உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, March 31, 2008

வைரஸை படைத்து...

புதிதாய் ஒரு ஆண்டி வைரஸ் ஸ்கானெரை யாரோ உங்களுக்கு அறிமுகப்படுத்தியதால் அதை இப்போதுதான் உங்கள் கணிணியில் நிறுவியிருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம் அல்லது ஏதோ ஒரு ஆன்டி வைரஸ் ஸ்கேனர் ஏற்கனவே உங்கள் கணிணியில் ஓடிக்கொண்டிருக்கிறதென வைத்துக் கொள்வோம்.

இந்த வைரஸ் ஸ்கேனர்கள் நெஜமாலுமே உருப்படியாய் வேலை செய்கின்றனவாவென எப்படி சோதித்து பார்ப்பது?.

அதற்காக எங்காவது இலவசமாய் வைரஸ்கள் இறக்கத்துக்கு கிடைக்குதாவென்று தேடவாவேண்டும்? இல்லை.இல்லவே இல்லை.

இங்கே இருக்கின்றது அதற்கொரு தீர்வு.ஆமாம் நீங்களே ஒரு சாம்பிள் வைரசை படைத்து உங்கள் கணிணியில் இட்டு உங்கள் ஆன்டி வைரசு ஸ்கானர் நன்றாக வேலை செய்கின்றதாவென ஒரு "பிட்மஸ்" சோதனை செய்து அறியலாம்.

நீங்கள் செய்ய வேண்டியதென்ன? கீழ்க்கண்ட "சுத்தமா நமக்கு ஒன்றுமே புரியாத" எழுத்துவரிசையை நோட்பேடால் புதிதாய் ஒரு டெக்ஸ்ட் கோப்பை திறந்து அதில் சேமியுங்கள்.அவ்ளோ தான்.

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

உங்கள் ஆன்டி வைரசு ஸ்கானர் "ரியல்டைம்" ஸ்கேனிங்கில் வல்லதுவெனில் உடனே இக்கோப்பை கண்டறிந்து உங்களை உசார்படுத்துவதோடு அதை அழித்தும்விடும். இன்னபிற ஸ்கானர்கள் கொஞ்ச நேரம் கழித்து ஸ்கான்பண்ணி வரும்வழியில் இக்கோப்பை கண்டால் "வைரசு இருக்கு டோய்"-னு அலறிவிடும்.

உண்மையில் இந்த Code வைரசோ அல்லது வேறெந்த பயப்படும் படியான விஷயமோ இல்லை.இந்த மாதிரி ஆண்டிவைரஸ் ஸ்கானர்களின் செயல்பாட்டை ஊர்ஜிதம் செய்ய அனைத்து ஆன்டிவைரசு ஸ்கானர் தயாரிப்பாளர்களும் இதை வைரசு போல பாவிக்க தங்களிடையே உடன்பாடு செய்திருக்கின்றார்களாம். மற்றபடி நான் ஒன்றும் ஹாக்கர் இல்லீங்கோ.

இந்த சாம்பிள் வைரசை கீழ்கண்ட சுட்டியிலிருந்தும் இறக்கம் செய்து கொள்ளலாம்.Try at your own risk.
http://www.eicar.org/anti_virus_test_file.htm

My 2 cents..thats all.
:)

அனார் "ஓவியம் வரையாத தூரிகை" தமிழில் கவிதை தொகுப்பு மென்புத்தகம் Anar Oviyam Varaiyadha Thoorigai Tamil kavithai thokuppu e-book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories6 comments:

தென்றல்sankar said...

mr pkp,i check ready to my pc.yea my antivirus programme is working well.
thanks for your information.

Sen22 said...

Hi PKP,
I Just joined the BCA direct 2nd year.. i need detail C++ book in tamil..


Senthil Kumar
Bangalore

வல்லிசிம்ஹன் said...

நன்றி பிகேபி.

இதை எனக்குக் கூட புரிவது போலக் கொடுத்து இருக்கிறீர்கள்.;)

Nagarajan Pandurangan said...

அன்புள்ள பி கே பி ஐயா,

வைரசை படைத்து - மிக நல்ல பதிவு. நான் மிகவும் தயங்கினேன், முதலில் பரிசோதிக்க. நண்பர்கள் தென்றல் சங்கர் மற்றும் வல்லிசிம்ஹ்ன் இருவரின் பின்னூட்டம் பார்த்து முயற்சித்தேன். மிகவும் நன்றாகவே வேலை செய்தது. நன்றிகள் பல பல. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மு.பா.நாகராஜன்

Tech Shankar said...

You can have a look @ there also.


மின்னஞ்சல் அட்டாச்மென்ட்டும் வைரசும்.வைரசு இருக்கா? இல்லையா?


Thank you

Anonymous said...

நான் என்னுடைய Avast Anti-virus மென்பொருளை சோதித்துப்பார்த்தேன்... நன்றாக வேலை செய்தது.. பின்வரும் சுட்டியையும் தந்தது...

http://www.avast.com/eng/eicar-antivirus-test-file.html

மிக நல்ல தகவல்.. நன்றி பி.கே.பி சார்..!

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்