டிஜிட்டல் யுகத்தின் இன்னொரு மாயை இந்த போட்டோஷாஃபிங். ஃபார்வேர்டு மெயில்களில் நிஜமென வரும் படங்களில் பெரும்பாலானவை போட்டோஷாப்போ அல்லது பிற இலவச போட்டோ எடிட்டர்கள் வைத்தோ அருமையாக எடிட்செய்யப்பட்டவையே.எளிதில் நாம் பொய்யென முடியாது.அப்படியேத்தான் திருமண தகவல் தளங்களிலும். போட்டோவை பார்த்துவிட்டு மட்டும் ஏமாந்துவிடக்கூடாது. நம்மாட்கள் படங்களில் டச்சப் கொடுப்பதில் சமர்த்தர்.பெரும் கார்ப்பரேட்டுக்காக வேலைப்பார்க்கும் விளம்பர டிசைனர்களை விட இது மாதிரியான அமெச்சூர் போட்டோஷாப் கலைஞர்கள் வித்தகர்களாய் இருக்கின்றார்கள்.
கீழே பாருங்கள் சில பெருசுகளின் போட்டோ எடிட்டிங் திறமையை
Time பத்திரிகை வரைந்த மெக்கெயினின் கை. இது ஒரு புது விதமான ஸ்டைலாம். நாம் ஒத்துக்க வேண்டியதுதான்.
Tommy Hilfiger-ன் விளம்பரம்.அந்த பெண்ணின் இடதுகால் எங்கே போச்சுப்பா?.jpg)
Kmart ஃப்ளையரில் சிறுவனை குறுக்கேவெட்டிய கொடுமை..jpg)
KFC-யின் கேவலமான சிக்கன் பக்கெட் போட்டோ ஒட்டல். நன்றாக உற்றுப்பாருங்கள் தெரியும்..jpg)
Microsfot-ன் தடம் மாறிய ஓடு தளம்..jpg)
Gap-ன் போட்டோஷாப் திறமை..jpg)
இந்த பொதுஜன பிரபல போட்டோ எடிட்டிங் டிரெண்ட் அரசியலிலும் புகுந்து சர்ச்சையை அவ்வப்போது கிளப்புவது இன்னொரு நவீன நோக்காடு. சில மாதங்களுக்கு முன் ஈரான் ஏவுகணை சோதனை செய்ததாக வெளியான அந்த மூன்று ஏவுகணைகள் சீறிப்பாயும் படம் பிரபல நாளிதழ்களிலெல்லாம் முதற்பக்கத்திலேயே வெளியானது.அப்புறமாகத்தான் யாரோ கண்டுபிடித்தார்கள். அந்த படம் எடிட்செய்யப்பட்டது என்று.என்ன செய்வது. அரசியலில் இதெல்லாம் செய்யவேண்டியிருக்கின்றது.
எடிட்செய்யப்பட்டு வெளியானதும்.jpg)
நிஜமும்.jpg)
இங்கே மட்டும் என்ன வாழுதாம். இரட்டைகோபுர விமானத்தாக்குதல் வீடியோவில் விமானம் ஒன்று ஒரு கோபுரத்தில் மோதி அதன் மூக்கு எந்த பாதிப்பும் இன்றி மற்ற பக்கத்தில் வெளிவருகின்றது.அது என்ன மாயம் என இன்னொரு சாரார் கேள்வி எழுப்புகின்றனர்.
நிஜமாகவே நிஜம் இக்காலங்களில் எங்கும் அபூர்வமாகிவருகின்றது.
குடந்தை ஸ்யாமா சதுரகிரி யாத்திரை ஆன்மீகப்புத்தகம் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Kudanthai Syaama Sathuragiri Yaathirai in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Sathuragiri temple location on google map
Sathuragri Mahalingam Temple located near mallapuram border of madurai,virudhunagar districts. 18 siddhars caves, mahalingam, santhana lingam (lord sivas) temples are located in forests.
Download this post as PDF


கொலஸ்ட்ரால் பிரச்சனையும், பிளட் பிரஸர் பிரச்சனையும் ஐ.டி காரர்களுக்கேயான ஒரு பிரதான பிரச்சனை. போனமுறை மருத்துவரிடம் ஜெனரல் செக்கப் சென்றபோது கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகமாயிருக்கு சார், கொஞ்சம் வொர்க்அவுட் பண்ணுங்களேன்னு ஆலோசனை கொடுத்தார். இலங்கைத் தமிழர் அவர். மருத்துவம் படித்து அமெரிக்கா வரைக்கும் வந்து இங்குள்ள தொல்லைபிடித்த தேர்வுகளையெல்லாம் எழுதி பாஸ்செய்து மருத்துவராகி இருக்கின்றார். இப்படி நம்மிடையேயிருந்து இங்கு வந்து சாதித்த சாதாரணமானவர்கள் இங்கு அநேகம். கேட்டால் தோல்வியில் துவண்டுவிடாமல் வாய்ப்புக்காக எப்போதும் விழித்தே இருக்கவேண்டும் என்பார்.
நமது வலைப்பதிவுக்கு அவ்வப்போது வருகை தரும் நண்பர் 

சில இசைத்தளங்களில் ஸ்டிரீமிங் ஆடியோ வைத்திருப்பார்கள். பாடல்களை கேட்கமட்டுமே செய்யலாம். ஆனால் MP3-யாக அவற்றை இறக்கம் செய்ய முடியாது வென்றிருக்கும். அதனால் நாம் ஆன்லைனில் இருக்கும் போது மட்டுமே அப்பாடல்களை கேட்கலாம். ஆஃப்லைனிலோ அல்லது CD பிளயர்வழியோ அந்த உங்கள் அபிமான பாடல்களை கேட்கமுடியாது. இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவுவதுதான் ஆடியோ ரெக்கார்டிங். உங்கள் ஸ்பீக்கரில் ஒலிக்கும் எல்லா ஒலியையும் நீங்கள் MP3-யாக பதிவு செய்யும் வசதி உங்கள் கணிணில் உள்ளது தெரியுமோ?
டிவிடி பிளயரிலுள்ள USB போர்ட்டில் நேரடியாக ஒரு பென் டிரைவை இணைத்து டிவியில் மூவி பார்க்கின்றோம். காரின் AUX ஆடியோ input-ல் கேபிளை நுழைத்து கையிலிருக்கும் ஐபாடு பாட்டு ஒன்றை காரு அதிர கேட்கின்றோம்.Majic Jack-க்கை இந்திய கணிணி ஒன்றில் இணைத்து அமெரிக்காவுக்கு லோக்கல் கால் செய்கின்றோம்.இப்படி மனதுக்கு இதமான சுகமான அநேக தொழில் நுட்பங்கள் சந்தைகளில் வந்து கொண்டிருந்தாலும் சில நுட்பங்கள் ஏனோ நம்மை பகீரென திகில் பிடிக்கும் வண்ணமும் வைக்கின்றன.அந்த மாதிரியான ஒரு தொழில் நுட்பத்தின் அடுத்த நிலை பற்றிய ஊகத்தை சமீபத்தில் ஒரு டாக்குமெண்டரி திரைப்படம் மூலம் அறிய வந்தேன். நம் வலைப்பூவில் நாம் ஏற்கனவே பேசிய தொழில் நுட்பம் தான் அது என்றாலும் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்தில் மொத்த மனித குலத்தையே யாருக்கோ அடிமைப்படுத்தும் பாங்கில் மெதுவாக எழும்பிவந்து கொண்டிருக்கின்றது 



