ஒரே ஒரு செர்வர் டப்பாவை வைத்துக்கொண்டு அதில் விண்டோஸ்,யூனிக்ஸ் என பல வித செர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை அல்லது பல விண்டோஸ்களை ஓட்டி பல பெருநிறுவனங்கள் காசு சேமித்துக்கொண்டிருக்கிறார்கள். குப்பையாய் கிடந்த அநேக டேட்டா சென்டர்கள் இதனால் சுத்தமாகி வருவதாய் தகவல்.இதற்கெல்லாம் காரணம் இன்றைக்கு சூடாக பேசப்படும் செர்வர் வெர்சுவலைசேசன் (Server Virtualization) அல்லது கைப்பர்வைசர் (Hypervisor) டெக்னாலஜி தான் காரணம். இத்தொழில் நுட்பத்தில் முன்ணணியிலுள்ள விஎம்வேர் (VMWare VMW)நிறுவனத்தின் பங்குகள் கடந்த வாரம் விற்பனைக்கு வர Subprime போன்ற சிக்கல்களில் நலிந்து கிடந்த வால் ஸ்டிரீட் சிறிது விழித்து அதென்ன "வெர்சுயலைஷேஷன்" என வியந்து பார்த்துகொண்டிருக்கிறது.கிடு கிடுவென ஏறுமுகத்தில் இருக்கும் இதன் பங்குகள் அடுத்து சில வார மாதங்களில் என்னவாகும் என தெரியாது. அடுத்த கூகிள் இதுதான் என சிலர் பீற்றிக் கொண்டு பங்குகளை வாங்கி குவிக்க, பலர் பங்கு வர்த்தக தந்திரங்களில் சிக்கிவிடாதிருக்க உஷாராய் எச்சரிக்கிறார்கள்.
சாலிடான விஎம்வேர் நிறுவனத்தின் ஈஎஸ்எக்ஸ் (ESX) மென்பொருள்,பல விதங்களில் பெரு நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு மிச்சப்படுத்துவதால் பெரிய நம்பிக்கை இருப்பதாக புதிதாய் பலரும், குறிப்பாய் I.T வல்லுநர்கள் இதன் பங்குகளை வாங்குகிறார்களாம்.
போகப் போகத்தான் தெரியும் மின்னுவது பொன்னாவென்று.

No comments:
Post a Comment