நம் குரல்தனை எழுத்துக்களாக மாற்றும் speech recognition நுட்பம் வளர்ந்துகொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனாலும் அது இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டிருப்பது எனக்கு தெரிந்திருக்கவில்லை.
FM-ல் ஒரு ஆங்கிலப்பாடலை கேட்கின்றோம். ஏனோ அது பிடித்துபோய்விட்டது. நம்மை அறியாமலே நாம் அதை முணுமுணுக் கொண்டே வீடு வருகின்றோம். கவுச்சில் (Couch) உட்காரும் போது மீண்டும் அந்த பாடல் நினைவுக்கு வருகின்றது. இன்னொரு முறை அந்த இனிய இசையை கேட்டால் நன்றாய் இருக்கும் போல் தோன்றுகின்றது. ஆனால் அது என்ன பாடல், யார் பாடியது, எந்த ஆல்பத்திலிருந்து என ஒன்றுமே தெரியாது உங்களுக்கு. என்ன செய்வது இப்போது?
மிடோமி (midomi) உங்களுக்கு உதவுகின்றது. நீங்கள் செய்ய வேண்டிதெல்லாம் மிடோமி இணையதளம் போய் அந்த பாடலை 10 நொடிகள் பாடி அல்லது hum-மி காண்பியுங்கள். அவ்வளவுதான். அவர்கள் அந்த பாடலை தேடி உங்களுக்கு கண்டுபிடித்து தருகின்றார்கள். என்னமோ MARS அதாவது Multimodal Adaptive Recognition System என்றொரு தொழில் நுட்பமாம்.இந்த அட்டகாச வேலைகளையெல்லாம் செய்கின்றது. டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாடல் என்னப் பாடல் என கண்டுபிடிக்க மிடோமியிடம் சில செக்கண்டுகள் ரெக்கார்டு பண்ணி காட்டினாலே போதும் நொடியில் அது அந்த பாடல் பற்றிய முழு ஜாதகத்தைம் வைத்துவிடுகின்றது. iPhone-னிலும் இது கையடக்க பயன்பாடாய் இலவசமாய் கிடைக்கின்றது.
http://www.midomi.com
Backstreet Boys-ன் "Show me the meaning" பாடலை எனது கனகனத்த குரலில் பாடிக்காண்பித்தேன். மிடோமி உடனே அதை கண்டுபிடித்து விவரத்தை தெரிவித்ததோடல்லாமல் அந்த பாடலின் யூடியூப் வீடியோக்கான சுட்டியையும் கொடுத்து அசத்தியது. ஆச்சரியமாய் இருந்தது.
இது போல தமிழிலும் வர இன்னும் கொஞ்சநாள் தவம் இருக்கவேண்டும்.
அப்போது நாம் இருமினாலும் தும்மினாலும் அது யாருடைய இருமல் யாருடைய தும்மல் என கணிணியார் கரேட்டாக கண்டுபிடித்துச்சொல்வார்.
விதைகள் கிறிஸ்தவ தமிழ் மென்நூல்.Vithaikal Christian Tamil pdf ebook Download. Right click and Save.Download
Download this post as PDF
5 comments:
Dear PKP,
Romba useful and surprising detail, nijammave technology romba valarnthuruchu theriyuthu. Post is really good.
எப்படி எப்படியெல்லாம் தேடுகிறார்கள் இணையத்தில்.
மக்களை யோசிக்கவிடவே மாட்டாங்க போலிருக்கிறது.
"நாம் நமது வீட்டு நாய் காணாமல் போனால், அதைக்கூட இணையத்தில் தான் தேடப்போகிறோம்", இது நாளை கண்டிப்பாக நடந்தே தீரும்.
இன்றே கூட இது சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் அதைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
yenna PKP
Neehga ippo ahitgama Iphone mattera sollunringa so neega Iphone vangittingalo
:)
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!
http://akvideos.metacafe.com/ItemFiles/%5BFrom%20www.metacafe.com%5D%201626601.7823746.1.wmv
http://akvideos.metacafe.com/ItemFiles/%5BFrom%20www.metacafe.com%5D%201626677.7823937.1.wmv
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!
தலை நிமிர தடையேதும் இல்லை
தமிழன் தன்னோடு மோத படையேதும் இல்லை
காலம்...
அடியோடு அவனை
அனல் மீது சாடும்
ஆனாலும்...
அவன் வாழ்வு
முடியாத நதியாகி ஓடும்
தலை நிமிர தடையேதும் இல்லை
தமிழன் தன்னோடு மோத படையேதும் இல்லை
Post a Comment