ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாய் மனிதனையே கடித்த கதையாய் என்பார்கள்.மின்சார உற்பத்தி துறையில் அது சீக்கிரத்தில் நடந்தாலும் நடந்துவிடலாம் போல் இருக்கின்றது. இதுவரை எண்ணெயிலிருந்து, நிலக்கரியிலிருந்து, வேகமாய் விழும் தண்ணீரிலிருந்து,வீசும் காற்றிலிருந்து,கடல் அலைகளிலிருந்து தான் மின்சாரம் எடுத்தார்கள். இனி பாண்டிபஜாரில் வேகமாய் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருக்கும் பாதசாரிகளின் சிறு சிறு நடைஅதிர்வுகளிலிருந்தெல்லாம் மின்சாரம் தயாரிக்கப்படலாமாம் .இதை Crowd Farming System என்கின்றார்கள்.இதை MIT மாணவர்களான James Graham-ம் Thaddeus Jusczyk-ம் நிரூபித்திருக்கின்றார்கள்.இவர்கள் வடிவமைத்துள்ள ஒரு நாற்காலியில் யாராவது உற்கார்ந்தால் ஒரு சிறு மின்விளக்கு எரியுமாம். மேலும் இதை ஏற்கனவே காங்காங்கிலுள்ள ஒரு உடற்பயிற்சி நிலையகாரர்களும் நிரூபித்திருக்கின்றார்கள். சைக்ளிங் செய்யும் ஒவ்வொருவரும் அந்த உடற்பயிற்சி நிலையம் ஒளிர அங்குள்ள பாட்டரியை சார்ஜ் செய்கின்றார்களாம்."Powered by YOU" என்று வேறு பெருமையாய் சொல்லிக்கொள்கின்றார்கள்.
குளிர்ச்சியாய் பீர் ஊற்றிக்கொண்டு மகிழ்ச்சியாய் இளசுகள் பப்புகளில் ஆடிக்கொண்டிருக்க அவர்கள் எப்படி தங்களை அறியாமலே மின்சாரம் தயாரிக்க உதவுகிறார்களென வீடியோவை ஓட்டிப் பாருங்கள். எதிர்காலத்தில் இந்நுட்பம் என்னென்ன பரிமாணங்களெல்லாம் எடுக்கப்போகின்றனவோ?
கடவுளுக்கு தான் தெரியும்.அதென்ன ரோடுகளில் இடைவிடாமல் விர்விர்ரென ஓடும் கார்களின் அதிர்வகளை மட்டும் விட்டு வைத்திருக்கின்றார்கள்.

No comments:
Post a Comment