கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் நியூயார்க்கிலுள்ள ஒரு மருத்துவமனை (Vassar brothers medical center)சூப்பர்மார்க்கெட் சரக்கு போல வரும் நோயாளிகளுக்கு பார் கோடு (Bar code) போட தொடங்கியது.இதனால் மொத்த வேலையும் மிக எளிதாவதோடு மனித தவறுகளும் தவிர்க்கப்படுவதாக சொன்னார்கள்.மில்லியன் கணக்கில் டாலர்களும் மிச்சமாம்.
இப்போது ஐடி-காரர்கள் இன்னொரு டெக்னாலஜியோடு வந்திருகின்றார்கள்.
மனிதனுக்குள்ளே ஒரு சிலிகன் சிப்பை (Verichip அல்லது xmark) பொருத்திவிட்டு அவன் நடமாட்டத்தை கண்காணிக்க போகின்றார்களாம்.இரு அரிசி அளவே இருக்கும் இந்த சிப் மனிதனில் வலது கையில் நைசாக செருகப்படும். அப்புறமாய் அது செருகப்பட்டது சுத்தமாய் எவருக்கும் தெரியாது. அந்த சிப்பிலுள்ள 16 டிஜிட் எண்வழி அவன் கணிணியால் கண்காணிக்கப்படுவான் அடையாளம் காணப்படுவான். இதை radio-frequency identification (RFID) என்கின்றார்கள்.அப்புறமென்ன? மொத்த ஜாதகத்தையும் அது காட்டிவிடும்.
அமெரிக்க அண்ணாச்சிகள் Wal-Mart, Procter & Gamble, மற்றும் அரசு தபால் நிறுவனமான United States Postal Service போன்றவை இவற்றை தங்கள் பணியார்களிடையேஅமுல்படுத்த போவதாக பேசிக்கொள்கிறார்கள்.
"verichip inside"-னு இனி எல்லாரும் நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டிக்க வேண்டியது தான். கணிணியார் கண்ணிலிருந்து யாரும் தப்பமுடியாது போலும்.
Download this post as PDF
2 comments:
மனிதனின் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி நல்லதுதான். ஆனால் ஆபத்தில் முடியாமலிருந்தால் மகிழ்ச்சி
நன்றி பிகேபி
நல்ல தகவல்
Post a Comment