உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, August 21, 2008

சிறு துளிகள்


இணையம் வந்தாலும் வந்தது இன்றைக்கு அங்கு பணம் சம்பாதிக்க பலமார்க்கங்கள் இருக்கின்றன. அதற்காக நாம் சும்மா இருந்தால் போதும் அது கொட்டிக்கொடுக்கும் கற்பகதரு என்றர்த்தமில்லை.விற்க உங்களிடம் ஏதாவது ஒரு சரக்கு இருக்கவேண்டும். வாங்குவதற்கு உலக அளவில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் நான் கண்ட ஒரு உதாரணத்தையே இங்கும் உங்களுக்கு எடுத்துக்காட்டாக்க விழைகின்றேன்.

மீண்டும் இந்த ஐபோனை பற்றியே இங்கு பேசுவதால் கோபித்துக்கொள்ள வேண்டாம். இந்த ஐபோனின் ஒரு மிகப்பெரிய பாஸிட்டிவ் பாயிண்ட் அதன் SDK அதாவது Software Developement Kit. இந்த மென்பொருள் கிட்டை வைத்து ஐபோனுக்கான பயன்பாட்டு மென்பொருள்கள் பலவற்றை மினி மினியாக ஒருவர் இஷ்டத்துக்கு தயார் செய்து கொள்ளலாம். என்ன, கொஞ்சம் Objective C மொழி தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒரு Mac-OS X உள்ள கணிணிப்பொறி மற்றும் ஒரு ஐபோன் தேவைப்படும். அருமையான, பலருக்கும் பயன்படும் ஒரு சிறுபயன்பாட்டை படைத்து அதை ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோரில் விலைக்கு வைத்தால் கூவிக் கூவி நாம் விற்கத்தேவையில்லை. இன்றைக்கு மில்லியன்கணக்கில் ஐபோன்கள் மார்கெட்டில் உள்ளன. இதில் ஒரு சொற்ப சதவீதத்தினருக்கு மட்டும் டாலர் ஒன்றுக்கு உங்கள் அப்ளிகேசனை விற்றாலும் கொடிகட்டிப் பறக்கலாம்.

அப்படியே Apple App Store-ல் மேய்ந்து வந்த போது ஒரு தமிழ் பெயர் அடிபட்டது. முத்து ஆறுமுகம் (Muthu Arumugam).திண்டுக்கல் அருகே காட்டுப்புதூர் என்ற குக்கிராமத்திலிருந்து படித்து வெளியேறியவர்.இவர் தானே டெவலப்செய்த TamilDaily எனும் ஒரு iPhone அப்ளிகேஷனை $0.99-க்கும் Upcoming Plus எனும் ஒரு அப்ளிகேஷனை $1.99-க்கும் அங்கு விற்றுவருகின்றார். மகிழ்ச்சியாய் இருந்தது. யாருக்குத் தெரியும் அந்த சிறு துளி சிறு துளிகள் சேர்ந்து பெரு வெள்ளமாகலாம். புரோகிராமிங் படிச்சு தொலச்சோமில்லையேனு வருத்தமாயிருந்தது.

செம்மல் நபியைக் காணச்செல்வோம் எனும் இஸ்லாமிய தமிழ் மென்னூல் இங்கே உங்கள் இறக்கத்துக்காக. Chemmal Nabiyai Kaanach Selvoom Islamic Tamil ebook in pdf format Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories3 comments:

Tech Shankar said...


இதுவரையில் புரோக்ராம் நிரல் எழுத வாய்ப்பில்லாமல் இருந்தாலும் இனியும் தடையில்ல்லை, ஏதேனும் ஒரு நிரல் எழுதும் மொழியைக் கற்றுக்கொண்டு கோடிங் போட்டுக் கலக்குங்க இணையத்தளபதியே

Unknown said...

அண்ணா அப்ப நீங்கள் என்ன படித்திருக்கிறியள் நான் நீங்கள் ஒரு புரோகிறாமர் என்றெல்லோ நினைச்சன்

EMLIN said...

""மீண்டும் இந்த ஐபோனை பற்றியே இங்கு பேசுவதால் கோபித்துக்கொள்ள வேண்டாம்.""
ஐயா கண்டிப்பாக ஐபோனைப் பற்றி தாங்கள் எழுத வேண்டும். இதில் கோபித்துக் கொள்ள என்ன இருக்கிறது. தாங்களுக்கு தெரிகிற, புரிந்து கொள்கிற விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் தானே பதிவு தர்மம்(புதியதாக ஒரு சட்டம் இயற்றலாமோ?)

அன்புடன்
எம்லின்

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்