டமால் டுமீலென குண்டுகளை வீசி போர் செய்த காலம் அக்காலம். இன்று நாடுகளெல்லாம் நாகரீகமாய் போர் செய்ய கற்று வருகின்றன.அதில் பண விளையாட்டே ஆயுதம். உலகின் நான்காவது பெரிய எண்ணெய் வள நாடு ஈரான். அங்கு பெட்ரோல் நிலையங்களில் மணிக்கணக்கில் வரிசையில் நின்று பெட்ரோல் போட வேண்டிய அவலம். எல்லாம் பொருளாதார திட்டமிடல் சரியில்லையாம்.
ஜிம்பாவே எனப்படும் அந்த கிரிக்கெட் புகழ் நாட்டில் பயங்கர குழப்பம்.இன்று பத்தாயிரம் ஜிம்பாவே பணங்கள் கொண்டு போனால் தான் ஒரு ரொட்டி துண்டு வாங்க முடியுமாம்.இத்தனை அவலங்களுக்கும் காரணம் பொருளாதாரம் அல்லது எக்கனாமிக் கணக்குகளோடு தவறாய் அந்த அரசு விளையாடிய விளையாட்டு தான் காரணம் என்கின்றார்கள்.
சிறிதாய் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் பெரிய தாக்கங்களை முன்னேற்ற பாதையிலோ அல்லது அழிவுப்பாதையிலோ நடத்தி விடுகின்றது. அது பெரிய அணுவாயுதப்போரோடும் கொடுமை என்கின்றார்கள்.
இவ்வரிசையில் புதிது இன்றைய சீனா-அமெரிக்க வர்த்தப் போர். இந்தியா போலல்லாது சீனா தன் பண மதிப்பை மாற்றாது அப்படியே நெடுங்காலமாய் வைத்து டாலர் அட்வாண்டேஜை பெற்றுவருகின்றது.(இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருவது அனைவருக்கும் தெரிந்ததே) இப்படியே undervalued-ஆக இருக்கும் சைனாவின் பணமதிப்பை மாற்ற அமெரிக்காவின் நிர்ப்பந்தம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது. சீனர்களுக்கோ இதில் சிறிதும் விருப்பமில்லை. ரொம்ப மிரட்டினால் தங்களிடமுள்ள $1.3 trillion அமெரிக்க டாலர் இருப்பை விற்று விடப்போவதாக மறைமுக மிரட்டல். அப்படியானால் அமெரிக்க எக்கனாமி மிகப்பெரிய கிராஷ்க்குள்ளாகும் என நம்பப்படுகின்றது. ஆனால் அப்படி ஒர் நிலைவந்தால் அது சீனாவையும் இந்தியாவையும் back fire-ம் செய்யும். ஆக கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. மாறி மாறி அடித்து பழிதீர்த்து கொண்டால் அனைவருக்கும் இன்னல்தான்.
Download this post as PDF
No comments:
Post a Comment