உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, August 14, 2008

ஆடியோ ரெக்கார்டிங்

சில இசைத்தளங்களில் ஸ்டிரீமிங் ஆடியோ வைத்திருப்பார்கள். பாடல்களை கேட்கமட்டுமே செய்யலாம். ஆனால் MP3-யாக அவற்றை இறக்கம் செய்ய முடியாது வென்றிருக்கும். அதனால் நாம் ஆன்லைனில் இருக்கும் போது மட்டுமே அப்பாடல்களை கேட்கலாம். ஆஃப்லைனிலோ அல்லது CD பிளயர்வழியோ அந்த உங்கள் அபிமான பாடல்களை கேட்கமுடியாது. இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவுவதுதான் ஆடியோ ரெக்கார்டிங். உங்கள் ஸ்பீக்கரில் ஒலிக்கும் எல்லா ஒலியையும் நீங்கள் MP3-யாக பதிவு செய்யும் வசதி உங்கள் கணிணில் உள்ளது தெரியுமோ?

விண்டோஸ் எக்ஸ்பியிலுள்ள Accessories ->Entertainment ->Sound Recording சுத்த வேஸ்ட். அதனால் 60 நொடிகள் தான் ஒலி பதிவு செய்ய இயலும்.

உங்களுக்கு தேவை ஆடசிட்டி. இந்த இலவச மென்பொருளை முதலில் நீங்கள் இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவுங்கள்.
Download Audacity

பின் நீங்கள் ஆடசிட்டியில் ரெக்கார்டு செய்ய முயலும் போது அதுவே கேட்கும் LAME DLL-ஐ (Lame Aint an MP3 Encoder) கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
Download lame_enc.dll

மறக்காமல் Audacity-ல் மேலே படத்தில் கண்ட படி Stereo Mix-ஐ தெரிவுசெய்து கொள்ளுங்கள். Edit -> Preferences -> Audio I/O-ல் உங்கள் சவுண்ட் கார்டு தெரிவுசெய்யபட்டிருக்க வேண்டும். அவ்ளோதான்.

இசையை ஓட விட்டதும் அந்த சிவப்பு பொத்தானை அழுத்துங்கள். ரெக்கார்டிங் ஸ்டார்ட் ஆகிவிடும்."Export as MP3" யை செலக்டி MP3 ஆக சுட்டுவிடலாம். Thats easy.

(Updated: நண்பர் எம்.ரிஷான் ஷெரீப் பரிந்துரைக்கும் இன்னொரு அருமையான இலவச எளிய மென்பொருள் இங்கே http://getitfreely.co.cc/content/record-internet-radio-embedded-audio)

லஷ்மியின் புதினம் "நிற்க நேரமில்லை" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Lakshmi Nirka Neram Illai Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories4 comments:

வடுவூர் குமார் said...

இதிலிம் ஓடவிட்டு காத்திருக்கனுமே!!
அதைவிட கொஞ்சம் வசதியானது பயர்பாக்ஸின் வீடியோ டவுன்லோட் நீட்சியை உபயோகிப்பது.இது எல்லா தளங்களிலும் வேலை செய்யாவிட்டாலும்,பெரும்பாலன பக்கங்களில் வேலை செய்கிறது.
முழு பாடலையும் கேட்டு பிடிப்பதை காட்டிலும் அப்படியே தரவிரக்கம் செய்வது சுலபம் அல்லவா?

கிருத்திகா said...

தகவலுக்கு நன்றி... mp3mymp3 யும் இதுபோன்றதொரு சேவையை செய்கிறது. பதிவு செய்வதோ மிகவும் எளிது. http://www.mp3mymp3.com/

Bee'morgan said...

வாவ்.. பிகேபி.. அருமையான தகவல்.. நானும் நீண்ட நாட்களாக audacity உபயோகித்து வருகிறேன். ஆனால், வெறுமனே ஒலிக்கிளிப்புகள் உருவாக்கவும், பிற file formatலிருந்து mp3 ஆக மாற்றவும் மட்டுமே உபயோகித்து வந்தேன்.. இந்த வசதியையும் இனி முயற்சிக்க வேண்டும். :) என்னைப்போன்று E snips ல் அடிக்கடி பாடல் கேட்பவர்க்கு பெரிதும் உதவும் என நினைக்கிறேன்..

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் PKP,

நன்றி நண்பரே !

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்