வாய்க்காகவும் வயிற்றுக்காகவும் செய்யப்படும் அன்றாட வேலைகளுக்கும் அப்பாற்பட்டு நாம் ஒவ்வொருவருக்கும் மனதை நிறைவுபடுத்தும் ஒரு பொழுது போக்கு கண்டிப்பாய் இருக்கவேண்டும் என ஒரு பெரியவர் ஒருமுறை சொன்னது நெஞ்சில் அப்படியே ஆணி அடித்தாற் போல் பதிந்து போனது.அவர் அதற்கு சொன்ன காரணம் தினசரி சிக்கல்களிலிருந்து மனது சிறிது திரும்பி இலகுவாய் இருக்கவும், ஓய்வூர்தியம் வாங்கும் காலத்திலும் நொடிந்து உட்காரவிடாமல் சுறுசுறுப்பாய் வைத்திருக்கவும் அது உதவும் என்றார்.
கால்ச்சட்டை போட்டிருந்த காலத்திலேயே தபால் தலை சேகரித்தல், நாணயங்கள் சேகரித்தல் என பல பண்ணியிருப்போம். இன்று அது ஒரு வேளை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மைல்களுக்கங்கே ஒரு பரணில் இருந்தாலும் இருக்கலாம்.இல்லாமலும் போயிருக்கலாம்.
அப்படியே தான் பலரின் தமிழ் ஆர்வமும். யாருமே வாசிக்கப்போகாவிட்டாலும் எழுதும் ஆர்வத்தில் டைரிகளிலும் நோட்டுபுத்தகங்களிலும் எழுதி எழுதித் தள்ளி, ஊருக்கு ஊர் பழைய அட்டைப்பெட்டிகளில் சிலந்தி பின்னல்களுக்கிடையே புதைந்து போன கதைகளும் கவிதைகளும்,கட்டுரைகளும் காவியங்களும் ஆயிரமாயிரம் இருக்கும்.
இன்றைக்கு நீங்கள் சிக்கியிருக்கும் இந்த நவீன சிலந்திப் பின்னல் (Web)அநேகருக்கு ஒரு வடிகால். வலது இடதுவென வசமுள்ளோரெல்லாம் எழுதிக்குவிக்கின்றார்கள்.
நானும் அப்படித்தான்.இன்றைக்கு சரியாய் நாலாண்டுகள் ஆயிற்று.
தட்டி கொடுத்த நண்பர்கள் சிலர்.சத்தமின்றி தள்ளி நின்று பார்த்து விட்டு செல்வோர் அநேகர்.இருசாராரும் பெரிதாய் உற்சாகமூட்டுகின்றனர்,ஊக்கமளிக்கின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் எனது முதல் பதிவையே "தமிழ் கலாசுகிறது"வென தலைப்பிட்டிருந்தேன்.தமிழ் இன்னும் ஆக்கப்பூர்வமாய் இணையத்தில் கலாச வேண்டுமென அவா.
இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கிறது.ப்ரியன் "ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்" கவிதை தொகுப்பு இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Priyan "Oru Nilavil Sila Natchathirangal" pdf Tamil poems ebook Download. Right click and Save.Download

10 comments:
Thanx for this day's special-Priyan's kavithai book.Nice.
Congratz PKP.
http://cid-7c61537f2ab90da6.skydrive.live.com/browse.aspx/Tamil%20Mantram
சுஜாதாவின் 'விக்ரம்' - 'கடவுள் இருக்கிறாரா?' - பிடிஎப் மென்னூல்கள் வேண்டுவோர் கவனத்திற்கு
http://cid-7c61537f2ab90da6.skydrive.live.com/browse.aspx/Tamil%20Mantram
Dear PKP Sir,
தங்கள் நான்காண்டு சாதனைக்கு வாழ்த்துக்கள். இணைய தோட்டத்தில் உங்கள் வலைப்பூக்கள் இன்னும் நிறைய பூக்கட்டும்.
நன்றி
- ஆரோக்கியராஜ்.
வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் & வாழ்த்துக்கள்.
வருஷத்துக்கு ஒன்று.
நான்காம் ஆண்டு விழாவிற்கு வாழ்த்துக்கள்
வால்பையன்
அன்புள்ள பிகேபி ஐயா, வணக்கம்.,
தமிழ் கூறும் நல்லுலகம் வாழவும், வளரவும் தங்களை போன்றோர் அவசியம். நீங்கள் தொடர்ந்து எழுதவும், நலமுடன் வாழவும் இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்,
மு.பா.நாகராஜன்
வாழ்த்துக்கள் பி கே பி அய்யா...
4 ஆண்டுகள் என்ன மேலும் 40 ஆண்டுக்ள தாங்கள் வாசகர்கள் எனும் பெரும்பான்மை துணை ஆட்சி புரிய வாழ்த்துக்கள்..
«ýÒûÇ PKP ³Â¡ «Å÷¸ÙìÌ,
¿ñÀý ¸¡ƒ¡ ¦Á¡ö¾£ý,
¯í¸Ç¢ý «¨ÉòÐ À¾¢×¸Ùõ ±ý §À¡ýÈ «ÖÅĸ À½¢Â¢ø ¯ûÇÅ÷¸ÙìÌ Á¢¸×õ ÀÂÉÇ¢ôÀ¾¡¸ ¯ûÇÐ. ±É§Å ¾¡í¸û §ÁÖõ ÀÄ ÀÂÛûÇ À¾¢×¸¨Ç À¾¢× ¦ºöÐ ±í¸Ç¢ý Óý§ÉüÈò¾¢ø ÀíÌ ¦¸¡ûÇ §Åñθ¢ý§È¡õ.
திரு. பி கே பி,
"தமிழ் கலாசுகிறது - நான்கு ஆண்டுகள்" எவ்வளவு செய்திகள்,எவ்வளவு விளக்கங்கள். தொடர்க உம் தமிழ்ப்பணி. வாழ்த்துக்கள்.
சிங்கராசு
Post a Comment