்லை.. அது சார்லி சாப்லின் பற்றியதாயிற்றே.. சரி பார்க்கவும்.. நன்றி...
Dear PKP Sir
daily i have read your web site very superup and useful... then my english is very poor so i want learn Spoke and writen english so please upload any usefull eBooks and site's also....
Thanks & Regards
R.Nandhakumar
mumbai
09323437473
PKP சார்,
ரமணி சந்திரன் அம்மா புத்தகத்துக்குப் பதிலா சார்லி சாப்ளின் புத்தகம் டவுன்லோடு ஆகுது.. தயவுசெய்து சரி செய்யவும்..
உங்கள் சேவைக்கு நன்றி
-அபுல்
பி.கே.பி அவர்களே, ரமணிச்சந்திரனின் மின்நூல் 202ஆம் பக்கத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. தயவு செய்து சரி பார்க்கவும்.
பிகேபி அவர்களே,ரமணிச்சந்திரனின் மென்புத்தகம் 202 ஆம் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறது. அதனை சரிபார்க்கவும்.
இரண்டு சுழி ந் வரமாட்டேங்குதே !
தயவு செய்து விளக்கம் தரவும் !
HI Pkp,
Am a great Fan of RC am not able to open the links whichever u have given..
Post a Comment